For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதத்தில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

By Suganthi Ramachandran
|

ஆயுர்வேத மருத்துவம் மிகவும் தொன்மையான முறையாகும். இந்திய துணைக் கண்டத்தில் இருந்தவர்கள் இதில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். அலோபதி மருத்துவத்தின் நவீனத்தால் ஆயுர்வேத முறையை நிறைய பேர்கள் மறந்து விட்டனர்.

அலோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள் தான் இப்பொழுது ஆயுர்வேதத்தின் சிறப்புகளை தற்போது நம்மிடையே புரிய வைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

நிறைய பேர்கள் தங்களை தாங்கி நடக்கும் பாதங்களை பற்றிய கவலை இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் உங்கள் பாதங்களை கண்டிப்பாக கவனித்து பராமரிக்க வேண்டும்.

Ayurveda Suggests This Foot Massage For Better Blood Circulation

மன அழுத்தம் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள் நிறைந்த இக்காலத்தில் ஆயுர்வேத முறைப்படி உங்கள் பாதங்களை பராமரிப்பது மற்ற பியூட்டி பொருட்களை விட சிறந்தது.

ஆயுர்வேத முறைப்படி உங்கள் பாதங்களுக்கு செய்யும் மசாஜ் உங்க ஒட்டு மொத்த உடலுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் நன்மை அளிக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆனால் அதான் உண்மை. இந்த மசாஜ் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

இந்த ஆயுர்வேத பாத மசாஜ் தான் எல்லா தெரபிக்கும் முதன்மையானது. இது பாத அப்யங்கா என்றும் இதில் பாத - பாதம், அப்யங்கா-மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய் மசாஜ் என்றும் பொருள். பாத அப்யங்கா பாதங்களை பராமரிப்பது மட்டுமில்லாமல் அதற்கு அப்பாலும் செல்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

Ayurveda Suggests This Foot Massage For Better Blood Circulation

ரிஃவ்பிளக்க்ஷோலாஜி, அக்குபஞ்சர், அக்கு ப்ரசர் மற்றும் பெடிக்யூர் போன்றவை தொடங்கியது எல்லாம் இந்த பாத மசாஜ் முறையில் இருந்து தான். இந்த பாத மசாஜ்யை உங்கள் நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நல்ல பலன் கிடைக்க மாலை மற்றும் இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன் செய்தால் நல்லது.

பாத மசாஜ் எப்படி உதவுகிறது

பாத மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து உடலில் உள்ள மூட்டு எலும்புகள் வலிமையாகவும் மற்றும் பாதத்தில் மென்மையான திசுக்கள் வலுப் பெறவும் உதவுகிறது.

இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கண்களின் ஆரோக்கியமும் மேம்பட்டு கண்பார்வை அதிகரிக்கும். பாத மசாஜ் சியாட்டிகா, பாத வெடிப்பு,தசைநார்களில் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றை சரியாக்கும். மேலும் தசைநார்,நரம்பு மண்டலம் மற்றும் உடலில் எல்லா பகுதிகளிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

மன அழுத்தம், பதட்டம் போன்றவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் அதிகரிக்கிறது. காது கேட்கும் திறனை அதிகமாக்குகிறது. மன அழுத்தம், பதட்டம், சோர்வு, வலிகள் போன்றவற்றிலிருந்து விடுதலை தருகிறது. தலைவலி மற்றும் அதிகமான டென்ஷனுக்கு இது அருமருந்தாகும்.

பாத மசாஜ் உங்கள் சருமத்தை மிருதுவாக்கும். ரிஃவ்பிளக்க்ஷோலாஜி படி இரத்த குழாய்களில் உள்ள அமைப்புகளை நீக்கி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

Ayurveda Suggests This Foot Massage For Better Blood Circulation

பாத மசாஜ் செய்முறை !!

  • பாத மசாஜ் செய்வதற்கு முதலில் பாதங்களை ஹெர்பல் பாத் எடுக்க வைக்க வேண்டும்.
  • ஒரு பெரிய அகன்ற டப்பை எடுத்துக் கொண்டு அதில் ஆயுர்வேத பொருட்களான ரோஸ் மேரி ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து சூடான தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும்.
  • பிறகு உங்கள் பாதங்களை இந்த டப்பில் சில நிமிடங்கள் மூழ்கும் படி வைத்து பிறகு அப்படியே மெதுவாக மசாஜ் பண்ணவும்.
  • மசாஜ் செய்ய கைகளை பயன்படுத்தி மிதமான அழுத்தத்தை கொடுத்து செய்யவும். மூட்டுகளில் வட்டமான இயக்கத்திலும் கால்களில் செங்குத்தான இயக்கத்திலும் மசாஜ் செய்யவும்.
  • இந்த பாத மசாஜ் பிசைதல், தட்டுதல், கிள்ளுதல் மற்றும் சாதாரண மசாஜ் போன்ற எல்லா முறைகளையும் உள்ளடக்கியது.
  • இறுதியில் பாதங்களை மெதுவாக டப்பிலிருந்து எடுத்து உலர வைக்க வேண்டும். உணர்ச்சிகளை சமநிலையாக்குவதற்கும், இரத்த மற்றும் நிணநீர் ஒட்டத்திற்கும் உதவுகிறது.
Ayurveda Suggests This Foot Massage For Better Blood Circulation

மற்ற பயன்கள் :

தூக்கமின்மையால் அவதிப்பட்டால் உங்கள் உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் கொடுத்து நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது.

இப்பொழுது நிறைய பேர்களிடம் காணப்படும் கை மற்றும் பாதம் உணர்வின்மை பிரச்சினையை சரி செய்கிறது.

மிகப் பெரிய பயன் இதில் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத எண்ணெய்கள் உங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரும். அதே நேரத்தில் கொஞ்சம் நேரமும் எடுத்து கொள்ளும் என்பதை மறவாதீர்.

English summary

Ayurveda Suggests This Foot Massage For Better Blood Circulation

Ayurveda Suggests This Foot Massage For Better Blood Circulation
Story first published: Monday, July 17, 2017, 8:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more