For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் பரிசோதனையின் போது காட்டப்படும் சார்ட் எப்படி உருவானது தெரியுமா?

கண்பார்வை துல்லியத்தை கண்டறிய சார்ட் பயன்படுத்தப்படுகிறது. அதனை கண்டுபிடித்தவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

|

கண் பரிசோதனைக்காக நாம் செல்லும் போது, அது என்ன பவராக இருந்தாலும் அல்லது கண்களில் வேறு ஏதேனும் கோளாறாக இருந்தாலும் சரி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சார்ட்டை காட்டி படிக்கச் சொல்வார்கள்.

சிறியது முதல் பெரியது வரை என வெவ்வேறு வடிவங்களில் எழுத்துக்கள் எண்கள் இருக்கும். எழுத்துக்களை எளிதாக படித்து விடலாம் ஆனால் கண்களின் பார்வையில் பிரச்சனை இருந்தால் அதே எழுத்துக்கள் படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.

உங்கள் சிரமத்தை அறிந்து லென்ஸ்களை மாற்றி மாற்றி எந்த லென்ஸ் அணியும் போது உங்களுக்கு சரியாக படிக்க முடிகிறது என்பதை கண்டுபிடிப்பார்கள். பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இப்போது கதை பார்வை பிரச்சனை பற்றியதல்ல சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் அந்த சார்ட் பற்றியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்டுபிடித்தது யார்? :

கண்டுபிடித்தது யார்? :

கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் அந்த சார்ட்டை உருவாக்கியது யார் தெரியுமா? பெர்டினண்ட் மோனோயெர் ( Ferdinand Monoyer) என்பவர் தான் இதனைக் கண்டுபிடித்தார்.

பிரான்ஸில் 1836 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு ஐந்து வயதாகும் போது தந்தை விட்டுச் சென்றார் தாய், இரணாடவதாக கண் மருத்துவரான விக்டர் ஸ்டியோபெர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Image Courtesy

தந்தை இன்ஸ்பிரேஷன் :

தந்தை இன்ஸ்பிரேஷன் :

புதிய தந்தையைப் போலவே தானும் ஒரு கண் மருத்துவராக வேண்டும் என்று ஆசை கொண்டு படிக்க ஆரம்பித்தார். பல்வேறு ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதினார். பல பல்கலைக்கழகங்களுக்கும் பயணித்து கண் பரிசோதனைககன டையாப்டர் முறையை கண்டுபிடித்தார்.

டயாப்டர் முறை :

டயாப்டர் முறை :

கண்ணுக்கும் எழுத்துக்கும் இருக்கும் தூரத்தை கணக்கிடுவது தான் டயாப்டர் முறை. மோனோயெர் இதனை எளிதாக கண்டுபிடிக்க ஒரு சார்ட்டை உருவாக்கினார். எழுத்துக்களை சிறியதில் இருந்து பெரியது என வெவ்வேறு எழுத்துக்கள் நடுவே சில எண்கள் என அவர் உருவாக்கியது தான் இன்று வரை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

Image Courtesy

மோனோயர் :

மோனோயர் :

தன்னுடைய பெயரான மோனோயர் என்பதை சார்ட்டில் இருக்கும்படி முதலில் உருவாக்கினார். கீழிருந்து மேலே நோக்கிச் செல்லும் எழுத்துக்கள் பெரியது முதல் சிறியது வரை இருக்கும்.

மேலே செல்ல செல்ல எழுத்துக்களின் அளவு குறைந்து கொண்டேயிருக்கும். அந்த சார்ட்டில் இடது புறத்தில் இருக்கும் முதல் எழுத்துக்களை எல்லாம் சேர்த்தால் மோனோயர் என்ற வார்த்தை வரும்.

Image Courtesy

வளர்ச்சி :

வளர்ச்சி :

மோனோயருக்குப் பிறகு அந்த சார்ட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. 1862 ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ஹெர்மன் ஸ்னெல்லன் என்பவர் எழுத்துக்களுடன் சிம்பல்களை சேர்த்தார்.

பின்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1976 ஆம் ஆண்டு சில நவீன மாற்றங்களை கொண்டு வந்தனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Inspiring story of eye chart inventor!

Inspiring story of eye chart inventor!
Story first published: Monday, September 11, 2017, 11:46 [IST]
Desktop Bottom Promotion