Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மெனோபாஸில் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது!
பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) என்பதை தவிர்க்க இயலாததுதான். பொதுவாய் மெனோபாஸ் 45 வயதிலிருந்து ஆரம்பிக்கும். மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்சனைகளை ஹாட் ஃப்ளாஷ் என்று கூறுவார்கள்.
கை கால், நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, காரணமில்லாமல் கோபம் வருவது, மனச் சோர்வு, அடிக்கடி வியர்த்தல் இவையெல்லாம் ஏற்படும். இதனால் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான தீர்வு கிடைத்திருக்கிறது. அதுதான் அக்குப் பஞ்சர்.

அமெரிக்காவில் "வேக் ஃபாரஸ்ட் பாப்டிஸ்ட் மெடிக்கல் சென்டரில்" மெனோபாஸ் உள்ளவர்களை ஆராய்ச்சியில் ஈடுபத்தினர். இந்த ஆய்வு சுமார் ஒரு வருடம் நடந்தது.
சுமார் 45 - 60 வயது வரை மெனோபாஸ் உள்ள பெண்கள் 209 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். அவர்களை இரண்டு பிரிவாக பிரித்தனர்.
முதல் பிரிவினருக்கு முதல் 6 மாத காலம் சிறந்த அனுபவம் வாய்ந்த அக்குப்பஞ்சர் நிபுணர்களைக் கொண்டு அக்குப் பஞ்சர் சிகிச்சையை தரப்பட்டது. அடுத்த 6 மாதத்தில் சிகிச்சை தராமல் நிறுத்தப்பட்டது.
இரண்டாம் பிரிவினருக்கு முதல் 6 மாத காலம் சிகிச்சை எதுவும் தரப்படவில்லை. அடுத்த 6 மாத காலம் அவர்களுக்கு அக்குப்பஞ்சர் சிகிச்சை தரப்பட்டது.
ஆய்வு நடந்த ஒரு வருட காலத்தில், அவர்களின் மெனோபாஸ் பிரச்சனைகளின் தீவிரம் குறித்து டைரியில் குறித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின் இறுதியில் தெரிய வந்தது என்னெவென்றால், முதல் பிரிவினருக்கு, முதல் 6 மாத அக்குப்பஞ்சர் சிகிச்சையில், அவர்களின் பிரச்சனைகள் குறைந்ததாகவும், அடுத்த ஆறு மாத காலத்தில், சிகிச்சை இல்லாமல் இருந்தும், மெனோபாஸ் பிரச்சனைகள் ஏதும் உருவாகவில்லை எனவும் கூறியுள்ளனர்.
இரண்டாம பிரிவினருக்கு, முதல் ஆறு மாத காலத்தில் மெனோபாஸ் பிரச்சனைகள் அதிகமானதாகவும், அடுத்த ஆறு மாத காலத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையினால், பிரச்சனைகள் படிப்படியாக குறைந்தது எனவும் கூறியுள்ளனர்.
ஆய்வு முடிவில் ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்னெவெனில், அக்குப்பஞ்சர் சிகிச்சை ஒரு தடவை செய்து கொண்டால், ஆறு மாத காலம் மெனோபாஸ் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.
அதற்கு பின் பிரச்சனைகள் தொடராமல் இருக்க 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த சிகிச்சை செய்தால் நல்லது என்று கூறியுள்ளனர்.
திருநெல்வலி இருட்டு கடை அல்வா..!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


