For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் தலைவலி எந்த மாதிரியானது? உஷார்...இப்படிப்பட்ட தலைவலி இருந்தால் அது ஆபத்தானது!!

சில சமயங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். தலைவலி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம்.

By Divyalakshmi Soundarrajan
|

தலைவலி என்பது பொதுவாக காய்ச்சல், சளி, சைனஸ், உடல்சோர்வு, மன அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பார்ப்பது மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றப் பிரச்சனைகளால் வரக்கூடும். இப்படிப்பட்ட தலைவலிகள் வரும் அதற்கென மாத்திரைகளை அடிக்கடி போடுவதால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

Dangerous Signs Your Headache Is Not Normal!

ஆனால், சில சமயங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம். தலைவலி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம்.

இங்கே குறிபிட்டுள்ள விதமான தலைவலிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குத் தகுந்த மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.

வாருங்கள் எந்தெந்த தலைவலி எந்தெந்தப் பிரச்சனையின் அறிகுறி என்று இப்போது பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடி இடிப்பது போன்ற தலைவலி

இடி இடிப்பது போன்ற தலைவலி

தலைக்குள் இடி இடிப்பது போன்ற தலைவலி ஒரு நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் அது மூளையில் சிறியதாக இரத்த கசிவு ஏற்பட்டதை உணர்த்துவதாகும். இவ்வாறு அடிக்கடி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மாறுபட்ட தலைவலி

மாறுபட்ட தலைவலி

தலைவலி ஒரே மாதிரியாக இல்லாமல், வலி ஏற்ற இறக்கத்தோடு இருந்தால், அவ்வபோது ஏற்பட்டால் குருதி நாள நெளிவு அல்லது ஒற்றை தலைவலி உங்களுக்கு இருக்கலாம் என்று அர்த்தம்.

கண்களுக்குப் பின்புறமாக வலி

கண்களுக்குப் பின்புறமாக வலி

வலி தலையில் இல்லாமல் கண்களுக்குப் பின்புறமாகவோ அல்லது கண்களை சுற்றியோ இருந்தால் உங்களுக்கு க்ளாக்கோமா அல்லது சைனஸ் உள்ளதை குறிப்பதாக இருக்கலாம்.

நெற்றி வலி

நெற்றி வலி

உங்களுக்கு நெற்றியின் இரண்டுப் பக்கங்களிலும் வலி அதிகமாக இருந்தால் அது ஏதாவது ஒரு இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களுக்கு இது மிகப் பொருந்தும்.

காலையில் வரும் தலைவலி

காலையில் வரும் தலைவலி

இரவில் தூங்கும் போது மூக்கு எரிச்சல் இருந்தால் அது காலையில் எழுந்திருக்கும் போது தலைவலியை உண்டு செய்யும். இந்த தலைவலி சைனஸ் இருப்பதை குறிப்பதாக இருக்கலாம்.

பக்கவாதம்

பக்கவாதம்

தலைவலி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றால் நீங்கள் ஒரு மாதத்திற்கு மேலாக அவதிப்பட்டு வருகின்றீர்களா? எனில் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக அருக்கலாம். உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து விடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dangerous Signs Your Headache Is Not Normal!

Dangerous Signs Your Headache Is Not Normal!
Story first published: Thursday, April 6, 2017, 12:08 [IST]
Desktop Bottom Promotion