Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
நீண்ட நேரம் வேலை செய்வது பெண்களை எப்படி பாதிக்கிறது என்று விளக்குகிறார் எலும்பு மருத்துவர் மோகன் குமார்...!
பெண்களின் வாழ்க்கை என்பது கணிக்க சஸ்பென்ஸ் படம் பார்ப்பது போல. ஏனெனில் அவர்களின் வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்பது அவர்களுக்கேத் தெரியாது. நமது சமூக அமைப்பில் துரதிர்ஷ்டவசமாக குடும்பத்தை வழிநடத்தும் கடினமான பொறுப்பு பெண்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக பெண்களின் வாழ்க்கை சமையலறையிலேயே கழிந்து விட்டது. பல போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் பிறகு கடந்த ஒரு நூற்றாண்டாகதான் பெண்களின் உலகம் சமையலறைத் தாண்டி விரிவடைந்துள்ளது. ஆனால் தற்போதும் பெண்களின் உலகில் குடும்ப பாரம் தவிர்க்க முடியாததாக உள்ளது.

பெண்கள் வீடு தாண்டி அலுவலகம் வரை வந்து விட்டாலும் அவர்களின் வேலைப்பளு குறையவேயில்லை. அலுவலகத்தில் வேலை செய்தாலும் வீட்டை நிர்வகிக்கும் வேலையும் அவர்களே செய்ய வேண்டும். சொல்லப்போனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் டபுள் ஷிப்ட் பார்க்கிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே அதை செய்கிறார்கள். எனவே அதை மதிக்க வேண்டியது அவசியம். பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் வேலைக்கு இடையே சமநிலைப்படுத்த முயற்சிப்பதில் நேரத்தை செலவிடுவதால் அவர்களின் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள்.
நீண்ட நேரம் வேலை பார்ப்பது பெண்களின் உடல் ஆரோக்கியத்திலும் மற்றும் மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பெண்களே உங்களின் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் வேலை நேரத்தை பற்றி சிந்திக்க வேண்டிய நேரமிது. நீண்ட வேலை நேரம் பெண்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் எலும்பு ஆரோக்கிய நிபுணர் மோகன்குமார்.
கடுமையான சோர்வு
போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுமுறை, நீரேற்றமின்மை போன்ற பிரச்சினைகளால் பொதுவாக அனைவருக்கும் சோர்வு ஏற்படலாம். குறிப்பாக பெண்கள் இதுபோன்ற சிக்கலால் அதிகமாக பாதிக்கப்படலாம். பெண்கள் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்தால் அவர்கள் தூக்கத்தையும், ஊட்டச்சத்தையும் இழக்கிறார்கள். தங்கள் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளால் அவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் இழக்கிறார்கள். இதனால் அவர்கள் எளிதில் நீரிழிவு நோய், தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகலாம். இது எளிதில் அவர்களை சோர்வுக்கு ஆளாக்கும்.
மாதவிடாய் பிரச்சினைகள்
தற்போது பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை மாதவிடாய் பிரச்சினை. காலதாமதமான மாதவிடாய், PCOD, குறைவான மாதவிடாய் போன்ற பல பிரச்சினைகளை பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதற்கு பல சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். அதில் நீண்ட நேர வேலை முக்கிய காரணமாக இருக்கலாம். PCOS உள்ள பெண்களுக்கு உடல் பருமன், டைப் II சர்க்கரை நோய், இதய நோய், மற்றும் மலட்டுத்தன்மை போன்ற சீரியஸான பிரச்சினைகள் ஏற்படலாம்.
மன அழுத்த பிரச்சினைகள்
நீண்ட நேர வேலை பெண்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மட்டுமின்றி மனரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதிக வேலைப்பளுவால் பெண்கள் கடுமையான மனசிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அன்றாட வாழ்க்கையின் தேவைகளைக் கையாளும் ஆற்றல் தன்னிடம் இல்லையென்று அவர்களின் மூளை உணரும்போது, அது அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதனால் அவர்கள் எப்போதும் கோபமாகவும், சோகமாகவும், மனசோர்வாகவும் காணப்படுவார்கள்.
செரிமானப் பிரச்சினைகள்
செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. நீண்ட நேர வேலையும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வேலைப்பளு அதிகமாக இருக்கும் போது பெண்கள் தங்கள் உணவில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. இதனால் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகிறது. இது அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.
எலும்பு பிரச்சினைகள்
நீண்ட நேர வேலையால் ஏற்படும் முக்கியப் பிரச்சினை எலும்புகள் பலவீனமடைவது. குறிப்பாக 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும். இதேநேரத்தில் நீண்ட நேர வேலைப்பளு அவர்களின் முதுகெலும்பையும், மூட்டுகளையும் நேரடியாக பாதிக்கும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது முதுகெலும்பை விரைவில் பலவீனமாக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
