Just In
- 1 hr ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
- 2 hrs ago
சத்தான... கார்த்திகை பொரி உருண்டை
- 2 hrs ago
நாம படத்துல பார்த்த டைனோசர் எல்லாமே பொய்யா? உண்மையான டைனோசர்கள் எப்படி இருந்துச்சு தெரியுமா?
- 3 hrs ago
40 வயதிற்கு மேல் தசை பயிற்சிகளை செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்!
Don't Miss
- News
அபாயம்.. அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும்.. அமெரிக்கா ஆணையம் பகீர் பரிந்துரை!
- Technology
அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது?
- Movies
சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி!
- Finance
அதோ அந்த டாப்புக்கு வந்துக்கிட்டு இருக்கேன்..! கதி கலங்க வைக்கும் முகேஷ் அம்பானி வளர்ச்சி..!
- Automobiles
சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...
- Education
8-ம் வகுப்பு தேர்ச்சியா? தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி!
- Sports
கிரிக்கெட்னா பவுலிங் வரும்.. பேட்டிங் வரும்..பாம்புமா வரும்..ரஞ்சிப் போட்டியில் ரகளை செய்த "நாகராஜா"
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...
ஒரு பொதுவான தோட்டத்தில் மலரும் மலர்களின் குணப்படுத்தும் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இது ஒரு அதிசயம் போல் தோன்றலாம், ஆனால் பர்மிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஃபீவர்ஃபு (டானாசெட்டம் பார்த்தீனியம்) புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மற்றும் லுகேமியா செல்களை அழிக்க முடியும் என்று தெரியவந்தது.
புற்றுநோய்க்கு எதிராக போராட புதிய மருந்துகளை உருவாக்க இந்தச் செடி. இப்போது பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஃபீவர்ஃபியூவின் புற்றுநோய் எதிர்ப்பு கலவை பற்றிய ஆராய்ச்சி மெட்செம் காம் இதழில் வெளியிடப்பட்டது.

'காய்ச்சல் குறைப்பான்'
'காய்ச்சல் குறைப்பான்' என்றும் அழைக்கப்படும் ஃபீவர்ஃபு பற்றிய ஆராய்ச்சியில், இது ஒற்றைத் தலைவலி, காய்ச்சல் மற்றும் பிற வலிகளுக்கு சிகிச்சையளிக்க நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ தாவரமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
MOST READ: உடல்உறுப்பு தானம் செய்ய என்ன செய்ய வேண்டும்? சட்டம் என்ன சொல்கிறது?

ஆராய்ச்சி
பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஃபீவர்ஃபு தாவரத்தின் இலைகளிலிருந்து 'பார்த்தினோலைடு' என்ற கலவையை பிரித்தெடுத்து, புற்றுநோய் செல்களைக் கொல்லுவதில் திறமையாக இருக்கக்கூடும் என்பதற்காக ஒரு கலவையை வடிவமைத்தனர்.

புற்றுநோய் எதிர்ப்புத் திறன்
பார்த்தினோலைடு பல ஆண்டுகளாக விசாரணைக்கு உட்பட்டது மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த கலவைக்கு புற்றுநோய் எதிர்ப்புத் திறன் இருப்பதாக சந்தேகித்தனர். ஆனால், இதன் இலைகளிலிருந்து பயனுள்ள அளவுகளில் கலவை பிரித்தெடுக்கும் செயல்முறை விலை உயர்ந்தது மற்றும் கடினமானது, மற்றும் மிக உயர்ந்த அளவிலான பார்த்தீனோலைடு, தாவரத்தின் பூக்கும் கட்டத்தில் தான் காணப்படுகிறது. .

மருந்தியல் பண்புகள்
ஃபீவர்ஃபு செடியில் இருந்து கலவை பிரித்தெடுக்கப்பட்ட பிறகு, அது சுத்திகரிக்கப்பட்டு, புதிய வடிவமாக மாற்றப்படுகிறது, இதனால் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதற்கான திறமையான மருந்தாக இது செயல்பட முடிகிறது. ஏறக்குறைய, 76 வடிவங்கள் செய்யப்பட்டன, அவற்றில் ஒரு வடிவத்திற்கு மட்டும் நல்ல உயிர் கிடைக்கும் தன்மை மற்றும் சிறந்த மருந்தியல் பண்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்பு புற்றுநோய்
அதன்பிறகு, விஞ்ஞானிகள் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் ஒருவகை புற்றுநோயான நாட்பட்ட லிம்போசைடிக் லுகேமியா (சி.எல்.எல்)க்கு எதிரான கலவையின் சோதனையைத் தொடங்கினர். சோதனை மிகவும் வெற்றிகரமாக இருந்தது, மேலும் பயனுள்ளதாகவும் காணப்பட்டது.
MOST READ: இவர் ஜெட் வேகத்தில் செல்லும் ஹோவர்பேர்டை கண்டுபிடிச்சிருக்காரு... எவ்ளோ வேகம் தெரியுமா?

உயிரைக் கொல்லும் புற்றுநோய்
"இந்த ஆராய்ச்சி முக்கியமானது, ஏனெனில் இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் அணுகக் கூடியதாக இருக்கும் பார்த்தீனோலைடை உற்பத்தி செய்வதற்கான வழியை இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம், மேலும் அதன் 'மருந்து போன்ற' பண்புகளை மேம்படுத்தி புற்றுநோய் செல்களைக் கொல்ல வழிகளையும் அறிந்து கொள்ள முடியும்.
உயிரைக் கொல்லும் புற்றுநோயை எதிர்த்து செயலாற்றும் தன்மை இந்த பார்த்தீனோலைட்டுக்கு உள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான நிரூபணம் "என்று ஆய்வின் ஆசிரியரான ஜான் ஃபோஸி கூறுகிறார்.
இந்தக் கலவையை உயிருள்ள விலங்குகள் மற்றும் பிற மனிதர்களில் பரிசோதிக்க அவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.