For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாக வீட்டிலேயே எதாவது சிம்பிள் மருந்து இருக்கா?

வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை குணப்படுத்துவதற்கான மிக அருமையான எளிமையான வீட்டு வைத்திய முறைகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன்பெறுங்கள்.

By Mahi Bala
|

வாயில் புண் வந்தாலே பெரியோர்கள் சொல்வார்கள். வயிறு புண்ணாகியிருக்கிறது. அதனால் தான் வாயில் புண் வந்திருக்கிறது என்று. இதை தான் நாம் இப்போது அல்சர் என்று கூறுகிறோம். இதுதான் உண்மையான காரணம். வயிற்றில் புண்ணாகி இருந்தால் தான் அதன் வெளிப்பாடாக வாய்ப்புண் உண்டாகிறது. சரி.

causes and home remedies for stomach and mouth ulcer

இப்போது வயிற்றிலும் புண் இருக்கிறது. அன் வெளிப்பாடாக வாயிலும் புண் வந்துவிட்டது. இதற்கென மெனக்கெட்டு டாக்டரிடம் போகாமல் நம்முடைய வீட்டிலேயே நம்முடைய முன்னோர்களின் வழியான உணவு மருந்து என்ற வழியில் எப்படியெல்லாம் சரி செய்து கொள்ளலாம் என்று இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்சர்

அல்சர்

இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட இரண்டு மில்லியன் பேர் அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் மிக முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய மாறிவிட்ட உணவுப் பழக்கங்களும் வாழ்க்கை முறையும் தான். நம்முடைய வயிற்றுக்குள் அமிலங்கள் சுரந்து கொண்டிருக்கும். அந்த சமயங்களில் குடலில் உணவு ஏதும் இல்லாமல் இருந்து அந்த அமிலங்கள் குடலின் சுவரை அரிக்கத் தொடங்கிவிடும். அதுவே புண்ணாகி அல்சராகிவிடுகிறது.

MOST READ: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்

வீட்டு வைத்தியம்

வீட்டு வைத்தியம்

பொதுவாக அல்சர் என்னும் வயிற்றுப்புண்ணை அதற்குரிய மருத்துவ முறைகளால் 5 சதவீதம் தான் கட்டுப்படுத்த முடியும். வயிற்றுப் புண்ணை முற்றிலும் குணப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மிக அடிப்படையாகச் செய்ய வேண்டியது உங்களுடைய உணவுப் பழக்கத்தை மாற்றுவது மற்றும் சின்ன வீட்டு வைத்திய முறைகளைக் கடைபிடித்தாலே போதும். அல்சர் காணாமல் போய்விடும்.

அது என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

அல்சர் வந்தால் அதன் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதிகளில் தான் ஏற்படும். நெஞ்சின் மேலிருந்து கீழ்வரை எரிச்சல் ஏற்படும்.

பசியின்மை ஏற்படும்.

அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும்.

அடிக்கடி வயிறு வலிக்கும். குறிப்பாக சாப்பிட்டு முடித்ததும் வலி ஏற்படும். குறைவாக சாப்பிட்டாலே வயிறு உப்பிய உணர்வு தோன்றும்.

வாந்தியும் குமட்டலும் ஏற்படும்.

வாய்ப்புண் வரும். இவையெல்லாம் தான் உங்களுக்கு அல்சர் இருபு்பதற்கான அறிகுறிகளாகத் தென்படுகின்றன. இவற்றை சரிசெய்ய வீட்டிலேயே என்ன செய்யலாம்?

அகத்திக்கீரை சூப்

அகத்திக்கீரை சூப்

அல்சரை குணப்படுத்தும் மிகச்சிறந்த மருந்துகளில் ஒன்று தான் அகத்திக்கீரை சூப். இதிலுள்ள கசப்புத் தன்மை காரணமாக நாம் பெரிதாக விரும்புவதில்லை. குழந்தைகளுக்கு இந்த சூப் கொடுக்கும்போது வேகவைத்த பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்போடு சேர்த்து சூப் செய்யுங்கள். பெரியவர்கள் சீரகம், மிளகு சேர்த்தால் ஓரளவு கசப்புத் தன்மை குறைந்துவிடும். தினமும் ஒரு டம்ளர் அகத்திக்கீரை சூப் குடியுங்கள். அல்சர் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். பூசணிக்காயிலும் இதே முறையைக் கையாண்டு ஜூஸாகக் குடிக்கலாம். ஆனால் ஜூஸில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. உப்பு, சீரகப்பொடி, மிளகுப்பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் சூடு

உடல் சூடு

வாய் மற்றும் வயிற்றுப் புண் உண்டாக மிக முக்கிய காரணமே அதிகப்படியான உடல் சூடு தான். அதனால் மேலும் சூட்டை அதிகரிக்கும் உணவுகளான பொரித்த கோழி இறைச்சி, ஆல்கஹால் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

MOST READ: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

விளக்கெண்ணெய் குளியல்

விளக்கெண்ணெய் குளியல்

புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தலைக்கு நல்லெண்ணெய் அல்லது நல்ல சுத்தமான விளக்கெண்ணெய் தேய்த்து, வெந்நீது குளியல் எடுக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் மட்டும் ரசம் சாதம் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அன்றைய நாளில் குளித்ததும் தூக்கம் வரும். ஆனால் பகலில் தூங்கக் கூடாது.

மணத்தக்காளி

மணத்தக்காளி

மணத்தக்காளி வயிற்றுப்புண்ணை விரைவில் ஆற்றும் சக்தி கொண்டது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த மினகுத் தக்காளி கீரையை அரைத்து சாறெடுத்து, காலையில் வெறும் வயிற்றில் அரை டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் போதும். அல்சர் பறந்து போகும்.

MOST READ: ராகி யாரெல்லாம் சாப்பிடலாம்? காலை நேரத்தில் சாப்பிட்டால் என்ன ஆகும்?

ரிபலா சூரணம்

ரிபலா சூரணம்

மேற்கண்ட அன்றாடப் பழக்க வழக்கங்களோடு தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் திரிபலா சூரணம் அல்லது மாத்திரையை வெந்நீரில் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் வயிற்றுப் புண் ஆறும். அதேசமயம் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது மோர் மற்றும் இளநீர் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

causes and home remedies for stomach and mouth ulcer

here we are give amazing tips and home remedies for stomach and mouth ulcer
Story first published: Thursday, October 4, 2018, 16:10 [IST]
Desktop Bottom Promotion