For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பூ பார்த்திருக்கிங்களா? ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...

பார்க்க அழகாக இருக்கும் பாரிஜாத பூவில் என்னென்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

|

நம்ம எல்லாருக்கும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பற்றி தெரிந்திருக்கும். தேசிய கீதம் தவிர நிறைய கவிதைகளை இயற்றிய இவர் தன்னுடைய கவிதைகளில் இந்த பாரிஜாத மலர்களைப் பற்றி வர்ணித்துள்ளார். வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பார்த்தவுடனே மனதை கொள்ளை கொல்லும் இந்த பாரிஜாத மலர் இந்திய மக்களுக்கு பிரசித்தி பெற்ற ஒன்று.

இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு இதன் மருத்துவ குணங்கள் சாலச் சிறந்தது. இந்த பாரிஜாதம் பொதுவாக இரவில் பூக்கும் மல்லிகை என்று அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணத்தால் நிறைய நன்மைகளை நமக்கு தருகிறது.

Lesser-known Health Benefits & Uses Of Parijat

நிக்டாண்டஸ் ஆர்பர்-ட்ரிஸ்டிஸ் என்ற அறிவியல் கொண்ட இது நைக்டான்தெஸ் இனமாகும். இது நறுமண மணம் கொண்ட சிறிய மரம். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும்.பூக்களில் தண்டு ஆரஞ்சு வண்ணத்துடன் நான்கு முதல் எட்டு இதழ்கள் கொண்டு விரிந்து காணப்படும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் நம் உடல் உபாதைகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

பாரிஜாத இலைகள் மற்றும் பூக்களில் பென்சோயிக் அமிலம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரோட்டின், பிசின், அஸ்கார்பிக் அமிலம், மெத்தில் சாலிசிலேட், டனாட் அமிலம், ஓலியானோலிக் அமிலம் மற்றும் ஃபிளவனோல் கிளைகோசைடு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

MOST READ: முடி நிறைய கொட்டுதா?... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...

உடல் நல நன்மைகள்

உடல் நல நன்மைகள்

இதன் இலைகள் மற்றும் பூக்கள் வலியை குறைப்பதிலிருந்து வீக்கத்தை குறைப்பது வரை பயன்படுகின்றன.

அழற்சியை குறைக்க

அழற்சியை குறைக்க

இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அழற்சியை போக்க பயன்படுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், பென்சோயிக் அமிலம் மற்றும் கரோட்டீன் போன்றவை அழற்சியை போக்குகிறது. பாரிஜாத இலைகளை நீராவியில் வேக வைத்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை அலற்சி உள்ள பகுதியில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை.

இரண்டு மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் மற்றும் நான்கைந்து சொட்டு பாரிஜாத எண்ணெய்யை கலந்து சூடு படுத்துங்கள். இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யுங்கள். அலற்சி குணமாகும்.

காய்ச்சலை குணப்படுத்த

காய்ச்சலை குணப்படுத்த

பாரிஜாத இலைகள் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. மலேரியா மற்றும் டெங்கு போன்ற காய்ச்சலுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி பைரிடிக் தன்மை காய்ச்சலை குறைக்க பயன்படுகிறது. பாரிஜாத இலைகளிலிருந்து பெறப்படும் சாறு காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 மில்லி ஆலிவ் ஆயில் உடன் 2 சொட்டுகள் பாரிஜாத எண்ணெய்யை கலந்து பாதங்களில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் உடனே உடம்பு சூடு தணிந்து காய்ச்சல் குணமாகி விடும்

கீழ்வாதத்தை கட்டுப்படுத்த

கீழ்வாதத்தை கட்டுப்படுத்த

இதன் இலையிலுள்ள ஆன்டி ஆர்த்ட்ரிக் பொருட்கள் கீழ்வாத நோயைக் குணப்படுத்த பயன்படுகிறது. இது வயதானவர்களுக்கு மட்டும் பயனளிப்பதில்லை. இளைஞர்கள் கூட கீழ்வாதத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

5-6 பாரிஜாத இலைகளை நசுக்கி 2 மில்லி தேங்காய் எண்ணெய்யில் கலந்து கொள்ளுங்கள். இதை ஆர்த்ரிட்ஸ் உள்ள பகுதியில் அப்ளே செய்யுங்கள்.

ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்கிறது

ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தடுக்கிறது

நமது உடலில் தீவிரமான சேதங்கள் மற்றும் குறைபாடுகளை போக்க பாரிஜாத இலைகள் பயன்படுகின்றன. இதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க முடியும்

பயன்படுத்தும் முறை

20-25 பாரிஜாத இலைகளை அரைத்து 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். தண்ணீர் அரைப்பங்காக வற்றும் வரை சூடுபடுத்த வேண்டும். அதை வடிகட்டி 3 பங்காக பிரித்து கொள்ளுங்கள். இதை காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் குடித்து வாருங்கள். சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். இப்படியே 2 மாத காலம் குடித்து வந்தால் நன்மை உண்டாகும்.

MOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...

இருமலை குணப்படுத்த

இருமலை குணப்படுத்த

பாரிஜாத பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் எத்தனால் இருமலை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த எத்தனால் சுவாச குழாய்கள் மற்றும் தொண்டை தசைகளை விரிவாக்கம் செய்து சளியை வெளியேற்றி இருமலை குணமாக்குகிறது. ஆஸ்துமா போன்றவற்றிற்கும் சிறந்த தீர்வளிக்கும்.

பயன்படுத்தும் முறை

10-15 பாரிஜாத இலைகளை போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதனுடன் இஞ்சி அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள். 5-7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி இந்த தண்ணீரை குடித்து வந்தால் இருமல் நின்று விடும்.

மலச்சிக்கல் போக்க

மலச்சிக்கல் போக்க

பாரிஜாத இலைகள் மலமிளக்கியாக செயல்படுகிறது. இது மலத்தை இலகுவாக்கி எளிதாக வெளியேற்றி விடும். இதிலுள்ள மருத்துவ குணங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது

பயன்படுத்தும் முறை

பாரிஜாத இலைகளை போட்டு டீ தயாரித்து அதை ஒரு நாளைக்கு ஒரு முறை என பருகி வாருங்கள். மலச்சிக்கல் இனி இருக்காது.

நோயெதிப்பு சக்தியை மேம்படுத்துதல்

நோயெதிப்பு சக்தியை மேம்படுத்துதல்

இதன் இலைகளிலுள்ள எத்தனால் நோயெதிப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ஹூயுமரல் மற்றும் செல் ஆன்டி பாடிகளை தூண்டுவதன் மூலம் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பயன்படுத்தும் முறை

20-25 பாரிஜாத இலைகளை அரைத்து 300 மில்லி லிட்டர் நீரில் கலந்து சூடுபடுத்துங்கள். தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு 3 பகுதியாக பிரித்து கொள்ளுங்கள். இதை காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் குடித்து வாருங்கள். சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பாக குடிக்க வேண்டும். இப்படியே 2 மாத காலம் குடித்து வந்தால் நோயெதிப்பு சக்தி அதிகரிக்கும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

இந்த பாரிஜாத இலைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இந்த இலைச்சாற்றில் உள்ள ஆன்டி டயாபெட்டிக் தன்மை உயர் சர்க்கரை அளவை குறைக்கிறது. இது குறித்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கவனத்தில் வைக்க வேண்டியவை

இந்த மூலிகையை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

இதர நன்மைகள்

இதர நன்மைகள்

பதட்டம் போக்குகிறது

குடல் புழுக்களை போக்குகிறது

மலேரியா விற்கு சிகிச்சை அளிக்கிறது

காயங்கள் மற்றும் எலும்பு முறிவு போக்குகிறது

சுவாச பிரச்சனைகளை எதிர்த்து போரிடுகிறது

பேன்கள், வழுக்கை மற்றும் பொடுகை குணப்படுத்த பயன்படுகிறது

பல் பிரச்சனை அதாவது ஸ்கர்வியை தடுக்கிறது

அசிட்டிட்டி மற்றும் டிஸ்பெஸியாவை தடுக்கிறது

மாதவிடாய் வலியை குறைக்கிறது.

பயன்கள்

பயன்கள்

சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் பாரிஜாத இலைகளை பேஸ்பேக்காக பயன்படுத்தலாம்

பாரிஜாத மலர்கள் துணிகளுக்கு மஞ்சள் சாயம் தயாரிக்க பயன்படுகிறது

உலர்ந்த பூக்கள் மற்றும் வறுத்த புதிய இலைகள் அஸ்ஸாமி உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன

பாரிஜாத மலர் எண்ணெய்கள் வாசனை திரவியமாக பயன்படுகிறது.

இதன் பூக்கள் ஊதுபத்தி போன்ற நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது

பாரிஜாத விதைகள் அலோபீசியா மற்றும் பொடுகுத் தொல்லையை ஒழிக்க பயன்படுகிறது.

இலைகள் தலையில் உள்ள பேன்களை விரட்ட பயன்படுகிறது

இலைகள் காயங்களை குணப்படுத்த பயன்படுகிறது.

MOST READ: அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி தரப்போற ராஜயோகம் எந்த ராசிக்குனு தெரியுமா?

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

அதிகமான அளவில் பாரிஜாத இலைகளை எடுத்துக் கொள்ளும் போது குமட்டல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Lesser-known Health Benefits & Uses Of Parijat

Scientifically termed as Physalis philadelphica, tomatillos are often confused with tomatoes despite the difference between fruits/vegetables. Tomatillos are commonly termed as Mexican tomato, husk tomato, or husk cherry and are bright green in colour. The fruits of tomatillos are covered in a brown husk, which breaks off from the fruit when it ripens
Desktop Bottom Promotion