For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள் நாக்கின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள்!

இங்கு உள் நாக்கின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

"மெஷின்கள் எப்போதும் தேவையற்ற உபரி பாகத்துடன் தயாரிக்கப்படுவது இல்லை, அனைத்தும் ஏதேனும் ஒரு பயன் அல்லது பங்களிப்பு கொண்டு தான் இருக்கும்" என்பது பழமொழி.

மனித உடலும் ஒரு மெஷின் தான். நமது உடலில் எந்த ஒரு பாகமும் தேவையற்று வீணாக படைக்கப்படவில்லை. ஆயினும், நாம் நமது உடலில் சிலவற்றை தேவையற்றதாக உணர்கிறோம்.

அவற்றில் ஒன்று தான் உள்நாக்கு. ஆனால், இது பயனற்ற பாகம் அல்ல. இதற்கும் பயன்பாடுகள் இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள் நாக்கு!

உள் நாக்கு!

உள் நாக்கு அல்லது சிறுநாக்கு என தமிழில் கூறப்படும் இது ஆங்கிலத்தில் Uvula என அழைக்கப்படுகிறது. இது லத்தின் வார்த்தையான Uvola என்பதில் இருந்து மருவிய சொல். Uvola என்றால் லத்தின் மொழியில் சிறிய திராட்சை கொத்து என்று பொருள்.

பயனற்றது?

பயனற்றது?

இது ஏன்? எதற்கு? இதன் பயன்பாடு என்ன என்று தெரியாமல், முன்னர் ஆராய்ச்சியாளர்கள் இது பயனற்று வாயில் தொங்கிக் கொண்டு இருக்கிறது என எண்ணினர்.

மேலும், இது சில சமயங்களில் வீங்கும் தன்மை மட்டும் கொண்டிருக்கும் என கருதினர்.

பேச உதவும்!

பேச உதவும்!

இஸ்ரேல் சேர்ந்த ஹஷ்ரன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் உள்நாக்கு மனிதர்கள் பேசவும் உதவுகிறது என அறிந்தனர். இது வாயில் உராய்வு உணர்வு ஏற்படாமல் இருக்கவும் உதவகிறது.

மேலும், மற்ற பாலூட்டிகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்தி காண்பிக்க்கும் மனித பரிணாம வளர்ச்சியின் குறி இது என்றும் சிலர் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாந்தி உணர்வு!

வாந்தி உணர்வு!

நீங்கள் வாயை கழுவும் போது உள்நாக்கை தொடும் போதுதான், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட காரணம். உள்நாக்கு இருப்பதால் தான் இந்த உணர்வு வெளிப்படுகிறது.

துளையிடுதல் கூடாது!

துளையிடுதல் கூடாது!

சிலர் ஃபேஷன் என்ற பெயரில் உள்நாக்கில் துளையிட்டு கம்மல் போன்று எதையாவதை மாட்டிக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறட்டை!

குறட்டை!

குறட்டை ஏற்படவும் உள்நாக்கு ஒரு காரணமாக இருக்கிறது. தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படுபவர்கள் உள்நாக்கை அகற்றிவிடும் வழக்கமும் இருக்கிறது.

நாள்பட்ட இருமல்?

நாள்பட்ட இருமல்?

நாள்பட்ட இருமல் ஏற்படுவதற்கு உள்நாக்கு நீண்டு இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.

வீக்கம்!

வீக்கம்!

சிலருக்கு உள்நாக்கு வீக்கம் ஏற்படும். இது உணவு விழுங்கும் போது ஒருவிதமான எரிச்சலை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is the Role of Uvula in Human Body?

What is the Role of Uvula in Human Body?
Desktop Bottom Promotion