Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உங்க உடம்புல ஹார்மோன் பிரச்சினை ஏற்படுதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது? இதோ அறிகுறிகள்
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், பெண்களுக்கு அதிகப்படியான இரத்தப் போக்குடன், எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், பெண்களுக்கு அதிகப்படியான இரத்தப் போக்குடன், எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கும். ஆண்களுக்கு என்றால் பாலுணர்ச்சி குறைவாகவும், விரக்தி, விந்தணுவின் உற்பத்தி குறைதல் மற்றும் பல பிரச்சனைகள் உள்ளன.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் பல பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஒவரேரியன் சின்ரோம் (Polycystic Ovarian Syndrome) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சனை இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் குழந்தையின்மை போன்ற மிக பெரிய பிரச்சனைகள் உருவாகின்றன. இவை அனைத்திற்கும் ஹோர்மோன் செயல்பாடுகள் சரியாக இல்லாததே காரணம். சில ஹோர்மோன் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.

ஹார்மோன் என்றால் என்ன?
ஹார்மோன்கள் உடல் மற்றும் நலன்களை ஒழுங்குபடுத்தும் வேதிப்பொருட்கள் ஆகும், ஹார்மோன் மனித உறுப்புகளின் செயல்களை கட்டுப்படுத்துகின்றன (சாப்பிடுதல், தூங்குதல், பாலியல் உணர்வு). இவைகள் ரத்தம், உயிரணுக்கள் மற்றும் திசுக்கள் மூலம் உடலின் பல பகுதிகளுக்கு எடுத்து செல்ல படுகின்றன.
ஹார்மோன்கள் நாளமில்லாச் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலில் பல சுரப்பிகள் உள்ளன எடுத்துக்காட்டாக, பிட்யூட்டரி சுரப்பி, கணையச் சுரப்பி, அண்ட மற்றும் விந்தகச் சுரப்பிகள். சுரப்பியினால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் இரத்த்தின் வழியாக உடலினுள் கடத்தப்படுகிறது.

ஹார்மோன்களால் உருவாகும் பிரச்சனைகள்?
ஹார்மோன்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பணியாற்றுகின்றன, எனவே ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மிக கணிச வழிகளில் உடல் செயல்பாடுகளை பாதிக்கலாம். சில முக்கிய ஹோர்மோன் பிரச்சனைகள்
சீரற்ற இதய துடிப்பு
தூக்கமின்மை
பசியின்மை அல்லது அதிக பசி
பாலியல் இயக்கம் மற்றும் இனப்பெருக்க செயல்பாடு
வளச்சியின்மை
உடல் வெப்பநிலை
அதிக மன அழுத்தம்

அறிகுறிகள்
முடி உதிர்தல் மற்றும் முடி மெலிதாகல்.
மிக வெளிப்படையான அறிகுறி முடி உதிர்தல், ஹோர்மோன் குறைபாடு உள்ளவர்களுக்கு, அதிக அளவில் முடி உதிர்தல் ஏற்படும், மேலும் முடி வளர்தலின் வேகம் மிகவும் குறைவாக இருக்கும். தலையில் பொடுகு அதிக அளவில் இருக்கும்.

முகப்பரு
ஹார்மோன் சமநிலையின்மையை தினமும் கண் முன் நிறுத்தும் மிக சிறந்த அறிகுறி முகப்பரு. வெயில், எண்ணெய் நிறைந்த உணவு மற்றும் தூசிகளால் மட்டும் அல்லாமல், ஹார்மோன் குறைபாடுகளாலும் முகப்பரு ஏற்படும்.

கரு வளையங்கள்
கரு வளையங்கள் ஏற்படுவதற்கு தூக்கமின்மை மற்றும் சோர்வு முக்கிய காரணி, அது மட்டும் அன்றி சில வேளைகளில் டெஸ்டோஸ்டிரோன் அல்லது புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடுகளினால் கரு வளையங்கள் தோன்றும். கரு வளையங்கள் தொடர்ந்து இருப்பின் ஹார்மோன் குறைபாடு இருக்கலாம்.

அடிக்கடி ஏற்படும் தலைவலி
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைபாடுகளால் அடிக்கடி தலைவலி ஏற்படும். தலைவலி தொடர்ந்து காரணமில்லாமல் இருந்தால் ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

படபடப்பு மற்றும் மன அழுத்தம்
கார்டிசோல் உடலில் அதிகரிப்பதினால் படபடப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. கார்டிசோல் அதிகரிப்பு தைராய்டு ஹார்மோன் சமநிலை இன்மையினால் உண்டாகிறது. ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் எப்பொழுதும் படபடப்புடன் காணப்படுவார்கள். இக்குறைபாடு உள்ளவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன். தேவையற்ற மன அழுத்தம் மற்றும் படபடப்பு இருப்பின் ஹார்மோன் குறைபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

தூக்கமின்மை மற்றும் சோர்வு.
சிலருக்கு தூக்கமின்மை என்பது தொடர்ந்து வேலை செய்வதாலும் தூங்கும் நேரம் மாற்றங்களினாலும் ஏற்படுகிறது. தூக்கமின்மைக்கு புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் ஒரு காரணம். புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மனதை அமைதிப்படுத்தும் ஒரு ஹார்மோன். அந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது. சரியான தூக்கம் இன்மையால் உடலில் சோர்வு உண்டாகிறது. சோர்வினால் படபடப்பு மற்றும் மன அழுத்தம் உண்டாகிறது. தூக்கமின்மை மற்றும் சோர்வு இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த பிரச்சனைகள். சோர்வு மற்றும் இரவில் சரியாக தூக்கம் இல்லாது இருந்தால் ஹார்மோன் குறைபாடு உள்ளது என்பதை அறியலாம்.

