For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா?...

இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும்.

|

இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே போதும் சலதோஷமும் நம்மளை எப்பொழுதும் தொற்றிக் கொள்ளும். அதிலும் தொண்டை புண் ஏற்பட்டால் கழுத்து கன்னம் எல்லாம் வலிக்க தொடங்கி விடும். எச்சிலை கூட முழங்க முடியாமல் அவதிப்படுவோம்.

benefits of salt water gargle in tamil

இதற்கு நீங்கள் அதிக மெனக்கெடல்களை செய்ய வேண்டிய தேவையேயில்லை. வெறும் உப்பு மற்றும் நீர் உங்கள் கையில் இருந்தால் போதும். தொண்டை புண் பிரச்சினையிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு கலந்த நீர்

உப்பு கலந்த நீர்

தொண்டை புண் பிரச்சினையை போக்க இது ஒரு இயற்கையான முறையாகும். வறட்டு இருமல், நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டை புண், வலி, அழற்சி ஆகியவற்றுக்கு மிகச சிறந்த உடனடி நிவாரணமாக இந்த உப்பு கலந்த நீர் இருக்கிறது.

வேதிவினை

வேதிவினை

இது ஒரு எளிய வேதி வினை மாதிரி செயல்படுகிறது. இது ஆஸ்மாஸிஸ் (சவ்வூடு பரவல்) முறைப்படி வேலை செய்கிறது. சூடான நீருடன் உப்பு கலந்து கொப்பளிக்கும் போது இது சளியை நெகிழச் செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

1/2 டீ ஸ்பூன் கல் உப்பு அல்லது தூள் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து நன்றாக கரையும் படி செய்யவும்.

கலவையானது வாயை அரிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது.

கழுத்தை பின்னே சரித்து கண்களை மேலே தூக்கி பார்க்கும் விதத்தில் அமைந்து கொள்ளுங்கள்.

30 விநாடிகள் இந்த உப்பு நீரை உங்கள் தொண்டை யில் படும் படி செய்து துப்பவும்.

இதே இதை திரும்புவும் முழுக் கரைசலும் காலியாகும் வரை செய்யவும்.

நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை என இதை செய்து வந்தால் தொண்டை புண் பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வேலை செய்யும் விதம்

ஆஸ்மாஸிஸ்

ஆஸ்மாஸிஸ்

ஆஸ்மாஸிஸ் என்பது சவ்வூடு பரவலாகும். அதாவது அடர்த்தி அதிகமான இடத்தில் இருந்து அடர்த்தி குறைவான இடத்திற்கு திரவம் நகர்ந்து சமநிலையை ஏற்படுத்தும்.

இந்த முறைப்படி உப்பு கலந்த நீர் அதிக அடர்த்தி கொண்டது. பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உங்கள் தொண்டையில் தங்கி வலியை ஏற்படுத்தும். உப்பு நீரில் உள்ள சோடியம் அதிக அடர்த்தியில் இருப்பதால் அடர்த்தி குறைந்த திசு சவ்வுகளின் வழியாக ஊடுருவி அங்கு தங்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரல்களை அழிக்கிறது. பாக்டீரியா மற்றும் வைரல்களின் இருப்பிடத்தையே காலி செய்து விடுகிறது. இதனால் மேலும் சளி உருவாகாமல் தொண்டை புண் குணமாகிவிடும்.

பயன்கள்

பயன்கள்

இதன் ஆன்டி பாக்டீரியல் குணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நோய் தாக்கத்தை தடுக்கிறது.

pH அளவை பராமரித்தல்

உப்பு நீர் தொண்டையில் பாக்டீரியாவால் ஏற்பட்ட அமிலத் தன்மையை போக்கி pH அளவை சமநிலையாக்குகிறது. எனவே இந்த pH ன் சரியான அளவு பாக்டீரியா பெருக்கத்தை தடுத்து தொண்டை புண் குணமாகிறது.

