For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

புனிதமானது என்பதையும் தாண்டி துளசி மருத்துவ பலன்களை கொண்டுள்ளதால் அது சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

|

இந்தியாவில் புனிதமான மூலிகையாக கருதப்படும் ஒன்று துளசியாகும். இதற்கு காரணம் இந்தியாவில் பல கோவில்களில் துளசி பிரசாதமாக வழங்கப்டுகிறது. புனிதமானது என்பதையும் தாண்டி துளசி மருத்துவ பலன்களை கொண்டுள்ளதால் அது பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

How to add Tulsi in your daily diet to stay healthy

குறிப்பாக ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகையை தினமும் எடுத்துக்கொள்வது உங்களுக்கு பல ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடும். இந்த பதிவில் துளசியை எப்படியெல்லாம் உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம் அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துளசி டீ

துளசி டீ

உங்கள் தினசரி உணவில் துளசியை சேர்த்து கொள்ள மிகவும் எளிதான வழி அதனை தேநீரில் கலப்பதுதான். இது திருப்திகரமான முடிவை கொடுக்கக்கூடிய முறை சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் செய்ய எளிய வழி தேநீர் தயாரிக்கும்போது அதனுடன் சில துளசி இலைகளையும் சேர்த்து தயாரிப்பதுதான். இது சளி காரணமாக உங்களுக்கு ஏற்படும் அடைப்பு மற்றும் நெரிசலை தடுக்கும். மேலும் இது உங்களுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

பழச்சாறு

பழச்சாறு

துளசி வாசனைமிக்க ஒரு மூலிகையாகும், இது அமைதி மற்றும் புத்துணர்ச்சியை வழங்குகிறது. இது உங்கள் சுவை மொட்டுகளை அதன் தனித்துவமான சுவையால் மென்மையாக்குவதை உறுதி செய்யும், அதே நேரத்தில் அதன் தனித்துவமான மருத்துவ குணங்களால் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உங்களின் குணப்படுத்தும் சக்தியையும் அதிகரிக்கும். நீங்கள் பழச்சாறு குடிக்கும் போது அதில் சில துளசி இலைகளை போட்டு குடிக்கவும். இது சுவையை அதிகரிப்பதுடன் அதன் பலன்களையும் அதிகரிக்கும்.

MOST READ: இந்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல...!

சாப்பாட்டில் துளசி

சாப்பாட்டில் துளசி

துளசி பல்வேறு முக்கிய தாதுக்களின் சரியான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது, இது நமது உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. துளசி இலையில் கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் இதிலிருக்கும் மற்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகவும் அவசியமானதாகும். எனவே சாப்பாடு செய்யும்போது அதனுடன் சில துளசி இலைகளையும் சேர்த்து வேகவைக்கவும். இது சாப்பாட்டிற்கு தனித்துவமான வாசனையையும் கொடுக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

துளசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, போலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. உங்களின் சாலட்களில் தொடர்ந்து துளசியை சேர்த்து கொள்வது அதன் அதிக பலன்களை உங்களுக்கு கொடுக்கும். நீங்கள் பழங்கள் சாப்பிடும்போதும் அதனுடன் சில இலைகளை சேர்த்து சாப்பிடுங்கள், இதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.

தேன் மற்றும் மிளகு

தேன் மற்றும் மிளகு

துளசி அதன் குணப்படுத்தும் பண்புகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. நீங்கள் தொடர்ந்து சளி மற்றும் சைனஸால் பாதிக்கப்படுபவராக இருந்தால் தேன் மற்றும் மிளகுடன் துளசி இலைகளை சேர்த்து வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் சுவாசப்பிரச்சினை தொடர்பாக இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

MOST READ: இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?

புத்துணர்ச்சி பொருள்

புத்துணர்ச்சி பொருள்

துளசி உங்கள் உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், அமைதியையும் வழங்கும். தினமும் துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுவது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் மனஅழுத்தத்தையும் குறைக்கிறது. இதில் இருக்கும் அடாப்டஜன் உங்கள் உடலில் இருக்கும் கார்டிஸோலின் அளவை சீராக்குகிறது, இது பதட்டத்தை குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to add Tulsi in your daily diet to stay healthy

Find out how to include a magical herb Tulsi in your daily diet to stay healthy.
Story first published: Tuesday, June 25, 2019, 13:52 [IST]
Desktop Bottom Promotion