For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பூவோட சாறு இத்தன நோயையும் தீர்க்குமாம்... ட்ரை பண்ணிப் பாருங்க...

|

பொதுவாக கிரேன்ஸ்பில் என்று அழைக்கப்படும் ஜெரனியம் தாவரம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த தாவரத்தின் இலைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இந்த இலைகளிலிருந்து சாற்றை எடுத்து நீராவியாக்கி பெலர்கோனியம் கிரோவியோலென்ஸ் மூலம் ஜெரனியம் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.

Science-backed Health Benefits Of Geranium Oil

ஜெரனியம் எண்ணெயில் யூஜெனோல், லினினூல், சிட்ரல், டெர்பினோல், மென்டோன், சபினீன், சிட்ரோனெல்லோல், ஜெரனியோல், மிர்டெனோல், சிட்ரோனெல்லில் ஃபார்மேட் மற்றும் ஜெரனிக் அமிலம் போன்ற வேதியியல் கூறுகள் அடங்கியுள்ளன .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசை வலியை நீக்க

தசை வலியை நீக்க

வீங்கிய மூட்டுகள், தசை வலி மற்றும் பிடிப்புகள் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெற அரோமோதெரபியில் இந்த ஜெரனியம் எண்ணெய் பொதுவாக பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

5 சொட்டுகள் ஜெரனியம் எண்ணெய்யுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து மூட்டுகளில் மசாஜ் செய்து வாருங்கள். மூட்டு வலி, தசை வலி குணமாகும்.

MOST READ: உலக செப்சிஸ் தினம்: ஜெயலலிதாவின் ரத்தத்தில் கலந்தது இந்த கிருமி தானாம்...

மன அழுத்தம் போக்குதல்

மன அழுத்தம் போக்குதல்

ஜெரனியம் எண்ணெய் மூளைக்கு அமைதி மற்றும் ரிலாக்ஸை தருகிறது. இதனால் பயம், அனிஸிட்டி மற்றும் மன அழுத்தத்தை போக்க முடியும். அதே மாதிரி கருவுற்ற பெண்கள் இந்த எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து வந்தால் பிரசவம் பற்றிய பயம் அவர்களுக்கு இருக்காது.

நரம்பு சம்பந்தமான நோய்கள்

நரம்பு சம்பந்தமான நோய்கள்

ஜெரனியம் எண்ணெய் ஆன்டிநியூர இன்ஃப்ளமேட்டரி விளைவுகளைக் கொண்டுள்ளது. இதனால் இது அல்சைமர் நோய், பார்கின்சன் நோய், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்க்லரோசிஸ் போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. ஜெரனியம் எண்ணெய் அதிக செறிவில் சிட்ரோனெல்லோல் இருப்பதால் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை குறைக்கிறது. இதனால் நோய்கள் குணமாகிறது.

 தோல் பிரச்சனைகள்

தோல் பிரச்சனைகள்

ஜெரனியம் எண்ணெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தோல் எரிச்சல், சரும தொற்று மற்றும் முகப்பருக்களை போக்குகிறது.

நீரிழிவு நோயை தடுக்க

நீரிழிவு நோயை தடுக்க

இந்த ஜெரனியம் நோய் டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது.துனி சியா ஜெரனியம் ஹைபர்கிளைசிமியாவை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இந்த எண்ணெய்யில் உள்ள மைக்ரோபியல் தன்மை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய்கள் நம் உடலை தாக்காமல் தடுக்கிறது.

MOST READ: கோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சனி - யாருக்கு யோகம் வரும்

சிறுநீர் போக்கை அதிகரிக்க

சிறுநீர் போக்கை அதிகரிக்க

இந்த ஜெரனியம் எண்ணெய் இயற்கையிலயே டையூரிடிக் தன்மை வாய்ந்தது. இதனால் உங்களுக்கு சிறுநீர் போக்கு நன்றாக இருக்கும். இதனால் உடம்பில் உள்ள நச்சுக்கள், சர்க்கரை, சோடியம் மற்றும் உலோகக் கழிவுகள் எல்லாம் வெளியே வந்து விடும்.

மாதவிடாய் அறிகுறிகள்

மாதவிடாய் அறிகுறிகள்

இந்த ஜெரனியம் எண்ணெய் பெண்களின் மாதவிடாய் காலங்களில் பெண்களின் உமிழ்நீர் சுரப்பு வழியாக ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இந்த ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் மற்றும் முந்தைய மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அறிகுறிகளை போக்குகிறது.

