TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
அடிக்கடி உச்சா வருதா? அப்ப இதுதான் காரணம்... பூண்டை பச்சையா சாப்பிடுங்க சரியாகிடும்...
நாள் முழுவதும் நிறைய தண்ணீரைப் பருகுவதன் மூலம் தொற்று பாக்டீரியாக்களை வெளியேற்றுவது சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகளை குணப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
சிறுநீர்ப் பாதையின் (சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய்) எந்தவொரு பகுதியிலும் நுண்ணுயிர்கள் பெருகும் பொழுது சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (UTI) ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமே சிறுநீரகத்தில் ஏற்படுகிற நுணணுயிர் தொற்றுக்கள் தான். அவற்றை எப்படி அறிந்து கொள்வது என்பது பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.
நோயெதிர்ப்பு மண்டலம்
அவை ஒரு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மூலமாக ஏற்படலாம் அல்லது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவற்றால் ஏற்படலாம். இந்த நோய்த்தொற்றுகள் உடலில் பொதுவான அசௌகரியத்தைக் கொண்டு வருவதன் மூலம் தினசரி நடவடிக்கைகளை செயலிழக்கச் செய்யக்கூடிய லேசான அல்லது கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
MOST READ: கல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்?
என்ன செய்யலாம்?
இதை இயற்கையாகவே குணப்படுத்தமுடியுமா? சில கேஸில் மருத்துவக் கவனிப்பு தேவையென்றாலும், பெரும்பாலான கேஸ்களுக்கு மாற்று சிகிச்சைகள் மூலமாகவும் சிகிச்சையளிக்கலாம். UTI களின் மிக முக்கியமான குணங்களையும், அதற்கான சில வீட்டு வைத்தியங்களையும் பற்றி தெரிந்து கொள்ள இந்தக்கட்டுரையைப் படியுங்கள்.
நோய்த்தாக்கத்தை ஏற்படுத்துவது எது?
உடலில் நோய்க்கிருமிகள் சிறுநீர் வடிகுழாய் வழியாக நுழையும்போது இந்த வகையான தொற்று ஏற்படுகிறது.
சிறுநீர்ப்பாதையால் இத்தகைய ஊடுருவல்களை தடுக்க முடியும் என்றாலும் , சில சமயங்களில் அதன் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படலாம். ஆகையால், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், மற்றும் பூஞ்சை ஆகியவை சிறுநீர்ப்பை, சிறுநீர் வடிகுழாய் அல்லது சிறுநீரகங்களில் ஊடுருவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
காரணிகள்
• சரியற்ற தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்கள்
• உங்கள் பிறப்புறுப்புகளின் மீது எரிச்சலூட்டிகளை பிரயோகித்தல்
• சிறுநீர் கழிப்பை அடக்கி வைத்தல்
• பாதுகாப்பற்ற உடலுறவு
• டயப்ரம் பயன்பாடு
• சிறுநீர் வடிகுழாயில் தோன்றும் அசாதாரணங்கள் அல்லது காயங்கள்
• சமீபத்திய சிறுநீரக நடைமுறைகள்
MOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே
தொற்றுநோயின் அறிகுறிகள்:
UTI -களின் அறிகுறிகள் எப்போதுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. சில நேரங்களில் மிகவும் மைனராக இருப்பதால் கவனிக்காமல் போய்விடுகிறார்கள். எனினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீங்கள் அறிகுறிகளை உணரலாம்:
தொடர்ந்து சிறுநீர் கழிக்கும் தேவை
• சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு
• சிறிய அளவிலான சிறுநீர் வெளியேற்றம், துர்நாற்றம்
• அடிவயிற்றில் வலி
• சிறுநீரில் இரத்தம்
• மிதமான காய்ச்சல் மற்றும் குளிர்
• களைப்பு
விரைவாக எப்படி குணப்படுத்துவது:
இந்த வகையான நோய்த்தொற்றுகளை குணப்படுத்த உங்கள் நடைமுறை வாழ்க்கை பழக்கவழக்கங்களை மற்ற வேண்டியும் மூலிகைகள் அல்லது மசாலாக்கள் கொண்ட உணவுமுறைகளை பின்பற்ற வேண்டியுமிருக்கும் . அவைகளை ஒன்றாகக் கலக்கும் போது இந்த நோயைக் குணப்படுத்த உதவும் எளிய மற்றும் இயற்கையான தீர்வு உங்களுக்குக் கிடைக்கும்.
