For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கலுக்கு தீர்வுகளை தருகிறார்கள் இந்த அனுபவமிக்க மருத்துவர்கள்!!

|

நிறைய பேருக்கு காலையில் எழுந்து டாய்லெட்டில் போராடுவதே வேலையாக வைத்திருப்பார்கள். இதற்கு மிக முக்கிய அடிப்படை காரணங்கள் இரண்டு. ஒன்று நார்சத்து குறைவான உணவுகள், மற்றொன்று உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது.

போததற்கு பிரட் , பிஸ்கட் போன்ற பேக்கிங்க் உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது. இவையெல்லாம் உங்கள் குடலை பதம் பார்த்து டாய்லெட்டில் போராடுவதில் போய் முடியும்.

இங்கே மருத்துவர்கள் தங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை எப்படி தீர்வு காண்கிறார்கள் என சொல்கிறார்கள் கேளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல்களுக்கு இதம் அளிக்க :

குடல்களுக்கு இதம் அளிக்க :

அதிக நேரம் வேலை பிஸியிலேயே அமர்வது நல்லதல்ல. இது நான் கற்றுக் கொண்ட பாடம். இதனால் காலைக் கடன் முடிக்க நான் சில சமயம் மறந்துவிடுகிறேன்.

இதனால்தான் மலச்சிக்கல் உருவாகிறது. அதோடு மலம் கழிக்க இடுப்பு மற்றும் தொடையெலும்புகள் தளர்வாக இருப்பது முக்கியம்.

அதிக அழுத்தம் அல்லது முக்கி கழிப்பதால் எதிர்வினைகளை தந்துவிடும் என எச்சரிக்கிறார் இந்தியானா பல்கலைக் கழக இரைப்பை குடலியல் மருத்துவர் ஜேம்ஸ் ஸ்டீவன்ஸன்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

விமான பயனங்களில் அல்லது மிகவும் பிஸியான நேரங்கலில் டாய்லட்டில் அதிக நேரம் இருப்பதுபோல் மலச்சிக்கல் உருவாகும்.

இந்த மாதிரியான குறிப்பிட்ட சமயங்களில் மலச்சிக்கலில் கழித்தால், உடல் உபாதைகள் உண்டாகும். அதனால் மலமிளக்க மாத்திரைகளை உபயோகிப்பதுண்டு.

இவைகள் நீண்ட தூர விமானப் பயணம் போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே எடுத்துக் கொள்வேன் என்று கூறுகிறார் மவுண்ட் சினாய் மெடிக்கல் சென்டரின் குடலியல் மருத்துவர் எலானா மாசர்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

மலச்சிக்கல் உருவாகினால் அந்த சமயத்தில் அதிக உடற் பயிற்சி செய்வேன். இதனால் குடல்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து மலசிக்கலை சரி செய்ய முடியும் என்று கூறுகிறார் NYU மெடிக்கல் சென்டரின் உதவி பேராசிரியர் மருத்துவர் லீ ஆன் சென்

காபி அல்லது நீர் :

காபி அல்லது நீர் :

நமது உடலில் நீர்சத்து குறையும்போதும் மலச்சிக்கல் உண்டாகும். எனவே நான் அந்த சமயங்களில் அதிக நீர் குடிப்பேன். அல்லது காபி குடிப்பேன். காபி மலத்தை இலகுவாக்கிறது என சொல்கிறார் மருத்துவர் ஷில்பா மெஹ்ரா.

காரம் :

காரம் :

நான் மலச்சிக்கல் சமயத்தில் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவேன். காரமான உணவுகள் மலச்சிக்கலை போக்குகின்றன.

அதனால் நல்ல ரெஸ்டாரென்ட் போய் விரும்பியதை வாங்கி சாப்பிடுவேன் என்று ஆஸ்டியோபேதிக் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியரான நிகேத் சோன்பால் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Suggestions by doctors for constipation

What can we do when suffer from constipation?GI Doctors suggest here
Desktop Bottom Promotion