பழம் சாப்பிடறது முக்கியமில்ல... எந்த பழத்தை எப்படி கழுவணும் தெரிஞ்சிக்கிறது தான் முக்கியம்...

Posted By: Gnaana
Subscribe to Boldsky

பத்து ரூபாய்க்கு, தெருவில் நாட்டுக்காய், கீரை விற்கும் ஏழைப்பெண்ணிடம் பேரம் பேசுகிறோம். இரவைப் பகலாக்கும் வெளிச்சத்தில், குளிரூட்டப்பட்ட நவீன கண்ணாடி கடைகளில், பளபளக்கும் பழங்களை, பேரம் பேசியா வாங்குகிறோம்?

health tips

கூடையைத் தலையில் சுமந்து நடக்கும், ஏழைப்பெண்ணிடம், உடலுக்கு நன்மையான நாட்டு காய்கறிகளை வாங்க, பத்து ரூபாய்க்கு பேரம் பேசிய நாம், பேரம் பேசாமல் நூற்றுக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து வாங்கிய பழங்கள், உடலுக்கு தரும் தீமைகளை அறிவோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆல் சீசன் ஃபுரூட்

ஆல் சீசன் ஃபுரூட்

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்கள், சீசன் காலங்களில் மட்டுமே கிடைக்கும், மற்ற காலங்களில் தேடினாலும் கிடைக்காது. இப்போது? ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா, மாதுளை போன்ற சீசன் பழங்கள் வருடத்தின் எல்லா நாட்களிலும், தடையின்றி கிடைக்கின்றன. குற்றாலம், ஊட்டி கொடைக்கானல் போனால் மட்டுமே, கிடைக்கக்கூடியதாக இருந்தவை, துரியன், ரம்புஸ்டான், மங்குஸ்தான் போன்ற மலைப் பழங்கள். அவை தற்போது எல்லா இடங்களிலும், எங்கும் கிடைக்கின்றன. அதோடு கூட, பெயர் தெரியாத ஏதேதோ வெளிநாட்டுப் பழங்களும், எப்போதும் இங்கே, தடையின்றிக் கிடைப்பதுதான், வேடிக்கை.

பளபளக்கும் பழங்கள்

பளபளக்கும் பழங்கள்

இந்தப் பழங்கள் எல்லாம், கண்களைப் பறிக்கும் பல்புகளின் பளீர் வெளிச்சத்தில், பளபளப்பாக டாலடித்து, நம்மை வாங்கத் தூண்டும். நாமும் வாங்கி விடுவோம், சாப்பிட்ட பின்தான், பாதிப்புகளை உணர்வோம். நகரம், கிராமம் என்ற பேதமின்றி, தெருவுக்கு தெரு, நிறைந்திருக்கும் நவீன பழக்கடைகளில் கிடைக்கும் எல்லாப் பழங்களும், நல்லவைதானா? பார்க்கலாம்.

சுண்டியிழுக்கும் பழங்கள்

சுண்டியிழுக்கும் பழங்கள்

சுவைக்கத் தூண்டும் பளபளப்பான பழங்கள்.

பழங்களின் வரத்து உள்நாட்டையே சார்ந்திருந்த காலத்தில், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் சீசனில் மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. நவீனகால, உலகமயமாக்கலில், இறக்குமதி பழங்கள் எல்லாம், நம் பர்ஸ் நுனிக்கு வந்துவிட்டன. சீசன் பாதிப்பு இன்றி, வருடமுழுவதும், எல்லா நாட்களிலும், எல்லா பழங்களும் கிடைக்கின்றன.

சத்துக்கள் மிக்கதா?

சத்துக்கள் மிக்கதா?