சீரற்ற எடை மாற்றம் மற்றும் மார்பகங்களில் மாற்றம்.
எடை மாற்றம் என்பது உண்ணும் உணவுகளின் அடிப்படையிலும் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களின் அடிப்படையிலும் நிகழும். சில சமயங்களில் ஹார்மோன் குறைபாடுகளால் உடல் எடையில் மாற்றங்கள் நிகழும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சமநிலையின்மையால் மார்பு பகுதி மாற்றமடையும் சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற நிலையில் மார்பு பகுதி வீங்கிய நிலையில் காணப்படும். மேலும் மார்பு பகுதியில் வலி உண்டாகும். ஒழுங்கற்ற மார்பக வளர்ச்சி மற்றும் சீரற்ற எடை மாற்றம் ஹார்மோன் குறைபாட்டை வெளிப்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று.

அதிக வியர்வை
கோடை காலங்களில், அதிக வெப்பம் காரணமாக வியர்வை ஏற்படும். அதேபோல் அதிக வேலை செய்வதன் மூலமும் பளுவான பொருட்களை தூக்கி சுமப்பதனாலும் வியர்வை ஏற்படும். சிலருக்கு மிக அதிக அளவில் காரணமில்லாமல் வியர்வை வெளிப்படும். சமநிலை பாதிப்படைந்த உடல் அதிக சூடாக இருக்கும், இதனால் அதிகப்படியான வியர்வை வெளியேறும். இது ஹார்மோன் சமநிலை பாதிப்புள்ளாகி உள்ளது என்பதை வெளிப்படுத்தும் ஓர் காரணி.

அடிக்கடி உண்ணுதல் மற்றும் செரிமான பிரச்சனைகள்.
சிலருக்கு அடிக்கடி பசி ஏற்படும் மேலும் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கும். மேலும் அவர்களுக்கு செரிமான பிரச்சனையும் இருக்கும். இது ஹார்மோன்கள் உடலில் சமநிலையில் இல்லை என்பதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான ஒரு அறிகுறி. அடிக்கடி உணவு உண்ணுவதால் உடல் எடை மற்றும் ஜீரண சக்தி பாதிக்கப்படும். மேலும் சிலருக்கு படபடப்பின் காரணமாக வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற ஓர் நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடலில் ஹார்மோன் சமநிலையில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பலவீனமான தசை மற்றும் எலும்புகள்
சிலருக்கு உடலிலுள்ள தசைகள் எப்பொழுதும் வலியுடனும் காணப்படும் மேலும் அவர்கள் எலும்புகள் பலம் இல்லாமல் இருக்கும். சில சமயங்களில் கை மற்றும் கால்களை அசைக்க முடியாமல் வலி ஏற்படும். இதற்கு உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிக குறைவாக இருப்பதே காரணம். இந்த காரணியை கண்டறிவது மிக கடினம்.

உணவுகள்
உணவே மருந்து மருந்தே உணவு இதுவே தமிழனின் அடையாளம். மருத்துவரிடம் காண்பித்து குணப்படுத்துவதைவிட நோய் வராமல் தடுப்பதும் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் நோய்களை குணப்படுத்துவதும் சிறந்த தீர்வுகள். சமநிலையை கட்டுப்படுத்தும் மற்றும் கட்டுக்குள் வைக்கும் சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தேங்காய்
தேங்காய் மூலம் செய்த உணவுப் பொருட்களை தினமும் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தலாம் இது தைராய்டு ஹார்மோன் உண்டாகும் பல பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.

கிரீன் டீ
இதன்மூலம் உடலியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கலாம், உணவு செரிமானம் உடல் எடை குறைத்தல் அதிக தலைவலி மற்றும் சோர்வு ஆகிய ஹார்மோன் சமநிலை இன்மையால் வரும் பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஹார்மோன்களால் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம். குறிப்பாக பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகள். வாழைப் பழம் அத்திப் பழம் ஆரஞ்சு பழம் மாதுளம்பழம் ஆகியன ஹார்மோன்களை சீர்படுத்தும்.

ஒமேகா 3 கொண்ட உணவுப் பொருட்கள்
மீன், முட்டை மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியன ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். இவர்களை தொடர்ந்து கொண்டு வருவதன் மூலம் ஹார்மோன்களால் ஏற்படும் சமநிலையின்மையை தீர்க்கலாம்.

பூண்டு
உணவில் பூண்டுகளை அதிகம் சேர்ந்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை நீங்கி, சீராக இருக்கும். அதிலும் பூண்டை, பாலில் தட்டிப் போட்டு குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை சீராகிவிடும்.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்பது உடலையும் மனதையும் ஒரு நிலைப்படுத்தவும், உடல் உறுப்புகளை சீராக இயங்கச் செய்யவும் உதவும் ஒரு கலை. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தால் ஹார்மோன் சமநிலையின்மை மட்டுமல்லாமல் உடலின் இயக்கங்களையும் மன அமைதியையும் உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும். உடல் பலமே மன பலம்.



Click it and Unblock the Notifications











