For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கனும்னா வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டு பழகுங்க!!

By Bala Karthik
|

தமனிகள் குறுகியதாக இருக்கும் போது, இதய குழாய்களில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதனாலே ஒருவரது இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த நிலை அதிகரிக்க..இதனாலே பக்கவாதம் மற்றும் ஹைபர்டென்சன் பிராப்ளம் ஒருவருக்கு ஏற்படுகிறது.

முதல் நிலை ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை ரத்த அழுத்தத்தை காட்டிலும் வேறுபட்டு காணப்படுகிறது. உங்களுக்கு இந்த ரத்த அழுத்த பிரச்சனை சுமார் ஒரு வருடத்திற்கு இருக்குமாயின்...அதனைமுதல் நிலை ரத்த அழுத்தம் என அழைக்கின்றனர். இதே பிராப்ளம், தைராய்டு பிரச்சனை, கிட்னி பிரச்சனை, அட்ரினலின் க்ளேன்ட் டுயூமர் ஆகியவையால் திடீரென வருமாயின்...அதனை இரண்டாம் நிலை ரத்த அழுத்தம் என அழைக்கின்றனர்.

ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது கொலஸ்ட்ராலே ஆகும். மற்ற சில காரணிகளாக...மன அழுத்தம், உடல் பருமன் பிரச்சனை, மோசமான டையட் பிரச்சனை, புகைபிடித்தல் பழக்கம், வைட்டமின் குறைபாடுகள், மினரல் தட்டுபாடு, அல்கஹால் ஆகியவையாலும் ஏற்படுகிறது.

இந்த குக்கும்பர் கார்லிக் சாலட், இயற்கை வைத்தியமாக அமைந்து நம்மை ஹைபர்டென்சனிலிருந்து பாதுகாக்கிறது. அவற்றை பற்றின சில தகவல்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையான பொருள்கள்:

தேவையான பொருள்கள்:

பூண்டு கிராம்புகள் - 3

வெள்ளரிக்காய் - 1

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1 தேக்கரண்டி

செய்முறை:

செய்முறை:

வெள்ளரிக்காயை நன்றாக கழுவி விட்டு...துண்டு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். பூண்டையும் அத்துடன் நறுக்கி கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து, ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை அதோடு சேர்த்துகொள்ள வேண்டும். அதன் பிறகு சில புதினா இலைகளை தூவினால் உங்களுடைய சாலட் ரெடி.

#1

#1

வீட்டிலிருக்கும் பூண்டின் நற்குணங்கள் நிறையவே என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. குறிப்பாக...இரத்த ஓட்ட பிரச்சனைகள், அதிரோஸ்கிளிரோஸ், மாரடைப்பு, இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளுக்கு இந்த பூண்டு மருந்தாக பயன்படுகிறது.

#2

#2

பூண்டுகளில் காணப்படும் அல்லிசின், இரத்த அழுத்தத்துக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது கோலஸ்ட்ராலை குறைப்பதோடு...இரத்த நாளங்கள் ரிலாக்ஷ் அடைய உதவுகிறது.

#3:

#3:

வெள்ளரிக்காயில் மேக்னிசியம், பொட்டாசியம், மற்றும் தண்ணீர் நிறையவே இருக்கிறது. உடம்பில் இருக்கும் சோடியத்தின் அளவை பேலன்ஸ் செய்ய பொட்டாசியம் தேவைப்படுகிறது. இந்த குக்கும்பர் கார்லிக் சாலட் உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

#4

#4

வெள்ளரியை தேர்ந்தெடுக்கும் பொழுது கரும் பச்சை நிற காயை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும். கடைகளில் வாங்கும் முன், நன்றாக தொட்டு பார்த்து ஹார்டாக இருக்கிறதா? இல்லை, சாப்டாக இருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்து... கடினத்தன்மை கொண்டதையே வாங்கவும் வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cucumber Garlic Salad For Hypertension

Cucumber Garlic Salad For Hypertension
Story first published: Friday, June 2, 2017, 10:06 [IST]
Desktop Bottom Promotion