For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சப்பா...இப்பவே கண்ணக்கட்டுதே...! என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க..? புத்துணர்ச்சி வேண்டுமா..? இதோ

சோர்விற்காக பலவிதமான மாத்திரைகள், டானிக்ஸ், என எல்லாத்தையும் சாப்பிட்டும் பாத்தாச்சா..? பலன் எதுவும் கிடைக்கலையா..! கவலையை விட்டு தள்ளுங்கள்,இதை சமாளிக்க நம்ம வீட்டு வைத்தியமே போதும். என்னது வீட்டு வ

|

இன்னைக்கு ஆஃபீஸ்ல செம்ம வேல...! ரொம்ப டயர்டா இருக்க...' இப்படினு தினமும் உணருறீங்களா..? இல்லைனா, ஆஃபீஸ் போவதற்கு முன்பே ரொம்ப சோர்வா இருக்கீங்களா..? இந்த சோர்வால் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியவில்லையா..? இதற்காக பலவிதமான மாத்திரைகள், டானிக்ஸ், என எல்லாத்தையும் சாப்பிட்டும் பாத்தாச்சா..? பலன் எதுவும் கிடைக்கலையா..!

health

கவலையை விட்டு தள்ளுங்கள்,இதை சமாளிக்க நம்ம வீட்டு வைத்தியமே போதும். என்னது வீட்டு வைத்தியதில்லையே இதற்கு தீர்வு இருக்கிறதா..!! ஆமாங்க...பல அற்புதமான வீட்டிலையே தயாரிக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் பானங்களை சாப்பிட்டாலே போதும்ங்க. என்னென்ன பானங்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலா...? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு ஏன்?

சோர்வு ஏன்?

பொதுவாக சொல்லப்போனால் இந்த சோர்வு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களை சொல்லி கொண்டே போகலாம். அதில் ஒன்று ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளாமல் இருத்தலே. என்னமா...இப்படி சொல்லிப்புட்ட...! நான்லா தினமும் நல்லா கட்டு கட்டுன்னு கட்டுற...அப்படியும் இப்படிதாம சோர்வாவே இருக்கு..' அப்படினு சொல்லறீங்களா..? நாம தினமும் எவ்வளவு சாப்பாடு சாப்பிடறோம், என்பது முக்கியமில்லை. எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நாம் உண்ணும் உணவில் உள்ளது என்பதே முக்கியம். ஆதலால், உண்ணும் உணவை அதிகமாக சாப்பிட்டாலே உடலுக்கு எனர்ஜி கிடைக்கும்னு நினைக்கிறதை விட்டுட்டு அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவு பொருட்களை உண்ண தொடங்குங்கள்.

சரி, வாங்க புத்துணர்ச்சி கொடுக்கும் பானங்களை பற்றி இனி பார்க்கலாம்.

# ஆப்பிள்,கேரட்,இஞ்சி

# ஆப்பிள்,கேரட்,இஞ்சி

இந்த மூன்று உணவு பொருட்களின் கலவை விடையே புத்துணர்ச்சி. ஆமாங்க...ஆப்பிளில் எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்களை நாள் முழுவதுமே மிக ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகிறது. மேலும் கேரட் மற்றும் இஞ்சி உடலுக்கு அதிக புத்துணர்ச்சியை கொடுக்க உதவுகிறது. இந்த எனர்ஜியை பெற , 1 ஆப்பிள், 2 கேரட்,சிறிதளவு இஞ்சி சாறு ஆகியவற்றை எடுத்து கொண்டு அதனை நன்கு அரைத்து ஜீஸ் ஆக தினமும் குடிக்கலாம்.

மேலும் இந்த ஜூஸ் உங்களில் தொப்பையையும் குறைக்க வழி செய்கிறது.

#அண்ணாச்சி மற்றும் வெள்ளரிக்காய்

#அண்ணாச்சி மற்றும் வெள்ளரிக்காய்

நமக்கு பொதுவாகவே சோர்வு என்பது எப்போது ஏற்படும்னு தெரியுமா..? நமது உடலில் நீர் சத்து குறையும் போதே நமக்கு அதிக சோர்வாக இருக்கும். எனவே அதிக நீர் சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை உண்டாலே இந்த சோர்வெல்லாம் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அதற்கு ,1 கப் அண்ணாச்சி,1 கப் வெள்ளரிக்கா, சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். இந்த ஜூஸை சோர்வாக இருக்கும் போதெல்லாம் குடித்தால் சோர்வு பறந்து ஓடிவிடும்.