நிறையத் தண்ணீர் குடியுங்கள்
நிறையத் தண்ணீர் குடிப்பது யூடிஐ-யை கட்டுப்படுத்த உதவும். இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது, சிறுநீர்ப்பாதையை சுத்தமாக்குகிறது, உங்கள் உடலில் பாக்டீரியாவின் செறிவைக் குறைக்கிறது.
• ஒரு நாளைக்கு 6 முதல் 8 க்ளாஸ் தண்ணீரை தனியாகவோ அல்லது தேநீர் குடிப்பதன் மூலமாகவோ சேர்த்துக்கொள்ளவும்.
சர்க்கரையும் ஆல்கஹாலும்
• உங்களை இந்நோயின் தாக்கத்திலிருந்து விரைவாக மீட்டெடுக்க சர்க்கரை மற்றும் மது நுகர்வை முடிந்தவரை குறைப்பது முக்கியம் ஏனெனில் இந்த இரண்டுமே உங்கள் சிறுநீரக அமைப்புக்கு எரிச்சலூட்டும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.
வெப்ப அழுத்தங்கள்
இடுப்பு மண்டலத்தில் வலியைக் கட்டுப்படுத்துவதற்கு வெப்ப அழுத்தங்கள் சிறந்த வழியாகும். இது உங்கள் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் வீக்கங்களை குறைக்கிறது.
• நீங்கள் அசௌகரியத்தை அனுபவித்தால், சூடான நீரில் ஒரு துணியை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் விண்ணப்பிக்கவும்.
MOST READ: உங்க மூச்சுக்குழாயும் சளி அடைக்காம இப்படி சுத்தமா இருக்கணுமா? அப்போ இத சாப்பிடுங்க...
பருத்தி உள்ளாடை
பிறப்புறுப்பில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை, பாக்டீரியா வளர்ச்சிக்கு ஒரு சரியான சூழல். எனவே, அதிக காற்றோட்டம் கிடைக்கும்படியான பருத்தி உள்ளாடைகளை தேர்வு செய்வது முக்கியம்.
முள்ளங்கி சாறு குடிக்கவும்:
முள்ளங்கி சாறு என்பது சிஸ்ட்டிஸ் அல்லது எந்தவகையான சிறுநீர் பாதை நோய்த்தொற்று நோயையும் குணப்படுத்தும் இயற்கை தீர்வாகும்.அழற்சிஎதிர்ப்பு மற்றும் பாக்டீரியாஎதிர்ப்பு கலவைகளைக் கொண்டிருக்கும் இவை UTI நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்த சிறந்தவை.
• ஒரு நாளைக்கு 2 கிளாஸ் முள்ளங்கி சாறு குடிக்கவும்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீர், அதன் ஆண்டிபயாடிக் மற்றும் டையூரிடிக் பண்புகள் காரணமாக தொற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கும். இது, உங்கள் சிறுநீர்ப் பாதையை சுத்திகரித்தல், சிறுநீரின் pH -ஐ ஒழுங்குபடுத்துதல் மற்றும் வைரஸ்கள், பாக்டீரியாக்களை வெளியேற்றுதல் போன்றவற்றிற்கு உதவுகிறது.
• ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கிளாஸ் தேங்காய்த் தண்ணீரைக் குடியுங்கள் .
சமைக்காத பூண்டு
பூண்டு, ஆன்டி- பாக்டீரியா மற்றும் ஆன்டி- ஃபங்கல் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது, இவை UTI தொற்று நோயைக் குணப்படுத்த உதவுகிறது. சமைக்கப்படும் போது அதன் பண்புகள் இழக்கப்படுவதால் பச்சையாக சாப்பிடுவது நல்லது.
• ஒரு நாளைக்கு 2 முதல் 3 பூண்டு பற்களை பச்சையாக உண்ணுங்கள்.
இறுதியாக, நீங்கள் ஏற்கனவே பெற்ற சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகளை கவனிக்கவும். அவைகள் பொதுவானவையாகவே இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் தோற்றத்தை இன்னும் திறம்பட கவனிப்பது இந்நோய்க்கு எளிதில் சிகிச்சையளிப்பதைத் தீர்மானிக்க உதவும்.