குறிப்பிட்ட காலங்களுக்கு முன்புவரை, விவசாயிகள் பழங்களின் விளைச்சலை அதிகரிக்க, இயற்கை முறைகளையே, கடைபிடித்தார்கள். தற்காலத்தில், செயற்கை உரங்கள், இரசாயன பூச்சிக்கொல்லிகள் இட்டு, பழங்களில் உள்ள சத்துக்களை கெடுத்துவிடுகிறார்கள். இத்துடன் செயற்கை வேதிப்பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும், ஹைபிரிட் எனும் விரைவான விளைச்சல் தரும் கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள். இதனால், பழங்களின் இயற்கைத்தன்மை கெடுகிறது.

விளைவுகள்

விளைவுகள்

பழங்களின் இயற்கையான வாசனை இல்லாமல், சத்துக்கள் குறைந்த ஒரு சக்கை போலவே, கெமிக்கல் பாதிப்புகளுடன், மார்க்கெட்டுக்கு வருகின்றன.

உற்பத்தி செய்யும் சில பழவிவசாயிகளால் இதுபோன்ற பாதிப்புகள் என்றால், இதைவிட மோசமாக தற்காலங்களில், பழங்களில் கலப்படம் செய்கிறார்கள். பழங்கள் பிரெஷ்ஷாகத் தெரியவும், நீர்ச்சத்து வற்றாமல் இருக்கவும், இரசாயனங்களை சேர்க்கிறார்கள். ஏற்கெனவே, இரசாயனங்கள் நிரம்பிய பழங்களில், இன்னும் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், என்னென்ன பாதிப்புகள் தரும்?

ரசாயனப்பூச்சுக்கள்

ரசாயனப்பூச்சுக்கள்

பழங்களைப் பழுக்க வைக்க இரசாயன பூச்சுக்கள்.

பழங்களை இயற்கை முறையிலேயே பழுக்கவைக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை வலியுறுத்தினாலும், வியாபாரிகள் கார்பைடு, பாஸ்பரஸ் போன்ற செயற்கை வேதிகளைப் பயன்படுத்தி, வாழைத் தார்கள், சப்போட்டா, மாம்பழங்கள் போன்றவற்றைப் பழுக்க வைக்கின்றனர்.

இவை உடலில் நச்சுக்களை உண்டாக்கி, தைராய்டு, இரத்த குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. மேலும், புற்று வியாதி, குடல், சிறுநீரக பாதிப்புகள், நரம்புமண்டல கோளாறுகளும் ஏற்படலாம் என எச்சரிக்கின்றன, சுகாதார ஆய்வுகள்.

தர்பூசணியில் ஊசியேற்றம்

தர்பூசணியில் ஊசியேற்றம்

கோடைக்காலங்களில் சக்கைபோடு போடும் தர்பூசணி வியாபாரத்திலும், கலப்படம், அதிக அளவில் இருக்கிறது. விரைவில் பழுக்க வைக்கவும், சிவப்பு வண்ணத்திற்காகவும், இனிப்பு சுவை சேர்க்கவும், தர்பூசணி பழத்தினுள், ஊசி மூலம் சில கெமிக்கல்களை, செலுத்துகிறார்கள். தர்பூசணியை சுவைத்து விட்டு, கைகளைக் கழுவாமல், ஆடைகளில் துடைத்தால், ஆடையில் சிவப்பு வண்ணம் படிந்திருப்பதைக் காணலாம். சில இடங்களில் நடக்கும் இதுபோன்ற மக்கள்விரோத செயல்களில், பாதிக்காமல் இருக்க, பழங்களை சோதித்து வாங்கவேண்டும். செயற்கை நிறமிகள், சருமத்தில் அரிப்பு மற்றும் கிருமி பாதிப்புகளை ஏற்படுத்தி, வயிறு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.

