Latest Updates
-
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம்
சாப்பிட்ட உடனே நாக்கு எரியுதா?... அதுக்கு நீங்க சாப்பிடற மசாலா காரணமில்ல... இதுதான் காரணம்...
வாயின் எரிச்சல் நோய் என்பது ஒருவர் தனது வாய் பற்றி எறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய புண். இது அதிகமான மசாலாப் பொருட்களை உண்பதால் ஏற்படாது.
வாயின் எரிச்சல் நோய் என்பது ஒருவர் தனது வாய் பற்றி எறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய புண். இது அதிகமான மசாலாப் பொருட்களை உண்பதால் ஏற்படாது.

மிகவும் சூடான உணவை உண்பதாலோ அல்லது குடிப்பதாலோ ஒருவருக்கு புழுக்கமான உணர்ச்சி ஏற்படுகிறது. இது நாக்கு, வாயின் மேற்பகுதி, ஈறுகள் மற்றும் தொண்டையில் ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கும்.
இந்த நிலையானது ஒரு நபருக்கு மனத் தளர்ச்சி, பசியின்மை மற்றும் தூக்கம் கெடுதல் போன்ற இன்னல்களைத் தேடித்தரும். மேலும் இது தொண்டையில் பிரண்டுகிற உணர்ச்சியும், மயக்கமான நிலை, துவர்ப்பு சுவை மற்றும் வேதனையையளிக்கும். இந்நோய் மாதவிடாய் நின்ற பெண்களிடையே மிகவும் கணிசமாக இருக்கிறது.

வாய் எரிச்சலுக்கான காரணங்கள்:
எரியும் உணர்வின் அறிகுறிகள் பன்முகத்தன்மையுடையவையாகும் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பல அம்சங்கள் உள்ளன. அவற்றுள் பின்வருவன ஒரு சில முக்கியமான சாத்தியங்கள் ஆகும்.

பல் சுகாதாரம்
பல் சுகாதரம் முகுந்த முன்னுரிமை கொண்டதும், அடிக்கடி பரிசோதிக்க வேண்டியதுமானது. சில தீவிரமான பல் நோய் உங்களை எரியும் வாய் புண்ணிற்கான அறிகுறிகலான வாய் புண், வறட்சி மற்றும் வாய் அல்சர் ஏற்படுத்தும். நீண்ட காலத்திலேயே தீவிரத்தன்மையை எதிர்கொள்ளாமல், வாய்வழி சுகாதாரம் பராமரிப்பது மிகவும் முக்கியம்.

ஊட்டச்சத்து குறைபாடுகள்:
அதிக ஊட்டச்சத்து உட்கொள்ளல் இது போன்ற மோசமான நிலைமைகளில் இருந்து உங்களை விலகி வைக்கும். வைட்டமின்கள் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் பற்றாக்குறை நிச்சயமாக எரியும் வாய் நோயின் அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்.

நாள்பட்ட நோய்கள்:
நீரிழிவு மற்றும் தைராய்டு மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் வாய் எரியும் உணர்வுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றன.

ஒவ்வாமை:
சில உணவு பொருட்கள் பலருக்கு ஒவ்வாமையை அளிக்கும். இதனை அறியாமலேயே உண்பவர்கள் வாய் எரிச்சல் உண்டாகலாம்.

ஹார்மோன் சமநிலையற்ற தன்மை:
பலர் தீவிர ஹார்மோன் சமநிலையின்மைக்கு ஆளாகுகின்றனர். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் நின்ற சமயத்தில் சமநிலையின்மையை எதிர்கொள்ளும்போது வாயில் அதிக உமிழ்நீர் சுரக்கும். இது வாயில் உடனடி விளைவை ஏற்படுத்துகிறது.

மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்:
கதிர்வீச்சு மற்றும் வேதியியல்(Chemo) சிகிச்சை போன்ற சிகிச்சைகள் எரிவதை உணர்த்துகின்றன. சில மருந்துகளும் இதனை தூண்டுகிறது. எனவே மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.

வாய்வழி கிருமிகள்:
சில நேரங்களில் மவுத்வாஷ் நன்மை தருவதாக இல்லை. இதேபோல் அமில திரவங்கள் உட்கொள்ளல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையாலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பல் கிளிப்புகள், தளர்வான பொருத்தம் மற்றும் கடினமாக துலக்குதல் இவை வாயில் திசுக்கள் கிழிவதற்கும், எரிந்த உணர்ச்சிக்கும் வழிவகுக்குகிறது.

இதன் அறிகுறிகள்:
மற்ற கடுமையான நோய்கள் போன்றே வாய் எரிச்சல் நோயும் சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். சரியான நேரத்தில் கண்டறிந்தால் எளிதில் சுகம் பெறலாம். பின்வருபவை ஒரு சில முக்கிய அறிகுறிகள்,
• சுவை இழப்பு என்பது பொதுவான அறிகுறியாகும், இது எரியும் நோயின் அறிகுறியைக் குறிக்கிறது.
• எரியும் நோயானது முதலில் உங்கள் நாக்கில் ஏற்படும் தொடங்கும் மற்றும் பின்னர் உதடுகள், ஈறுகள், அண்ணம், தொண்டை என முழு வாயும் பாதிக்கபடுவது ஒரு அறிகுறியாகும்.
• தீவிர வறட்சி போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு உடல் நீரிழப்பு ஏற்படுத்தும்.
• சாதாரணமான சுவையை கசப்பாக மற்றும் அமிலமாக மாற்றுகிறது.
• சில நேரங்களில், இந்த அறிகுறிகள் ஏற்படுத்தும் மற்றும் நாளாக நாளாக அது மறைந்துவிடும். எந்த சிகிச்சையும் செய்யாமலே மறைந்து போகலாம்.ஆனால் வாயில் ஏதாவது இயற்கைக்கு மாறான நடத்தை ஒன்றைக் கண்டறிந்தால் பல்மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
• இதேபோல் சிலர் நீண்ட காலத்திற்கு வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம், எனவே இந்த விஷயத்தில் தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது சரியான நேரத்தில் ஒரு பல் மருத்துவரிடம் ஆலோசிக்கவும், பொருத்தமான சிகிச்சைக்கு செல்லவும்.

எரியும் வாய் நோய்க்கான சிகிச்சைகள்:
எந்த காரணத்தினால் நீங்கள் வாய் எரிச்சல் நோய்க்கு ஆளானீர்கள் என்பதை கணிப்பது உங்களுக்கு சிரமாக இருக்கலாம் ஆனால் பல்மருத்துவருக்கு கிடையாது. அவர்களால் உங்களை பரிசோதித்து சரியான தீர்வை தர முடியும். தீவிரமான நோய் தாக்குதல் கடுமையானதாக இருந்தால் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். சிண்ட்ரோமிலிருந்து விடுபட கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிலவற்றை பின்பற்ற வேண்டும்.

செய்ய வேண்டியவை
• புகைப்பிடித்தலை தவிர்த்தல்
• அமில பானங்கள் மற்றும் ஆல்கஹால் தவிர்த்தல்
• உணவுமுறை சரிசெய்தல்
• அதிக நீர் அருந்துதல்
• வைட்டமின்கள் அதிக அளவில் சேர்த்து கொள்ளுதல்
• பல் துலக்குதல் நுட்பத்தை அறிந்து சரிசெய்தல்
• வெவ்வேறு சுவையற்ற மற்றும் லேசான பற்பசையை முயற்சி செய்தல்
• சூடான - காரமான உணவுகளை தவிர்த்தல்



Click it and Unblock the Notifications
