சுய இன்பம் காண்பதை நிறுத்தினால், சூப்பர் பவர் கிடைக்குமா? #NoFapper இயக்கம் கூறுவதென்ன?

Posted By:
Subscribe to Boldsky

சுய இன்பம் காணுதல் உடல் நலத்திற்கு, மன நலத்திற்கு, உறவுகளின் நலத்திற்கு கேடு எனவும் பல ஆய்வுகள் கூறியுள்ளன. சுய இன்பம் காணுதல் உடலுக்கு ஆரோக்கியம் என்றும் பல ஆய்வுகள் கூறியுள்ளன. இன்னும் சில ஆய்வுகளில் எந்தெந்த வயது ஆண்கள், எத்தனை முறை சுய இன்பம், உடலுறவு போன்றவற்றில் ஈடுபடலாம் என்றும் கூட கூறியுள்ளனர்.

ஆனால், சுய இன்பம் காணுதல் உடலுக்கு ஆரோக்கியம் என்று கூறினாலும், மனதுக்கு கேடானது என்று தான் கூற வேண்டும். இது மனதில் மெல்ல, மெல்ல விஷத்தன்மை அதிகரிக்க செய்யும்.

இதில் இருந்து ஆண்களை வெளிக் கொண்டு வர வேண்டும் என ஓரினச்சேர்க்கையாளர்கள் குழு ஒன்று #NoFappers இயக்கம் என்பதை துவங்கி. அதன் மூலம் ஆண்களை சுய இன்பம் கானுதலில் இருந்து எப்படி வெளிக் கொண்டு வர வேண்டும், அப்படி வெளிவருவதால் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் உணர முடியும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#NoFappers இயக்கம்!

#NoFappers இயக்கம்!

#NoFappers என்ற பெயரல் ஆண்களுக்கான இயக்கம் ஒன்று ஆன்லைனில் இயங்கி வருகிறது. இந்த குழுவை சேர்ந்த ஆண்கள், சுய இன்பம் காண்பதை தவிர்த்து வந்தால், ஆண்களுக்கு சூப்பர் பவர் கிடைக்கும் என கூறி வருகிறார்கள்.

2 இலட்சம் பேர்!

2 இலட்சம் பேர்!

இந்த #NoFappers இயக்கத்தில் இதுவரை இரண்டு இலட்சம் ஆண்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். இவர்கள் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை, சுய இன்ப ஈடுபாடுகளில் செயல்படுவதை, செக்சுவல் ரீதியான செயல்களை தவிர்த்து வருகிறார்கள். இவர்கள் சுய கட்டுப்பாட்டை எப்படி அதிகரித்துக் கொள்வது எனவும், இதன் மூலம் எப்படி சூப்பர் பவர் ஈட்டுவது என்றும் இயங்கி வருகிறார்கள்.

Fapstronauts

Fapstronauts

Astronauts (விண்வெளி வீரர்கள்) போல, இந்த #NoFappers இயக்கத்தின் ஆண்கள் தங்களை Fapstronauts என்று அழைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் சூப்பர் பவர் என கூறுவது, நல்ல கற்பனை திறன், சமூக ஈடுபாடு, தன்னம்பிக்கை அதிகரித்தல் போன்றவை ஆகும்.

அலெக்ஸ்!

அலெக்ஸ்!

32 வயது நிரம்பிய அலெக்ஸ் என்பவர், இந்த #NoFappers இயக்கத்தில் இணைந்து பிறகு தான் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறேன் என்றும். தினுமும், ஏன் வேலை இடத்திலும் எனக்கு பிடித்தமான வகையில் ஒரு நபரை கண்டால் கூட ன் சுய இன்பம் கண்டு வந்தேன். இந்த சுய இன்பம் காணுதல் என் வாழ்வின் அங்கமாக மாறி போனது. இப்போது இந்த சுய இன்பம் காணுதலை நிறுத்திய பிறகு தான் நான் இன்னும் எனது வாழ்வை சிறப்பாக வாழ துவங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.

மொபைல் செயலிகள்!

மொபைல் செயலிகள்!

சுய இன்பம் காணுதல் மட்டுமின்றி, தான் அன்றாடம் பயன்படுத்து வந்த ஃப்ளர்டிங் செயலிகள், டேட்டிங், செக்ஸ்டிங் செயலிகளை பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டேன் என அலெக்ஸ் கூறியுள்ளார். எனக்கு எப்போதெல்லாம் சுய இன்பம் காணவேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதெல்லாம் எனக்கு பிடித்தமான வேறு செயல்களில் ஈடுபட துவங்குவேன் என அலெக்ஸ் கூறியுள்ளார்.

கடந்த 95 நாட்களாக தான் சுய இன்பம் காணவில்லை என்றும். இந்த 95 நாட்களில் தனது அன்றாட வாழ்வில் நிறைய மாற்றங்கள் உணர்ந்துள்ளதாகவும் அலெக்ஸ் மேலும் கூறியுள்ளார்.

ஜாக்!

ஜாக்!

நாற்பது வயதுமிக்க ஜாக் என்பது கடந்த மூன்று வருடங்களாக சுய இன்பம் காணுதலை நிறுத்தியுள்ளார். இவர் இப்போது நிறைய தியானம் செய்கிறார். சுய இன்பம் கண்டு வந்த நாட்களையும், தற்போதைய நாட்களையும் பிரித்து கூற வேண்டும் என்றால், அது ஒரு பெரிய மாற்றம் என்கிறார் ஜாக்.

மேன்மை!

மேன்மை!

இப்போது நான் என் வாழ்வில் ஒரு மேன்மை நிலையை அடைந்துள்ளேன் என்றே கூறலாம். இப்போதெல்லாம் தினமும் தியானமும், ஆன்மீக கட்டுரைகளும் படித்து வருகிறேன். நான் இதுவரை 12 சுய மேம்பாட்டு புத்தகங்கள் வாங்கி படித்துள்ளேன். நான் தினமும் குளிர்ந்த நீரில் தான் குளிக்கிறேன்.

மொத்தமாக கூற வேண்டும் என்றால், நான் ஒரு புதிய மனிதனாக வாழ்ந்து வருகிறேன் என ஜாக் தெரிவித்துள்ளார்.

க்ரிஷ்!

க்ரிஷ்!

க்ரிஷ் ஒரு 29 வயது இளைஞன். இவர் இந்த #NoFappers இயக்கத்தில் இணைந்துள்ள புதிய நபர். தான் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்த காரணத்தால் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளார் க்ரிஷ்.

கட்டுப்பாடு!

கட்டுப்பாடு!

தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் எண்ணம் எனக்கு பிடித்துள்ளது. முக்கியமாக சுய இன்பம் காணுதலின் கட்டுப்பாட்டில் இருந்து விலக இது உதவுகிறது. முதலில் சுய இன்பம் சார்ந்த எண்ணங்களை நிறுத்து முடியவில்லை எனிலும். இப்போது எனக்கு அது அவசியமற்றதாக மாறி வருகிறது என க்ரிஷ் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

#NoFappers Movement: Will Not Masturbating Gives Men Superpower?

NoFappers Movement, Masturbating Gives Men Superpower?
Story first published: Tuesday, November 14, 2017, 15:26 [IST]