சளியை வெளியேற்றுதல்

சளியை வெளியேற்றுதல்

நீங்கள் ப்ளூ மற்றும் சலதோஷத்தால் அவதிப்படும் சமயங்களில் தொடர்ச்சியான இருமலுடன் சளியும் வெளியேறும். உப்பு கலந்த நீரை எடுத்து கொப்பளிக்கும் போது அது தொண்டை, மூக்கு மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றுகிறது. தொண்டை அழற்சியை மட்டும் குணப்படுத்துவதோடு தொண்டை வலியும் குறைக்கப்படுகிறது.

வறட்டு இருமல்

வறட்டு இருமல்

உப்பு கலந்த நீர் சளி இல்லாமல் ஏற்படும் வெறும் வறட்டு இருமலைக் கூட போக்குகிறது. வறட்டு இருமலால் அடிக்கடி இருமிக் கொண்டே இருக்கும்போது, தொண்டையில் வலியும் வாய் திறக்க முடியாமலும் ஆகும். இந்த உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் அந்த பிரச்னை உடனடியாக தீரும்.

சுவாச மண்டல நோய் தொற்று

சுவாச மண்டல நோய் தொற்று

ஜப்பானில் தற்போது நடத்திய ஆராய்ச்சி கருத்து என்னவென்றால் நாம் ஒரு நாளைக்கு மூன்று தடவை உப்பு கலந்த நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய் தொற்றை 40% வரை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

தொண்டை அழற்சி

தொண்டை அழற்சி

டான்சில் என்பது நமது நாக்கில் உள்ள அடிநாச்சதை ஆகும். இது தொண்டையின் பின்பகுதியில் உள்ள இரண்டு திசுக்களின் தொகுப்பு . இந்த தசை பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றால் பாதிக்கப்படும். இந்த அழற்சியால் தசைகள் வீங்கி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற சுவர் அதன் மேல் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நீங்கள் உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளித்தாலே போதும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

நீங்கள் பூண்டு போன்றவற்றை சாப்பிட்டால் வாயில் ஒரு விதமான துர்நாற்றம் வீசும். எனவே இந்த மாதிரியான கெட்ட துர்நாற்றத்தை உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிக்கும் போது அகற்றி விடலாம். ஏனெனில் இந்த நீர் வாயின் pH அளவை சமநிலைபடுத்தி கெட்ட துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாவை அழிக்கிறது.

தொண்டை கட்டு

தொண்டை கட்டு

தொண்டை கட்டு ஏற்படவும் பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றே காரணம். எனவே உப்பு கலந்த நீரை கொப்பளிக்கும் போது அதற்கு காரணமான பாக்டீரியாவை அழித்து நிவாரணம் அளிக்கிறது.

இரத்த போக்கு மற்றும் பற்சொத்தை

இரத்த போக்கு மற்றும் பற்சொத்தை

நீங்கள் பல் துலக்கி கொப்பளிக்கும் போது பார்த்தால் சில சமயங்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இருக்கும். இந்த இரத்த கசிவு தான் பற்சொத்தைக்கு முதல் அடித்தளம். இது உங்கள் பற்களில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. எனவே நீங்கள் உப்பு கலந்த நீரில் வாயை கொப்பளிக்கும் போது பற்சொத்தைக்கு காரணமான பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு பற்சொத்தை ஏற்படுவதை தடுக்கிறது.

ஈறு வீக்கம்

ஈறு வீக்கம்

பல்லின் இடுக்குகளில் மாட்டி கொள்ளும் உணவுத் துகள்கள் பாக்டீரியா பெருக்கத்திற்கு காரணமாக அமைகிறது. அப்படியே பாக்டீரியாவின் காலணியை பெருக்கி ஈறுகளில் படிக்க போன்ற அமைப்பை ஏற்படுத்தி விடும். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி போன்றவை ஏற்படும். இந்த பிரச்சினை எல்லாப் உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளித்தாலே சரியாகி விடும்.

