For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கத்திலேயே உச்சா போறத எப்படித்தான் நிறுத்தறதுன்னு குழப்பமா இருக்கா?... ரொம்ப சிம்பிள் தாங்க...

நிறைய தாய்மார்களின் கவலை என்னவென்றால் குழந்தைகள் பெரியவர்கள் ஆகியும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது தான். இதனால் அவர்களின் ஆழ்ந்த உறக்கமும் கெடுகிறது. நடு தூக்கத்தில் எழுந்திருந்து குழந்தையின் உடையை மா

By Suganthi Rajalingam
|

நிறைய தாய்மார்களின் கவலை என்னவென்றால் குழந்தைகள் பெரியவர்கள் ஆகியும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது தான். இதனால் அவர்களின் ஆழ்ந்த உறக்கமும் கெடுகிறது. நடு தூக்கத்தில் எழுந்திருந்து குழந்தையின் உடையை மாற்றுவது படுக்கை விரிப்பை மாற்றுவது போன்ற ஏராளமான சங்கடங்களையும் அவர்களெல்லாம் சந்திக்கின்றனர்.

how to stop bedwetting for kids and adults

மேலும் இந்த மாதிரியான பிரச்சினை மற்றவர்கள் முன்னிலையில் சங்கடத்தையும் உருவாக்கி விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகைகள்

வகைகள்

தூக்க நேரத்தில் கட்டுப்பாடின்றி சிறுநீர் கழிக்கும் பழக்கம் நோச்சுரல் எனியூரிஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதுவே பகல் நேரத்தில் கட்டுப்பாடின்றி சிறுநீர் கழித்தல் டையூரினல் எனியூரிஸிஸ் என்கின்றனர்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

படுக்கையில் சிறுநீர் கழிக்க இந்த பிரச்சினைகள் தான் காரணமாக அமைகின்றன. சிறுநீர் கழிக்க அவசரம், குறட்டை, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலி இவற்றால் பெரிய குழந்தைகள் கூட படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர்.

பெரியவர்களுக்கான அறிகுறிகள்

பெரியவர்களுக்கான அறிகுறிகள்

கீழ்க்கண்ட காரணங்களால் பெரியவர்கள் கூட படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர்.

சிறுநீர் பாதையில் தொற்று

டயாபெட்டீஸ்

அனிமியா

ஹார்மோன் சமநிலையின்மை

மன அழுத்தம்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்திக்கும் இந்த கஷ்டத்தை சில இயற்கை முறைகளைக் கொண்டு சரி செய்யலாம்.

க்ரான்பெர்ரி ஜூஸ்

க்ரான்பெர்ரி ஜூஸ்

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க க்ரான்பெர்ரி ஜூஸ் பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகின்றன. எனவே உங்கள் இரவு நேர உணவிற்கு பிறகு க்ரான்பெர்ரி ஜூஸ் குடித்து வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் அடிக்கடி சிறுநீர் கழிக்க அவசரப்படுவதை கட்டுப்படுத்தும். எனவே தினமும் 2 பழுத்த வாழைப் வாழைப்பழத்தை பகல் நேரத்திலும் மற்றொன்றை தூங்க போவதற்கு முன்னும் சாப்பிட்டு வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கலாம். இது குழந்தைக்கும் பெரியவர்கள் இருவருக்குமே நன்மை அளிக்கும்.

தேன்

தேன்

தினமும் இரவில் 1 டேபிள் ஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தாலோ அல்லது 1 கிளாஸ் பாலில் கலந்து குடித்து வந்தாலோ இந்த பிரச்சினை சரியாகி விடும். அதனால் தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக, தேனை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க மறக்காதீர்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர் சிறுநீரக உறுப்பின் pH அளவை சமமாக்குகிறது. இதனால் அங்கு இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிட்டு தொற்றிலிருந்து தடுக்கிறது. படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகச் சிறந்த முறை. 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து சாப்பிடுவதற்கு முன் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம்

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க பயன்படும் இயற்கையான பொருள் இது. 1 டீ ஸ்பூன் பெருஞ்சீரகத்துடன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1கிளாஸ் சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நின்று விடும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

2 வால்நட்ஸ், 5 உலர்ந்த திராட்சை பழங்களை படுக்கைக்கு போவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் சில வாரங்களுக்கு செய்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தொல்லை போய்விடும்.

