For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குப்பஞ்சர் யாரெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா?

By Gnaana
|

அறிவியலில் புதுப்புது கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வந்து, நவீன கருவிகளின் உபயோகங்களில் மக்களை ஈர்த்தாலும், சில காலங்களில், அதைவிட மேலான ஒரு புதிய கண்டுபிடிப்பு வந்துவிட்டால், பழைய அறிமுகங்கள், குப்பைக்குச் சென்றுவிடும்.

அறிவியலின் இத்தகைய அசுரவளர்ச்சிகளை நாம் ஆண்டாண்டுகாலமாகக் கண்டு தானே, வருகிறோம். எழுபதுகளின் இறுதிவரை கிராமஃபோன் எனும் இசைத்தட்டு மூலமாகத்தான் நாம் இசையை, பாடலைக் கேட்கமுடியும் என்ற நிலை இருந்தது, பின்னர் ஆடியோ கேஸட் வந்தது, ரெகார்ட் செய்து நம் குரலையும் கேட்க முடியும் என்றவுடன் இசைத்தட்டு எங்கோ மூலைக்கு சென்றுவிட்டது.

பின்னர் வீடியோ கேசட் வந்து பயன்பாட்டின் உச்சத்தை அடைந்தவுடன், சிடியில் ஆடியோ மற்றும் வீடியோ இரண்டும் ஒன்றாக வந்ததும், இன்று ஆடியோ மற்றும் வீடியோ கேசட் எங்கே போனது என்றே தெரியவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் நம் பாரம்பரிய பயன்பாடுகளை மட்டும் அழிக்கவில்லை, அவற்றின் ஆரம்ப கால கண்டுபிடிப்புகளையும் சேர்த்து அழித்து அதன்மீது ஏறியே, அடுத்த நிலைக்கு செல்கின்றன.

சமீப காலங்களில் நமது மருத்துவ முறைகளும் இதேபோல மாறிவருகிறது. நெடுநாள் மக்கள் பயன்பாட்டில் இருந்த வீட்டு வைத்தியம், சித்த வைத்தியம், ஹோமியோபதி முறைகள் எல்லாம் மறந்து, புதிய மேலை மருத்துவ முறைகளின் உடனடி நிவாரணங்களில் மக்கள் கவரப்பட்டாலும், தற்போது, அவற்றின் பக்க விளைவுகளை அறிந்து அச்சமுற்று, மாற்று வைத்தியங்களை நாடுகின்றனர்.

அந்த வகையில் பல சிகிச்சை முறைகள் நமது தேசத்தில் பிரபலமாகின்றன, அதில் ஒன்றுதான், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் புதிய மருத்துவ முறையான அக்குபஞ்சர். அனைத்து வியாதிகளையும் அறுவை சிகிச்சை இன்றி, மருந்துகள் இன்றி, குணப்படுத்துவதாக பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

பெயரைக்கேட்டால் யாருக்கும் இது என்ன வைத்தியமுறை என்று தெரியாது, ஆயினும், இதன் அடிப்படை தெரிந்தால், அட, இதுதானா, இது நமது பழமையான கலை ஆயிற்றே, என்று சொல்லி விடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பாரம்பரிய வர்மம் :

பாரம்பரிய வர்மம் :

நமது தேசத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள்தான் அக்காலத்தில் இருந்தன, அவையெல்லாம், தலைமுறைகளாக ஒரு குடும்பத்தின் மூலமே, வெளி உலகப் பயன்பாட்டுக்கு கிடைத்தன. இதில் உள்ள சிக்கல், அந்த குடும்பத்தைத் தவிர யாருக்கும் இந்தக் கலை தெரியாமல், இருந்தது. விளைவு? ஒரு தலைமுறை இந்தக் கலையைக் கற்கவில்லையெனில், பின்னர் அவர்களில் யாருக்கும் வைத்தியம் பற்றிய தொடர்பு இல்லாமல் போய்விடும், மக்களுக்கும் இவர்களின் முன்னோர் தந்த மருந்தால் வியாதி குணமாகி, மீண்டும் தேவைப்படும்போது, அந்த மருந்து கிடைக்காமல் போய்விடுகிறது.

பாரம்பரிய மூலிகை வைத்தியம் போல ஒரு உடல் நலக் கலைதான், வர்மம். உடலில் உள்ள நரம்புகளை தூண்டி விடுவதன் மூலம் அல்லது செயல் இழக்க வைப்பதன் மூலம், வியாதிகளை நல்ல முறைகளில் சரிசெய்யலாம் அல்லது உடல் செயல் இழப்பை ஏற்படுத்தி, முடங்கவும் வைக்கலாம்.