வாய்ப் புண்கள்

வாய்ப் புண்கள்

சில சமயங்களில் உதட்டின் உட்புறத்தில் அல்சர் போன்று புண்கள் ஏற்படும். இத் பொதுவாக தெரியாம உதட்டை கடித்து விடுதல், சில வகை உணவுகள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் போன்றவற்றால் ஏற்படும். எனவே உங்கள் வாயை உப்பு கலந்த நீரில் கொப்பளிக்கும் போது சீக்கிரம் புண்கள் ஆறி விடும்.

பல்வலி நிவாரணம்

பல்வலி நிவாரணம்

உங்கள் பற்களில் ஏற்பட்டுள்ள பற்சொத்தை காரணமாக சில சமயங்களில் வலி ஏற்படும். இந்த வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் இந்த உப்பு கலந்த நீர் அந்த பல் வலியை குறைக்க உதவுகிறது.

பல் எனாமல்

பல் எனாமல்

உப்பு கலந்த நீரில் உள்ள ப்ளோராய்டுகள் பற்களில் உள்ள எனாமல் தேயாமல் காக்கிறது. எனவே இதை உங்கள் பற்கள் பராமரிப்பில் சேர்த்து கொண்டு வந்தால் என்றென்றும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

ஈறுகளில் காயங்கள்

ஈறுகளில் காயங்கள்

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் தகவலானது உப்பு கலந்த நீரைக் கொப்பளித்து வந்தால் ஈறுகளிலுள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் என்று அவர்கள் கூறிகின்றனர். இதன் மூலம் ஈறுகள் மறுபடியும் பழைய நிலையை அடையும் என்கின்றனர்.

வாய் வெண் புண்கள்

வாய் வெண் புண்கள்

இந்த வெண் புண்கள் பூஞ்சை தொற்றால் நாக்கில் ஏற்படுகிறது. ஈஸ்ட் கேண்டியா என்ற பூஞ்சை தான் இதற்கு காரணமாக அமைகிறது. வெள்ளை நிறத்தில் நாக்கில் படலத்தை ஏற்படுத்தும். வீக்கம் வலி ஏற்படும். இதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு கொப்பளிக்கும் போது வெண் புண்கள் குணமாகுகிறது.

வாயை சுத்தமாக்குதல்

வாயை சுத்தமாக்குதல்

உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது வாயின் pH அளவு சரியாகிறது. இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை தடுக்கலாம். பல் இடுக்குகளில் மாட்டியுள்ள உணவுத் துகள்களையும் அலசி வெளியேற்றி விடும். இதனால் எந்த தொற்றும் இல்லாமல் வாய் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

image courtesy

இதனால் பெரியதாக எந்த பக்க விளைவும் ஏற்படாது. அதிகமான உப்பு கலந்து கொப்பளிக்கும் போது மேலும் தொண்டையை வறட்சியாக்கி விடும்.

தினமும் அடிக்கடி உப்பு கலந்த நீரை கொப்பளித்து வந்தால் எனாமல் மிகவும் மென்மையாகி போய்விடும். எனவே வாரத்திற்கு 2-3 முறை போதுமானது.

உப்பு கலந்த நீரை கொப்பளித்த பிறகு கண்டிப்பாக துப்ப வேண்டும். இல்லையென்றால் உடம்பில் உப்பின் (சோடியம்) அளவு அதிகரித்து இதய நோய்கள் வர காரணமாக அமையும்.

டிப்ஸ்கள்

டிப்ஸ்கள்

வெதுவெதுப்பான நீரில் உப்பை கலக்கும் போது அது சீக்கிரம் கரைந்து விடும்.

சூடான நீரை வாயில் வைத்து கொப்பளிக்காதீர்கள் பிறகு வாய் பொத்து விடும்.

உப்பின் அளவு அதிகமாக தெரிந்தால் கூட கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

கண்டிப்பாக கொப்பளிக்கும் போது உப்பு நன்றாக கரைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தொண்டையில் அதிகமான வலியை ஏற்படுத்தி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Amazing Benefits Of Salt Water Gargle

When swallowing food feels like torture, and it feels like a small rodent crawled into your throat and died there
Desktop Bottom Promotion