For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடம்புல எந்த இடங்களிலெல்லாம் ஈஸ்ட் தொற்று உண்டாகும் னு உங்களுக்கு தெரியுமா?

அந்தரங்க பகுதியை விட மற்ற எந்த பகுதிகளில் எல்லாம் ஈஸ்ட் தொற்று உண்டாகும் என தெரியுமா? அதற்கான விடைகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

By Divyalakshmi Soundarrajan
|

ஈஸ்ட் தொற்று என்பது எவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான தொற்றுநோய். அந்தரங்க பகுதியில் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படக்கூடிய தொற்றுகள் பல்வேறு விரும்பதகாத அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடியது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட முக்கிய காரணங்கள் சுகாதார தன்மை குறைவு, நீரிழிவு, கர்ப காலம், ஹார்மோன் மாற்றங்கள்,சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்ப்பது,மன அழுத்தம், சிறுநீரகப் பாதைகளில் ஏற்படுகிற தொற்றுகள் போன்றவை தான்.

7 Places That Can Be Affected By Yeast Infection Apart From The Vagina!

ஈஸ்ட் தொற்று என்றால் அந்தரங்கப் பகுதியில் மட்டும் ஏற்படக்கூடிய நோய் தொற்று என்று பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். இது உண்மை இல்லை. ஈஸ்ட் தொற்று உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியது. உடலில் அதிகமாக வியர்கக்கூடிய பகுதி மற்றும் அதிகமாக ஈரப்பதம் இருக்கக் கூடிய பகுதிகளில் ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் உடலின் எந்தெந்த பகுதிகள் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சருமம்

சருமம்

என்ன தான் நமது சருமம் போதுமான காற்று மற்றும் ஒளியின் மீது வெளிப்பட்டாலும், சுகாதாரத்துடன் இல்லாமல், சருமத்தில் வியர்வை மற்றும் இறந்த செல்களை முறையாக சுத்தம் செய்யாமல் இருந்தால், சருமத்தில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும்.

பாதம்

பாதம்

பாதத்தை ட்ரைகோபைடான் மென்டாகுரோபைட்ஸ் என்னும் பூஞ்சை தாக்கும். அதுவும் சாக்ஸை அடிக்கடி துவைத்துப் பயன்படுத்தாமல் இருந்தால், இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

வாய்

வாய்

பொதுவாக வாயில் குழந்தைகளுக்கு தான் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். அதுவும் பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தான் இவ்விடத்தில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மார்பகம்

மார்பகம்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மார்பகங்களில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படலாம். அதுவும் குழந்தையின் வாய் மார்பகங்களைச் சுற்றியுள்ள சரும திசுக்களின் pH அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது, அவ்விடத்தில் ஈஸ்ட் வளர்ச்சி பெறும்.

உணவுக்குழாய்

உணவுக்குழாய்

புற்றுநோய் அல்லது ஆட்டோ இம்யூன் நோய்களை சரிசெய்ய உட்கொள்ளும் குறிப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவால், உணவுக்குழாயில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆசன வாய்

ஆசன வாய்

யோனியைத் தாக்கும் ஈஸ்ட் தொற்றுகள் மெதுவாக பரவி ஆசன வாயையும் தாக்கும். இதை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால், பின் தீவிர விளைவை சந்திக்க நேரிடும்.

ஆண்குறி

ஆண்குறி

ஆம், சில ஆண்களின் ஆண்குறியிலும் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். அதுவும் ஒரே உள்ளாடையை வருடக்கணக்கில் பயன்படுத்தினாலோ அல்லது ஆண்குறியை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தாலோ, ஆண்கள் இந்த பிரச்சனையை சந்திப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Places That Can Be Affected By Yeast Infection Apart From The Vagina!

7 Places That Can Be Affected By Yeast Infection Apart From The Vagina!
Story first published: Thursday, June 8, 2017, 16:59 [IST]
Desktop Bottom Promotion