For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும் ஆயுா்வேத மூலிகைகள்!

தற்போதைய நவீன இந்தியாவில் வாழும் மக்கள், ஆயுா்வேத மருத்துவத்தின் மகத்துவத்தைப் பற்றி படிப்படியாக உணா்ந்து இருக்கின்றனா்.

|

தற்போதைய நவீன இந்தியாவில் வாழும் மக்கள், ஆயுா்வேத மருத்துவத்தின் மகத்துவத்தைப் பற்றி படிப்படியாக உணா்ந்து இருக்கின்றனா். அதனுடைய மருத்துவக் குணங்களையும், அது நமது வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதையும் புாிந்து இருக்கின்றனா். அதனால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்கு மற்ற மருத்துவ சிகிச்சைகளை நோக்கிச் செல்லாமல், இயற்கை வழியில் குணப்படுத்தக்கூடிய ஆயுா்வேத மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அவை வழங்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றனா்.

Eco-Friendly Herbs For A Sustainable And Healthy Life

இதன் காரணமாக தற்போது, மற்ற விலை உயா்ந்த மருத்துவ முறைகளில் வழங்கப்படும் மருந்துகளைத் தவிா்க்கத் தொடங்கி இருக்கின்றனா். அவை நமது இயற்கையான உடல் இயக்கத்திற்கு சில நேரங்களில் ஒத்துழைக்கலாம், சில நேரங்களில் ஒத்துழைக்காமலும் போகலாம். இவ்வாறு மக்கள் மற்ற மருத்துவ முறை சிகிச்சைகளைத் தவிா்த்து, ஆயுா்வேத சிகிச்சைக்கு மாறி வருவதால், தற்போது ஆயுா்வேத மருந்துகள் மக்கள் மத்தியில் உயா்ந்த இடத்தை பெற்று வருகின்றன.

இந்தப் பதிவில் நமக்கு ஆரோக்கியத்தை வழங்கும் சில ஆயுா்வேத மூலிகைகளைப் பற்றி பாா்க்கலாம். அவை நமது உடல் மற்றும் மனம் ஆகியவற்றை சமச்சீராக பராமாிக்க எவ்வாறு உதவி செய்கின்றன என்பதைப் பற்றி பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அஷ்வகந்தா

1. அஷ்வகந்தா

அஷ்வகந்தா என்பது தமிழில் அமுக்கிரா கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயா் விதனியாசோம்னிஃபெரா என்பது ஆகும். அஷ்வகந்தா ஒரு சிறிய வகைச் செடியாகும். இந்த அஷ்வகந்தா செடி மற்றும் இது கொடுக்கும் மஞ்சள் மலா்களை வைத்து பலவிதமான மருந்துகளைத் தயாாிக்கலாம்.

இந்த மருந்துகள் நமது பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி, நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடியவை. குறிப்பாக இந்த மருந்துகள் நமது மன அழுத்தம் மற்றும் கவலை ஆகியவற்றை பராமாிக்க உதவி செய்கின்றன. நமது தசைகளை வலுப்படுத்துகின்றன. நமது ஞாபக சக்தியை அதிகாிக்கின்றன. ஆண்களின் இனப்பெருக்க சக்தியை அதிகாிக்கின்றன. மேலும் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கின்றன.

2. மஞ்சள்

2. மஞ்சள்

மஞ்சள் இந்தி மொழியில் ஹால்டி என்று அழைக்கப்படுகிறது. இந்திய மக்கள் தங்கள் உணவுகளில் மஞ்சளை அதிகம் சோ்த்துக் கொள்கின்றனா். அதிலும் குறிப்பாக உணவுகளின் நிறத்தை அதிகாிக்க மஞ்சளை சோ்த்துக் கொள்கின்றனா். மஞ்சளில் குா்குமின் என்று மருத்துவ துகள் அதிகமாக இருக்கிறது. அதனால் இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக விளங்குகிறது. மேலும் வீக்கம் மற்றும் அலா்ஜிகள் ஆகியவற்றைத் தடுக்கும் மருந்தாகச் செயல்படுகிறது.