சிறுநீர்ப்பை உடற்பயிற்சி

சிறுநீர்ப்பை உடற்பயிற்சி

இந்த உடற்பயிற்சி பெரியவர்களுக்கு உதவியாக இருக்கும். இது மிகவும் சுலபமான முறையும் கூட. அதிக அளவில் தண்ணீரை குடித்து விட்டு சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்தி பார்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால் சிறுநீர் கழிப்பது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

பட்டை

பட்டை

பட்டையை வெறுமனே வாயில் போட்டு சவைத்து வந்தாலோ அல்லது பட்டை பொடி, சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து டோஸ்ட் செய்து சாப்பிட்டு வந்தாலோ படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கலாம்.

வெல்லம்

வெல்லம்

வெல்லம் நல்ல உடல் சூட்டை கொடுக்க கூடியது. உடம்பு சூடாக இருந்தால் சிறுநீர் கழிக்கும் தொந்தரவு இருக்காது. எனவே தினமும் காலையில் வெல்லம் மற்றும் சூடான பால் சேர்த்து அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து வறுத்த செலரி விதைகள், எள் சமமாக எடுத்து கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும்.

கடுகுப் பொடி

கடுகுப் பொடி

1/2 டீ ஸ்பூன் கடுகுப் பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து படுப்பதற்கு முன் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கடுகுப்பொடி சிறிது கசப்புத்தன்மையுடன் இருக்கும். அதனால் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன் அதில் சிறிது தேன் கலந்து கொடுங்கள். குடித்துவிடுவார்கள்.

ஆலிவ் ஆயில் மசாஜ்

ஆலிவ் ஆயில் மசாஜ்

நாள்பட்ட சிறுநீர் கழிக்கும் பிரச்சினை குழந்தைகளிடம் இருந்தால் அதற்கு இது தீர்வளிக்கும். கொஞ்சம் ஆலிவ் ஆயிலை எடுத்து வயிறு மற்றும் அடி வயிற்று பகுதியில் மசாஜ் செய்து தடவினால் தசைகள் வலுவடைந்து சிறுநீர் கழிக்க ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் ஒரு சில நாட்களில் இந்த பிரச்சினையிலிருந்து விடுதலை பெறலாம்.

பெரிய நெல்லிக்காய்

பெரிய நெல்லிக்காய்

இரண்டு பெரிய நெல்லிக்காயை அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து காலையில் எழுந்ததும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

1 டீ ஸ்பூன் பெரிய நெல்லிக்காய் கூலுடன் கொஞ்சம் கருப்பு மிளகு பொடி சேர்த்து தினமும் குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

ஹெர்பல் டீ

ஹெர்பல் டீ

குதிரை வாலி, பியர்பெர்ரி, ஓக் பார்க் மரப்பட்டை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 2-3 கப் இந்த டீயை தினமும் குடித்து வந்தால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நின்று விடும்.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

தினமும் படுக்கைக்கு போவதற்கு முன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீர்ச்சத்தை போதுமான அளவு எடுத்து கொள்ளுங்கள். தானியங்கள், முழுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் பாதாம் பருப்பு, வாழைப்பழம், எள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

படுக்கைக்கு முன் நீர் அருந்துவதை தவிர்த்து விடுங்கள். காரமான உணவுகள், காஃபைன், ஆல்கஹால் போன்ற பானத்தை அருந்தாதீர்கள். அப்படி படுக்கைக்கு போகும்முன் தண்ணீர் குடித்தால் இடையிடையே சிறுநீர் கழிக்க வேண்டிய தொல்லை இருக்கும். தூக்கமும் தடைபடும். ஒருகட்டத்துக்கு மேல், படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட வேண்டிய நிலை வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Amazing Home Remedies to Stop Bedwetting

Countless mothers spend sleepless nights worrying about their kid’s bedwetting problem. Adult bedwetting causes intense embarrassment for the sufferer and is surprisingly common. . Our bedwetting remedies for adults and kids will solve the problem for good.cranberry juice, cinnamon, olive oil massage, fennel Seeds, exercise these are methods to get rid off bedwetting problem.
Story first published: Wednesday, April 11, 2018, 17:35 [IST]
Desktop Bottom Promotion