For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறு நீரக கற்கள் வரக்கூடாதுன்னா இந்த ஒரு சத்து ரொம்ப அவசியங்க!!

சிறு நீரக கற்களை தடுப்பதற்கும் அதனை குணப்படுத்துவதற்கும் இந்த கட்டுரையில் குறிப்புகளை காணலாம்.

By Ambika Saravanan
|

உடலில் மிக அதிகமாக இருக்கும் மினரல்களில் 3வது இடத்தை பிடிப்பது பொட்டாசியம் ஆகும். உடலில் பல செயல்பாடுகளுக்கு பயன்படும் மின்சாரத்தை வழி நடத்துவது இதன் சிறப்பான அம்சமாகும். பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.

இரத்த அழுத்தத்தை குறைப்பது, நீர்ச்சத்தை அதிகரிப்பது , வாதத்தை எதிர்த்து பாதுகாப்பது, சீறுநீரக கற்கள் வராமல் தடுப்பது, போன்றவை இதன் முக்கிய தன்மைகளாகும். பொட்டாசியத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதே இந்த பதிவாகும்.

Details about a nutrient which prevents Kidney stone

உடலில் உள்ள திரவத்தை கட்டுப்படுத்துவதும், நரம்புகளுக்கு சிக்னல் அனுப்புவதும், தசை விரிப்பை கட்டுப்படுத்துவதும் இதன் பணியாகும். 98% பொட்டாசியம், செல்களில் தான் காணப்படுகிறது. அதிலும் 80% தசை செல்களில் காணப்படுகிறது. மீதம் 20% எலும்பு, கல்லீரல் மற்றும் இரத்த அணுக்களில் காணப்படுகிறது.

தசைகள் சுருங்கி விரிவது , நரம்புகளுக்கு சிக்னல் அனுப்புவது, திரவ நிலையை சமன் செய்வது போன்ற வேலைகளுக்கு மின்சாரத்தின் பயன்பாடு அவசியம். இதற்கு பொட்டாசியம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக பயன்படுகிறது. ஒரு எலெக்ட்ரோலைட் தண்ணீரில் கரைந்து பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் மரபணுவாக மாறி மின்சார உற்பத்திக்கு உதவும். இந்த வேலையை பொட்டாசியம் செய்கிறது. ஆகவே பொட்டாசியம் அளவு உடலில் சரியான நிலையில் இருப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Details about a nutrient which prevents Kidney stone

Importance of Potassium in the prevention of Kidney stone and heart diseases
Story first published: Thursday, September 14, 2017, 16:12 [IST]
Desktop Bottom Promotion