இது சித்தர்கள், முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு அற்புதக்கலை, இந்தக்கலைதான், நமது தேசத்தில் இருந்து சீன தேசத்திற்கு சென்று, அவர்களுக்கு ஆன்மீகப் பயிற்சி அளித்த போதிதர்மர் மூலம், அங்கு பரவி, அதில் சில மாற்றங்களுடன், வேறு பெயரில், வியாதிகளை நீக்க, பக்க விளைவுகள் இல்லாத அக்குபஞ்சர் சிகிச்சை முறை என்று இங்கே, அறிமுகமாகி இருக்கிறது.

நம்முடைய தொன்மையான தோப்புக்கரணம், சூப்பர் பிரைன் யோகா என்று நம் நாட்டிற்கே, புதிய வெளிநாட்டு பயிற்சிமுறை போல வரவில்லையா, அதுபோலத்தான்.

அக்குபஞ்சர் சிகிச்சையின் அடிப்படை.

அக்குபங்க்சர் என்றால் என்ன ?

அக்குபங்க்சர் என்றால் என்ன ?

உடலில் இருக்கும் சக்தி மண்டலம், உயிர் ஆற்றலை, இரத்த ஓட்டத்தின் மூலம், உடல் எங்கும் பரவச்செய்யும், உடலில் பாதிப்பு உள்ள இடங்களில் இந்த ஆற்றல் குறையும்போது, உடல் தன்னிச்சையாக வெளிப்புற ஆற்றலின் மூலம், காற்றிலோ, சூரிய ஒளியிலோ உள்ள சக்தியின் மூலம், உடலின் பாதிப்பை விலக்கி விடும்.

சில பாதிப்புகள் குணமாகத்தாமதமாகும் போதுதான், நமக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தோன்றி, சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

மனிதஉடல் மருந்துகள் ஏதும் தேவையின்றி, தன்னைத்தானே, தற்காத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்கது, எனும் நம் முன்னோர்களின் வாக்குதான், இதன் தத்துவம்.

உடலில் பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்று அறிந்து, அந்த பாதிப்பை சரிசெய்யும் ஆற்றல், உடலில் சில இடங்களில் உள்ள நரம்புகளின் இணைப்பில், நரம்புகளில் உள்ளது, அங்கு அந்த ஆற்றலைத் தூண்டி விடுவதன் மூலம், வியாதிகளை, படிப்படியாக விலக்க முடியும் என்பதே, அக்குபஞ்சர்

அங்குபஞ்சரின் சிறப்பம்சம் :

அங்குபஞ்சரின் சிறப்பம்சம் :

அக்குபஞ்சரின் சிறப்பம்சம், பக்கவிளைவுகள் மற்றும் மருந்துமாத்திரைகள் இல்லாத சிகிச்சைமுறைதான். ஊசி மட்டும் உண்டு, மருந்தை சிரிஞ்சில் ஏற்றி உடலில் செலுத்தும் ஊசி அல்ல, உடலில் உள்ள ஆற்றலைத் தூண்டி, பாதிப்புகளை நீக்க, குறிப்பிட்ட இடத்தில் சற்றுநேரம் வலியின்றி, செருகி வைக்கப்படும் ஊசி. வியாதிகளின் பாதிப்பைப் பொறுத்து, ஊசிகளின் எண்ணிக்கையும், சிகிச்சைபெறும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இந்த சிகிச்சைமுறைகளில், உடலில் உள்ள எல்லா பாதிப்புகளுக்கும், அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இன்றி குணமாக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இதன் விளக்கத்தை அறிய முயல்வோம்.

ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் உடலில், ஒரு ஆற்றல் மையம் உண்டு, எந்த உறுப்பில் பாதிப்போ அந்த உறுப்புக்கு ஆற்றலை அளிக்கும் மையத்தில், கை விரல்களால், சிறிது அழுத்தி வந்தாலே, பாதிப்புகள் படிப்படியாக குறையும் என்கின்றனர்.

வலி குறையுமா?

வலி குறையுமா?

இங்கே சிலருக்கு ஒரு சந்தேகம் வரலாம், எனக்கு மூட்டு வலி, அப்போது இந்த சிகிச்சையை கை கால் மூட்டுகளில் செய்யவேண்டுமா? எனக்கு இடுப்பு வலி, அப்போ இந்த சிகிச்சையை இடுப்பில் செய்யணுமா? என்று.

