For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயை மாயமாக்கும் நானோ சிப்- மருத்துவ உலகில் சாதனை!!

புதிய கண்டுபிடிப்பான நானோ சிப் பாதிப்படைந்த செல்கள் மற்றும் காயமடைந்த செல்களின் ஜெனிடிக் வடிவமைப்பையே மாற்றி அதை குணப்படுத்தவும், புதிய உறுப்புகள் வளர்வதற்கும், வயதாகுவதை தடுப்பதற்கும் உதவுகிறது.

By Suganthi Rajalingam
|

உலக மருத்துவ அறிவியலயே முறியடித்த புதிய கண்டுபிடிப்பு ஒன்று வந்துள்ளது. ஆமாங்க அமெரிக்காவில் உள்ள ஒஹியோ பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சி என்னவென்றால் புதிய நானோ சிப் டெக்னாலஜி முறையில் ஒரு சிப்பை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் அதிசயம் என்னவென்றால் அந்த சிப்பை லேசாக உங்கள் காயங்களில் ஒரு தடவை தொட்டாலே போதுமாம் காயங்கள் குணமடைந்து விடும் என்பது தான் அதிசயிக்கத்தகும் உண்மையும் கூட.

இந்த டெக்னாலஜி திசு நானோ ட்ரான்ஸ்பெக்சன் (Tissue NanoTransfection) (TNT) என்று அழைக்கப்படுகிறது. இந்த சிப் பாதிப்படைந்த செல்கள் மற்றும் காயமடைந்த செல்களின் ஜெனிடிக் வடிவமைப்பையே மாற்றி அதை குணப்படுத்தவும், புதிய உறுப்புகள் வளர்வதற்கும், வயதாகுவதை தடுப்பதற்கும் உதவுகிறது.

New Breakthrough Medical Device Can Heal With A Single Touch!

அதிசயக்கும் கருவி

இந்த சிப் யை பயன்படுத்த ஒரு சிறிய ஹவ்லிங், ஒரு லைட் போன்றவை போதும். இதற்கு நீண்ட செய்முறைகள் தேவையில்லை.

இந்த புதிய சிப்யை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து அதை ஆக்டிவேட் செய்ய சிறுதளவு எலக்ட்ரிக் சார்ஜ் கொடுத்தாலே போதும் பாதிப்படைந்த செல்களின் டிஎன்ஏ, ஆர்என்ஏக்கு பதிலாக புதிய டிஎன்ஏ, ஆர்என்ஏ வை உருவாக்கி விடும்.

இந்த ஒட்டுமொத்த வேலைக்கும் ஆகும் நேரம் வெறும் ஒரு விநாடி தான். இதை சிகிச்சைக்கு பிறகு யாரும் இதை எடுத்துச் செல்ல தேவையில்லை. இந்த சிப் அந்த செல்களை ஒரு விநாடியில் வேலை செய்ய வைத்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அடக்க தேவையில்லை

இந்த TNT சிப் உடலில் உள்ள செல்களின் செயலை மட்டுமே மாற்றுகிறது. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது நோய் எதிர்ப்பு செல்கள் இந்த முறையின் மூலம் தோன்றிய புதிய செல்களை எப்பொழுதும் தாக்குவதில்லை.

இந்திய ஆராய்ச்சியாளரால் வழிநடத்தப்பட்ட ஆராய்ச்சி

இந்த குரூப்பில் ரீஜெனரேட்டிவ் மெடிசனின் டேரக்டரான டாக்டர் சந்தன் சென் அவர்களும் மற்றும் கெமிக்கல் ஆன்ட் பயோமாலிக்குலார் இன்ஜினீரிங்கின் புரபொசருமான டாக்டர் ஜேம்ஸ் லீ அவர்களும் இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தினர்.

இதன் முதற்கட்ட ஆராய்ச்சியானது அடிபட்ட எலிக்கு செய்யப்பட்டது.

இந்த புதிய சிப்யை வைத்து எலியிடும் செய்த ஆராய்ச்சியின் பயனாய் ஸ்கேனின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால் அதன் அடிபட்ட கால்களில் எந்த வித இரத்த போக்கும் ஏற்படவில்லை.

அடுத்த ஒரு வாரத்தில் அந்த பகுதி முழுவதும் புதிய இரத்த நாளங்களும் காயப்பட்ட இடம் குணமடைந்து வருவதும் மற்றும் இன்னும் 2 வாரத்திற்குள் முற்றிலுமாக குணமடைந்து விடும் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இந்த ஆராய்ச்சியை மூளை நோயான பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட எலியிடமும் மேற்கொண்டனர். இந்த பாதிப்பிற்கு ஆழமான செல்களை குணப்படுத்த வேண்டும் ஆனால் இந்த சிப் உடலில் மேற்பரப்பு செல்களிலயே வைக்கப்படுகிறது.

98% ஆராய்ச்சி வெற்றி..

இதுவரை இந்த ஆராய்ச்சியானது எலி மற்றும் பன்றிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 98%(இதுவரை மருத்துவ அறிவியல் அரிதாக கண்டறியும் வெற்றி) என்றே கூறலாம். எனவே இந்த ஆராய்ச்சியை 2018ல் மனிதர்களிடம் செய்வதற்கு திட்டம் போட்டு வருகின்றனர்.

அதுவரை நாமும் காத்திருந்து கவனிப்போம்.

English summary

New Breakthrough Medical Device Can Heal With A Single Touch!

New Breakthrough Medical Device Can Heal With A Single Touch!
Story first published: Friday, August 11, 2017, 15:47 [IST]
Desktop Bottom Promotion