நாசி வெஸ்டிபுலிடிஸ் சிகிச்சை

நாசி வெஸ்டிபுலிடிஸ் சிகிச்சை

வெஸ்டிபுலிடிஸ் என்பது புற்றுநோய் மருந்து சிகிச்சையுடன் இணைக்கப்பட்ட ஒரு முறை. இந்த ஜெரனியம் எண்ணெய் மூக்கில் ஏற்படும் வறட்சி, வலி, புண்கள், இரத்த போக்கு, ஸ்கோப்பிங் போன்ற அறிகுறிகளைக் குறைக்கும்.

ஷிங்கிள்ஸ் வைரஸ் தொற்று

ஷிங்கிள்ஸ் வைரஸ் தொற்று

ஷிங்கிள்ஸ் என்பது நரம்பு இழைகள் மற்றும் நரம்புடன் இணைந்து இருக்கும் சருமத்தில் ஏற்படும் ஒருவகை வலி. இது போஸ்டெர்பெடிக் நரம்பியல் விளைவை உண்டாக்குகிறது. இதற்கு ஜெரனியம் எண்ணெய்யால் ஆன க்ரீம்களை பயன்படுத்தும் போது இந்த நரம்பியல் வலி குறையும்.

சுவாச தொற்று

சுவாச தொற்று

இந்த ஜெரனியம் எண்ணெய்யைக் கொண்டு சலதோஷம் போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம். கடுமையான ரைனோசினுசிடிஸ் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சைனஸ் தொற்று போன்றவற்றிலிருந்து விடுபட ஜெரனியம் உதவுகிறது.

MOST READ: மரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...

பூச்சி கடித்தலுக்கு மருந்து

பூச்சி கடித்தலுக்கு மருந்து

ஜெரனியம் எண்ணெய்யை பூசிக் கொண்டால் பூச்சிக் கடியிலிருந்து தப்பிக்கலாம். ஜெரனியம் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சருமத்தில் தடவிக் கொண்டால் உங்களை பூச்சிகள் கடிக்காது. இது ஒரு பூச்சு விரட்டியாக செயல்படுகிறது.

அழற்சியை போக்குதல்

அழற்சியை போக்குதல்

ஆய்வின் படி ஜெரனியம் எண்ணெயில் உள்ள சிட்ரோனெல்லோல் அழற்சியை போக்குகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை சரும எரிச்சலை போக்கும்.

தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம்

தோல் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம்

ஜெரனியம் எண்ணெய் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதன் மூலமும், முகப்பரு, தோல் அழற்சி மற்றும் பிற தோல் நோய்களைக் குறைப்பதன் மூலமும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் தலையில் எண்ணெய் சுரப்பை சமநிலைப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இந்த எண்ணெய்யை பயன்படுத்தும் சிலருக்கு சொறி அல்லது எரியும் உணர்வு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் இது பாதுகாப்பான ஒன்றாகவே உள்ளது.

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்?

இந்த எண்ணெய்யை தனியாக பயன்படுத்த கூடாது. எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஜோஜோபா ஆயில் மற்றும் எஸன்ஸ்சியல் எண்ணெய்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

MOST READ: செல்வந்தர்களாக்கும் சோடசக்கலை நேரம்: நினைத்தது நிறைவேறும்

எண்ணெய் தயாரிப்பது எப்படி?

எண்ணெய் தயாரிப்பது எப்படி?

12 ஜெரனியம் இலைகளை எடுத்து நன்றாக நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இதை மிக்ஸியில் போட்டு நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு சில மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இப்பொழுது தேங்காய் எண்ணெய் அல்லது எதாவது ஒரு எண்ணெயுடன் இந்த இலைச்சாற்றை சேர்த்து கலக்குங்கள். 2 வாரங்கள் அப்படியே கலக்கி வையுங்கள். இரண்டு வாரங்கள் கழித்து எண்ணெய்யை மட்டும் வடிகட்டி ஒரு காற்று புகாத ஜாரில் அடைத்து பயன்படுத்தி வாருங்கள். ஆரோக்கியமான நன்மைகளை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Science-backed Health Benefits Of Geranium Oil

Commonly known as cranesbill, geranium is a popular garden plant that has medicinal value. The leaves of the plant are known to possess medicinal properties.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more