திராட்சையில் இரசாயனக் கலவை

திராட்சையில் இரசாயனக் கலவை

திராட்சைத் தோட்டங்களில், திராட்சைகள் பெருத்து, பளபளப்பாக இருக்க, இரசாயனக் கலவைகளில், கொடிகளில் காய்க்கும் திராட்சைகளை முக்கி வைப்பார்கள். இதன் காரணமாக, திராட்சை சீக்கிரம் பழுத்து, பொலிவாக இருக்கும், ஆயினும், வேதிப் பொருளின் பாதிப்பு, வயிற்று பாதிப்பு, தொண்டை வேதனை, தலைவலி, இரத்தக் கோளாறுகள் போன்ற, பல உடல்நல குறைபாடுகளை, ஏற்படுத்திவிடும்.

ஆப்பிளில் மெழுகு

ஆப்பிளில் மெழுகு

ஆப்பிளின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும், பழம் கெடாமல் இருக்கவும், அதன் தோலில், இயற்கையாகவே மெழுகு சுரக்கும். மேலை நாடுகளில், வியாபாரிகள் பழங்களின் மேலுள்ள தூசுக்களை நீக்க, பழங்களைக் கழுவி துடைத்து, அதன்பின், இயற்கையான மெழுகைத் தடவுவார்கள். பிரேசில் நாட்டு பனை மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும், கார்னபா எனும் உண்ணத் தகுந்த மெழுகே, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், இனிப்புகள், பேக்கரி உணவுகள் போன்றவற்றில், பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், தேன்கூட்டில் உள்ள மெழுகும், ஷெல்லாக் பூச்சிகளின் சுரப்பும், பெட்ரோலியம் ஜெல்லியும், ஆப்பிள் மற்றும் இதர உணவுகளில், பளபளப்பிற்காகத் தடவப்படுகின்றன.

உணவு பாதுகாப்பு உரிமை

உணவு பாதுகாப்பு உரிமை

மேலைநாடுகளில் உள்ளதுபோன்ற, ஒழுங்குமுறை சட்டங்கள் நம் நாட்டில் இருந்தாலும், அவை முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமன்றி, கிராமங்களிலும் பெருகிவரும் உணவு கலப்படத்தைத் தடுக்க, போதுமான கட்டமைப்பு இல்லை, கலப்படத்தைப் பரிசோதிக்க, தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மட்டுமே, உணவு பரிசோதனை மையங்கள் உள்ளன, அதிலும், நுண்ணிய சோதனைகளுக்கு, இங்கே வசதிகள் இல்லை. இதனால், பேராசை கொண்ட வியாபாரிகள், சுதந்திரமாக, நச்சுத்தன்மை மிக்க இரசாயன மெழுகுகளைத் தடவி, பழங்களைப் பளபளப்பாக்குகிறார்கள்.

இதனால், இரத்தத்தில் நச்சு கலந்து, உடல் சோர்வு, வயிற்றுப் பிறட்டல், வயிற்றுப் போக்கு உட்பட கடுமையான உடல்நல பாதிப்புகளும் ஏற்படலாம்.

பழங்களை கழுவும்முறை

பழங்களை கழுவும்முறை

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம், மற்றும் திராட்சைகளை, உப்பு கரைத்த வெந்நீரில் ஊறவைத்து, அலச, இரசாயன பூச்சுகள் நீங்கிவிடும்.

மெழுகு பூசிய ஆப்பிளை, உப்பு கலந்த சூடான வெந்நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடுவது நல்லது. ஆப்பிளை, எலுமிச்சை சாறு, சமையல் சோடா உப்பு கலந்தநீரில், நன்கு அலசியபின், சாதாரண நீரில் சிலமுறை அலசி, அதன்பின் சாப்பிடலாம். இதையும் மீறி, அந்தப் பழங்களை, சாப்பிட மனமில்லை என்றால், விட்டுவிடுங்கள், நமது தேசத்தில், கலப்படம் இல்லாத ஏராளமான பழங்கள், இன்னும் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health tips
English summary

Ways To buy and Wash Pesticides Off Fruits

Unless you’re buying exclusively organic fruit and vegetables and here’s why we should all be striving to, thoroughly washing the produce you buy is pretty important.
Story first published: Monday, April 2, 2018, 20:00 [IST]