For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்!!

மூட்டு வலியை குறைக்க நீங்கள் வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hemalatha
|

மூட்டுவலி இன்று 20 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம்.

குறிப்பாக நாம் உண்ணும் அதிக மசாலா உணவுகள், துரித உணவுகள் தசைகளில் அதிக வறட்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் மூட்டுகளைப் பாதுகாக்கும் சுற்றியுள்ள தசை நார்கள் வலுவிழந்து இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து வீக்கமடைந்து வலியை உண்டாக்குகிறது.

Foods and ayurvedic remedies to reduce the knee pain

இந்த மூட்டு வலிக்கு நாம் சாப்பிடும் உணவும் காரணமாகும். குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும்போது உடலில் வாதம் அதிகமாகி, நரம்பு பாதிப்புகள், மூட்டு மற்றும் வாத நோய்கள் ஏற்படுகின்றன.

நல்ல பயிற்சிகளால் மற்றும் உணவுகளாலும், நமது பாரம்பரிய நாட்டு வைத்தியங்களாலும் நிரந்தரமாக மூட்டு வலியிலிருந்து விடுபடலாம். அவற்றைப் பற்றி மேலும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைத்தியம்- 1

வைத்தியம்- 1

ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் மாட்டு நெய், அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவையை தினமும் இரவில் குடித்தால் வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

வைத்தியம்- 2

வைத்தியம்- 2

இது மிக எளிதான வைத்தியமுறை வெதுவெதுப்பான பாலுடன் அரை ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் செரிமான சக்தியும் துரிதமாக நடக்கும். வாதமும் கட்டுப்படும்.

 வைத்தியம்- 3 :

வைத்தியம்- 3 :

5 ஸ்பூன் இஞ்சிச் சாறு, அரை ஸ்பூன் சீரகம், தலா ஒரு சிட்டிகை கல் உப்பு, கருப்பு உப்பு, சுக்குப்பொடி மற்றும் கரு மிளகுப் பொடி ஆகியவற்றை வெண்ணெயுடன் ஒன்றாக கலந்து தினமும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவை விரைவில் குறைகிறது

வைத்தியம் - 4 :

வைத்தியம் - 4 :

வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். 10 நிமிடங்கள் ஐஸ் கட்டி ஒத்தடம் வையுங்கள். முதலில் ஆரம்பிக்கும்போது ஒரு நாளுக்கு ஒருமுறை என படிப்படியாக ஒரு நாளைக்கு நான்கு முறையாவது ஐஸ் கட்டி ஒத்தடம் வைக்கும்போது மூட்டு வலி சில நாட்களில் குறைந்துவிடும்.

வைத்தியம்- 5 :

வைத்தியம்- 5 :

நீரில் சுக்கை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது சுடு நீரில் இஞ்சியைதட்டிப் போட்டு ஆறிய பின் குடிக்கலாம். தினமும் மோர் காலையில் மோர் குடிப்பதால் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.

வைத்தியம்- 6

வைத்தியம்- 6

ஒரு ஸ்பூன் கறுப்பு எள்ளை சிறிது நீரில் இரவு முழுதும் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை குடித்தால் மூட்டு வலி குறையும்,. உடலுக்கு தேவையான கால்சியம் சத்தும் கிடைக்கும்.

வைத்தியம்- 7

வைத்தியம்- 7

தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதிக் கற்பூரத்தை பொடியாக்கி போடுங்கள். கற்பூரம் முழுவதும் கரைந்தவுடன் அதனை மூட்டுகளில் நன்றாக தேய்த்து வந்தால் வலி குறையும்.

வலி தீர்க்கும் கசப்பு காய்கள் :

வலி தீர்க்கும் கசப்பு காய்கள் :

பாவற்காய், சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள் வாதத்தை போக்குபவை. அவற்றை தினமும் அல்லது வாரம் 4 நாட்களாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட் உணவுகள் :

கார்போஹைட்ரேட் உணவுகள் :

கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடக்கத்தான் கீரை :

முடக்கத்தான் கீரை :

முருங்கைக் கீரையும் முடக்கத்தான் கீரையும் தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியிலிருந்தும், வாத நோய்களிலுருந்தும் உங்களை நிரந்தரமான காப்பாற்றிக் கொள்ளலாம்.

பால் உணவுகள்

பால் உணவுகள்

பால், தயிர், பன்னீர், சீஸ் போன்ற உணவுப் பொருகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை மூட்டு இணைப்புகளில் இருக்கும் வலியைப் போக்குகிறது.

மீன் :

மீன் :

பருப்பு, மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை கட்டாயம் தினமும் சேர்க்க வேண்டும். புரத உணவுகள் தசை நார்களை வலுப்படுத்துகிறது. கொள்ளுப் பயிறை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் உடல் பருமனால் வரும் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.

 பாசிப்பருப்பு சூப் :

பாசிப்பருப்பு சூப் :

பாசிப்பருப்பை பூண்டு சேர்த்து வேக வைத்து சூப்பாக செய்து அதில் மிளகு தூவி குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது வலியைப் போக்குகிறது. வாத சம்பனத பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.

பயிற்சி :

பயிற்சி :

தினமும் உடற்பயிற்சி அல்லது நடக்க வேண்டும். இதனை தவறாமல் செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

தினமும் மேற்கொள்ளும்போது மூட்டைச் சுற்றியும் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் செல்கள் ரிப்பேர் செய்து மீண்டும் புத்துயிர் பெறும். தசைகள்வலுப்படுவதால் மூட்டு வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.

உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் :

உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் :

போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தினமும் உணவு சமைக்க வேண்டும். பால், சாதம், மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை :

செய்ய வேண்டியவை :

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். இதனால் மூட்டுகளில் உண்டாகும் அழுத்தம் தவிர்க்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும். மூட்டுகளில் வலி இருக்கும்போது அதிகமாக மாடிப்படி ஏறுதல் தவிருங்கள். கீழே அமர்ந்து சாப்பிடுதல் ( கவனிக்க - மூட்டு பாதிப்பு இருப்பவர்கள் மட்டும்) போன்றவற்றை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods and ayurvedic remedies to reduce the knee pain

Foods and ayurvedic remedies to reduce the knee pain
Story first published: Tuesday, January 2, 2018, 13:36 [IST]
Desktop Bottom Promotion