உடலில் வலி தோன்றிய இடங்கள், வலியை நமக்கு உணர்த்த மட்டுமே, மாறாக அவை அந்த வலிகளின் மூல காரணம் இல்லை. மேலும், வலி என்பது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாவதாகும்.

குறிப்பாக கைகால் மூட்டு வலிகளின் காரணமாக விளங்குவது சிறுநீரகமாகும், இதன் ஆற்றல் புள்ளிகள் கால் மூட்டுகளின் பின்பக்கம் உள்ளன, பொதுவான வலிகளுக்கு, பாதத்தில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள புள்ளிகளைத் தூண்ட, வலிகள் நீங்கி விடும்.

அக்குபஞ்சர் ஊசி:

அக்குபஞ்சர் ஊசி:

மேலே சொன்ன கைகால் மூட்டு வலிகளின் பாதிப்புகள் விலக, அவற்றை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் மையங்கள் உள்ள இடங்களில், ஊசிகளை செருகி வைப்பர். சரியான இடங்களில் செருகிய ஊசிகளால் வலிகள் மற்றும் சிரமம் இருக்காது. அவற்றில் அரிப்பு அல்லது ஏதேனும் ஒரு உணர்வு ஏற்பட்டால், ஆற்றல் அந்த இடத்தில் மேம்படுகிறது என்று எண்ணலாம். மாறாக, வலி, சோர்வு மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால், உடனே, ஊசிகளை அகற்றிவிட வேண்டும். அவருக்கு இந்த சிகிச்சை ஏற்புடையது அல்ல என்று தீர்மானிக்கலாம்.

அக்குபஞ்சர் ஊசி என்பது சாதாரண ஊசியும் அல்ல, குண்டூசியும் அல்ல, அது இதற்கெனவே, தயாராகும் ஒரு ஊசியாகும், ஒருவருக்கு சிகிச்சை அளித்த ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த மாட்டார்கள்.

 ஊசியின் திறம் :

ஊசியின் திறம் :

அக்குபஞ்சர் ஊசிகள் தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற உலோகங்களிலும் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

சீனா உள்ளிட்ட கீழை நாடுகளில், பெண்களின் பிரசவத்தில் வேதனை தெரியாமல் இருக்க அக்குபஞ்சர் ஊசிகளின் மூலம், வலியில்லா பிரசவம் பார்க்கிறார்கள். மேலும், அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்துக்கு பதில், அக்குபஞ்சர் ஊசியே, மயக்க்கத்தை அளிக்கிறது.

அக்குபஞ்சரில் தூய்மை :

அக்குபஞ்சரில் தூய்மை :

பக்க விளைவுகள் இல்லாத, மருந்து மாத்திரைகள் இல்லாத சிகிச்சை முறை என்று கூறினாலும், அக்குபஞ்சரில் தூய்மை நல்ல முறையில் பேணப்படவேண்டும்.

ஊசிகளில் தூய்மை, உடலில் ஊசி குத்தும் இடத்தை ஸ்பிரிட் வைத்து நன்கு சுத்தம் செய்தல், கைகளை கழுவிவிட்டு சிகிச்சை அளித்தல், நல்ல கூர்மையான ஊசியை மட்டுமே பயன்படுத்துதல் போன்றவற்றில் கவனமாக இல்லாவிட்டால், அதுவே, சிகிச்சை பெறும் மனிதரின் உடலுக்கு தீங்கு விளைவித்து விடும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :

தவிர்க்க வேண்டியவர்கள் :

கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடலில் இரத்த காயம் இருக்கும் போது அல்லது வீரியமிக்க மருந்துகளை சாப்பிடுபவர்கள், இந்த மருந்தை உபயோகிப்பது கூடாது. அக்குபஞ்சர் முறையில், அறுவை சிகிச்சை தவிர்த்த அனைத்து வகை உடல் நல பாதிப்புகளையும் சரியாக்க முடியும் என்கிறார்கள்.

தைராய்டு :

தைராய்டு :

தைராய்டு, உடல் வலி, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை பாதிப்பு, ஆஸ்துமா, வயிறு, பக்க வாதம் மற்றும் பெண்களின் பாதிப்புகள் போன்ற அனைத்து வியாதிகளையும் விரைவாக பக்க விளைவுகள் இல்லாமல் சரி செய்ய முடியும் என்கின்றனர், அக்குபஞ்சர் நிபுணர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The things you should know about Acupuncture

The things you should know about Acupuncture
Story first published: Thursday, December 14, 2017, 19:00 [IST]