# தேன்,எலுமிச்சை,இஞ்சி

# தேன்,எலுமிச்சை,இஞ்சி

உடலானது அதிக புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்,அதற்கு ஒரு சிறந்த ஜூஸ் இதுதான். மிதமான தண்ணீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு , 1 டீஸ்பூன் தேன், சிறிதளவு இஞ்சியை நசுக்கி அதன் சாற்றை மட்டும் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும். இதனை தினமும் வெறும் வயிற்றிலே டீ,காபிக்கு பதிலாக குடித்து வந்தால் நீங்கள்தான் உங்கள் ஆபீஸ்ஸிலே மிக புத்துணர்ச்சியான ஒருவராக இருப்பீர்கள். ஏனென்றால், இதில் உள்ள அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து நாம் எப்போதுமே உற்சாகமாக இருக்க செய்கிறது.

#செம்பருத்தியே புத்துணர்ச்சி

#செம்பருத்தியே புத்துணர்ச்சி

நாள் முழுக்க சோர்வில்லாம் கலகலப்பாக இருக்க வேண்டுமா...? இதற்கு தீர்வு நம்ம செம்பருத்தி தாங்க..! செம்பருத்தியானு...ஆச்சரியமா பாக்குறீங்களா..? ஆமாங்க இந்த செம்பருத்தியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செம்பருத்தி பயன்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உற்சாகமூட்டும் ஜூஸை குடிக்க வேண்டும் என்றால் சுலபமே...' 1 கப் செப்பருத்தி இதழ்கள்,சிறிதளவு இஞ்சி, ஆகியவற்றை சேர்த்து 4 1/2 கப் தண்ணீரில் மிதமான சூட்டில் 20 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். பின்பு இதனை வடிக்கட்டி எடுத்து கொண்டு அதனுடன் இனிப்பிற்காக சிறிதளவு தேன் சேர்த்து கொள்ளலாம். இந்த ஜூஸை நீங்கள் சோர்வாக, எனர்ஜியின்றி தோன்றும் போதெல்லாம் குடியுங்கள். நிச்சயம் புத்துணர்ச்சியோடு உணர்வீர்கள்.

# பப்பாளி லஸ்ஸி

# பப்பாளி லஸ்ஸி

1 கப் பப்பாளி, 1/2 கப் தயிர், 1/2 கப் பால், சிறிதளவு ஏலக்காய், இனிப்பிற்கு தேவையனை அளவு தேன் சேர்த்து கொள்ளவும்.பின்பு இதனை நன்கு மிஸ்சியில் அரைத்து கொள்ளவும். இந்த பானத்தை தினமும் காலை அல்லது மாலை வேலையில் குடித்து வந்தால் உடலில் சோர்வு உங்களை அண்டாது. ஏனென்றால், பப்பாளியில் உள்ள அதிக நார்சத்து மற்றும் வைட்டமின் சி

உங்கள் மூளையை உற்சாகம் ஊட்டி சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது. மேலும் இந்த ஜூஸ் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சிறந்த நிவாரணி.

#தர்பூசணி

#தர்பூசணி

தர்பூசணியில் அதிக நீர் சத்து உள்ளது. இந்த நீர் சத்து உங்கள் மூளையை தூங்கவிடாமல் சுறுசுறுப்பாக வைக்க செய்கிறது. 1 கப் தர்பூசணி சாறு , 2 டீஸ்பூன்ஸ் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கி கொள்ளவும்.பின்பு அத்துடன் தேவையான அளவு தேனை இனிப்பிற்கு சேர்த்து கொள்ளலாம். அதன் மேல் கொஞ்சம் நறுக்கிய புதினாவை தூவி விட்டு குடித்து வந்தால் சோர்வு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

daily refreshing drinks as home remedies

Feeling very tired...? body battery drained..? solution is refreshing drinks by using home remedies
Story first published: Tuesday, July 17, 2018, 12:32 [IST]
Desktop Bottom Promotion