சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளும்! குணப்படுத்த உதவும் மருத்துவ முறைகளும்...

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

சிறுநீரகத்தில் சேரக்கூடிய அதிகப்படியான கனிம சத்துக்களும், உப்பும் கற்களாக மாறிவிடும். இந்த கற்கள் சிறுநீரகத்தின் உள்ளே இருக்கும் போது எந்த ஒரு அறிகுறியையும் வெளிபடுத்தாது. ஆனால், இது சிறுநீரகப் பாதையை நோக்கி நகரும் போது அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

திடப்பொருளாக மாறக்கூடிய பொருட்கள் சிறுநீரகத்தில் கற்களாக மாறுகின்றன. இப்படி கற்கள் சிறுநீரகத்தில் சேர்வதற்கு ஒருவரது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான்.

Symptoms Of Kidney Stones That You Need To Know, Their Treatment & Natural Remedies

அந்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், ஆட்டு இறைச்சி, ஷெல் மீன் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் குறைவான அளவில் மாமிச வகை புரோட்டின்கள், அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதை தடுக்கலாம்.

சிறுநீரக கற்கள் உருவத்தில் வேறுபட்டிருக்கும். சிறியதாக இருந்தால் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். பெரிய கற்களாக இருந்தால் வலி ஏற்படுவதோடு வேறு சில அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

இங்கே, சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை காட்டும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்கான மருத்துவ முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் இப்போது அவற்றை பற்றி பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதுகு அல்லது அடிவயிற்றில் வலி

முதுகு அல்லது அடிவயிற்றில் வலி

சிறுநீரக கற்கள் இருந்தால், அது முதுகுப் பகுதியின் ஒரு பக்கம் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த கற்கள் சிறுநீரக பாதையில் நகர்ந்து செல்லும் போது, வலி இன்னும் தீவிரமாக இருக்கும்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம்

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், துர்நாற்றத்துடனான சிறுநீர் மற்றும் இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவையும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

சரளைக் கற்கள்

சரளைக் கற்கள்

சிறுநீரக கற்கள் இருந்தால், கழிக்கும் சிறுநீரில் மிகச்சிறிய அளவிலான சரளைக்கற்கள் இருக்கும். ஆனால் இந்த கற்கள் வலி எதையும் ஏற்படுத்தாது.

குமட்டல் மற்றும் வாந்தி

குமட்டல் மற்றும் வாந்தி

சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி உணர்வை அனுபவிக்கக்கூடும். சில நேரங்களில் காய்ச்சலும் வரக்கூடும்.

 ஹைப்பர்யூரியா

ஹைப்பர்யூரியா

சிறுநீரக கற்கள் இருந்தால், அடிக்கடி அவசரமாக சிறுநீர் கழிக்க நேரிடும். இது ஒரு ஆரம்ப கால சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

தீவிர நிலையில் இருப்பதற்கான அறிகுறி

தீவிர நிலையில் இருப்பதற்கான அறிகுறி

சிறுநீரக கற்கள் முற்றிய நிலையில் இருந்தால், தாங்க முடியாத அளவில் வலியை சந்திப்பதோடு, உட்காரவோ, நிற்கவோ அல்லது படுக்கவோ முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். முக்கியமாக சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்படக்கூடும்.

சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள்:

சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள்:

அ. தண்ணீர்

ஒருவர் தினமும் அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், சிறுநீரில் உள்ள அதிகப்படியான கனிமச்சத்துக்கள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுவதோடு, ஏற்கனவே இருக்கும் சிறுநீரக கற்களும் வெளியேறிவிடும்.

 மருந்துகள்

மருந்துகள்

சிறுநீரக கற்கள் தீவிர நிலையில் இருந்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் அல்லது மாத்திரைகள், சிறுநீரக பாதையுடன், உடலில் உள்ள தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். முக்கியமாக இந்த மருந்து மாத்திரைகள் சிறுநீரக கற்களை உடைத்து, எளிதில் வெளியேறவும் செய்யும்.

ஷாக்வேவ் லித்தோட்ரிப்சி

ஷாக்வேவ் லித்தோட்ரிப்சி

இந்த சிகிச்சை பெரிய அளவில் இருக்கும் சிறுநீரக கற்களைக் கரைக்க மேற்கொள்ளப்படுவதாகும். இந்த இயந்திரத்தின் வழியே உடலில் உயர் அழுத்த ஒலி அலைகள் அனுப்பப்பட்டு, பெரிய அளவிலான சிறுநீரக கற்கள் மிகச்சிறிய அளவில் உடைக்கப்பட்டு, எளிதில் உடலில் இருந்து வெளியேற்றப்படும். .

சிறுநீரக கற்களுக்கான இயற்கை வைத்தியங்கள்:

சிறுநீரக கற்களுக்கான இயற்கை வைத்தியங்கள்:

எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

இந்த கலவை சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை ஒன்றாக கலந்து குடித்துவிட்டு, அதனைத் தொடர்ந்து 12 அவுன்ஸ் சுத்தமான நீரைக் குடிக்க வேண்டும். பின் 1/2 எலுமிச்சையை 12 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி அடிக்கடி குடித்தால், விரைவில் சிறுநீரக கற்கள் கரையும்.

ஆ. உவா உர்சி

ஆ. உவா உர்சி

இது சிறுநீரக கற்களுக்கான ஒரு பாரம்பரிய நிவாரணி. இது சிறநீரகங்களில் உள்ள தொற்றுக்களைக் குறைக்க உதவுவதோடு, சிறுநீரக கற்களை வெளியேற்றி இதுவரை சந்தித்த அசௌகரியத்தைப் போக்கும். அதற்கு இதனை தினமும் மூன்று வேளை 500 மிகி எடுக்க வேண்டும்.

சீமை சாமந்தி வேர்

சீமை சாமந்தி வேர்

இந்த வேர் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவும் மற்றும் சிறுநீரகங்களின் சாதாரண செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வை விரைவில் பெற தினமும் இருவேளை 500மிகி இதனை எடுக்க வேண்டும்.

கிட்னி பீன்ஸ்

கிட்னி பீன்ஸ்

கிட்னி பீன்ஸில் மக்னீசியம் ஏராளமாக உள்ளது. இது சிறுநீரக கற்களின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். அதற்கு சிறிது கிட்னி பீன்ஸை கொதிக்கும் நீரில் 6 மணிநேரம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர வைத்து நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.

 மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ்

சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சீக்கிரம் சிறுநீரக கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

செலரி

செலரி

செலரியில் சிறுநீர் பெருக்கி பண்புகள் உள்ளது. இது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதற்கு செலரியைக் கொண்டு டீ தயாரித்து குடிக்க வேண்டும் அல்லது செலரி விதைகளை உணவில் சேர்க்க வேண்டும்.

துளசி

துளசி

துளசி டீ சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், துளசி டீயை நாள் முழுவதும் குடித்து வந்தால், அது உடலில் கனிமச்சத்து, யூரிக் அமிலம் மற்றும் திரவங்களின் அளவை நடுநிலையாக பராமரிக்கும்.

அதற்கு 1 ஸ்பூன் துளசி ஜூஸ் உடன் சிறிது தேன் கலந்து, தினமும் என ஆறு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் சிறுநீரக பாதையில் உள்ள கற்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms Of Kidney Stones That You Need To Know, Their Treatment & Natural Remedies

Symptoms Of Kidney Stones That You Need To Know, Their Treatment & Natural Remedies
Story first published: Thursday, June 8, 2017, 8:00 [IST]