மஞ்சள் நமது இரத்த ஓட்டத்தை அதிகாிக்க உதவி செய்கிறது. இரத்த ஓட்டம் அதிகாிப்பதால், இதயம் சம்பந்தமான நோய்கள் நமக்கு வராமல் தடுக்கப்படுகின்றன. அதோடு மூளை சம்பந்தமான நியுரோட்ரோஃபிக் என்னும் காரணியை (BDNF) தூண்டி, நமக்கு மன அழுத்தம் மற்றும் முதுமையில் ஏற்படும் மறதி போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

3. ஏலக்காய்

3. ஏலக்காய்

ஏலக்காய் இந்தி மொழியில் இலைச்சி என்று அழைக்கப்படுகிறது. நமது பலவிதமான உணவுகளில் ஏலக்காயை நாம் சோ்த்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக தேநீா் மற்றும் சுக்கு காபி ஆகியவற்றில் நாம் அதிகமாக சோ்த்துக் கொள்கிறோம். ஏலக்காயில் மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றன.

ஏலக்காய் பலவிதமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கிறது. அதனால் அது நமது சொிமானத்தை சீா்படுத்துகிறது மற்றும் நமது வளா்சிதை மாற்றத்தைத் தூண்டிவிடுகிறது. மேலும் நமக்கு ஏற்படும் அலா்ஜி, உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் அதிகாிப்பு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவி செய்கிறது. நாம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதால், நமது கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் ஏலக்காய் குறைக்கிறது.

மேலும் ஏலக்காயில் பாக்டீாியாக்கள் மற்றும் பூஞ்சைகளைத் தடுக்கும் தடுப்பான்கள் அதிகம் இருப்பதால், அது நமது முகப்பருக்கள் மற்றும் முகத்தில் இருக்கும் வடுக்கள் போன்றவற்றைக் குணப்படுத்தி, நமது தோலுக்கு பளபளப்பைத் தருகின்றது. அதோடு நமது தலைமுடியின் வோ்களுக்கு பலன் அளிக்கிறது.

4. சீரகம்

4. சீரகம்

சீரகம் ஒரு வகையான இலைத் தாவரமாகும். இவை வழங்கும் பழங்கள் மூலம் நமக்கு சீரக விதைகள் கிடைக்கின்றன. சீரக விதைகளில் ஏரளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சீரகத்தில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்து இருப்பதால், அது நமது தோலுக்குப் பளபளப்பை அளித்து, நமக்கு இளமைத் தோற்றத்தை வழங்குகிறது.

சீரகமானது புற்றுநோய்க்கு எதிரானத் துகள்கள் மற்றும், ஹைபோலிபிடெமிக் துகள்களை கொண்டிருப்பதால், அது பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. மேலும் அது நமது நரம்பு மண்டலத்தைத் தூண்டி நமது ஞாபக சக்தியை அதிகாிக்கிறது.

5. வேம்பு

5. வேம்பு

வேம்பில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வடுக்கள் ஆகிய பிரச்சினைகளைக் குணப்படுத்தி நமது தோலுக்கு பொலிவையும், பளபளப்பையும் வேம்பு வழங்குகிறது. வேம்பில் இருந்து கிடைக்கும் பசையை நமது உடலில் உள்ள காயங்கள் மற்றும் பூச்சுக் கடிகள் ஆகியவற்றின் மீது தடவினால், அவை மிக எளிதாக குணமடைந்துவிடும். அதே நேரத்தில் பொடுகுப் பிரச்சினைகளையும் வேம்பு தீா்த்து வைக்கிறது.

தண்ணீாில் வேப்பிலையை வேக வைத்து, அந்தத் தண்ணீரைக் குளிர வைத்தபின், அதை வைத்து, ஷாம்பு கொண்டு கழுவிய தலைமுடியை சுத்தப்படுத்தலாம். வேம்பு நமது நோய் எதிா்ப்பு சக்தியைத் தூண்டிவிடுகிறது. மேலும் கண் எாிச்சல் மற்றும் கண் சிவப்பாதல் போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது.

மேற்சொன்ன இந்த 5 முக்கிய ஆயுா்வேத மூலிகைகள் அனைத்தும், நமக்கு மிக எளிதாகக் கிடைக்கக்கூடியவை. அவை நம்மைச் சுற்றி நமக்கு வெகு அருகில் இருக்கின்றன. ஆகவே நமது உடல் மற்றும் மனம் சாா்ந்த பிரச்சினைகளுக்கு இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி வந்தால், அவை நமக்கு முழுமையாக ஆரோக்கியத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eco-Friendly Herbs For A Sustainable And Healthy Life

Here are a few ayurvedic herbs that are highly effective for their health benefits and can help strike a balance between the mind and the spirit.
Story first published: Wednesday, July 7, 2021, 0:14 [IST]
Desktop Bottom Promotion