For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கிடைக்கும் இந்த இயற்கை வயகரவோட விலை என்ன தெரியுமா? தெரிஞ்சா வாயப்பொளந்துருவீங்க..!

|

உலகம் முழுவதும் எப்பொழுதும் மார்க்கெட் குறையாத ஒரு பொருள் என்றால் அது வயகராதான். சொல்லப்போனால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பாலியல் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க இது தேவைப்படுகிறது. ஆனால் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் வயகரா பல பக்க விளைவுகளை கொண்டுள்ளது.

Health benefits of Yarsagumba

பக்கவிளைவுகளால் வயகராவுக்கு மாற்றாக பல பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேடல்களும் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த தேடலில் கிடைத்த ஒரு முக்கியமான இயற்கை வயகராதான் " யார்சாகும்பா" ஆகும், இதனை இமயமலை வயகரா என்று அழைப்பார்கள். இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இமயமலை வயகரா

இமயமலை வயகரா

இமயமலையில் கிடைக்கும் இந்த மூலிகையானது கம்பளிபூஞ்சை என்று அழைக்கப்படும். ஏனெனில் இதன் வடிவம் கம்பளிப்பூச்சி போன்றிருக்கும். இது இமயமலையில் மட்டுமே கிடைக்கக்கூடிய அபூர்வ மூலிகையாகும். இந்த மூலிகையை எடுப்பதற்காக பல கொலைகள் கூட நடந்துள்ளது. அதற்கு காரணம் இதன் விலையாகும், ஏனெனில் இது தங்கத்தை விட விலைமதிப்பு அதிகமானது.

யார்சாகும்பா என்றால் என்ன ?

யார்சாகும்பா என்றால் என்ன ?

யார்சாகும்பா என்பது ஒருவகையான மஞ்சள் கம்பளிப்பூச்சியாகும், இது சில பூஞ்சைகள் கலந்த கலவையாகும். மழைக்காலத்திற்கு முன்பு பூஞ்சை புல்வெளியில் வாழும் இந்த கம்பளிப்பூச்சியை தாக்குகிறது. இது தாக்கியவுடன் கம்பளிப்பூச்சி இறந்துவிடும் ஆனால் பூஞ்சை இறந்த கம்பளிப்பூச்சியின் தலையில் வளரும். இது இரண்டு முதல் மூன்று இன்ச் வளர்ந்து பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.

எங்கே கிடைக்கும் ?

எங்கே கிடைக்கும் ?

இது இமயமலை மற்றும் நேபாளத்தில் மட்டும்தான் கிடைக்கும், இதனை எடுப்பதற்கு சிறந்த காலகட்டம் மே மற்றும் ஜூலை மாதத்தின் இறுதிதான். இது 3000 மீட்டர் உயரத்திற்கு மேலிருக்கும் 27 மாவட்டங்களில் கிடைக்கிறது. இந்த இடங்களை தவிர்த்து பூடான், திபெத் போன்ற இடங்களிலும் இது கிடைக்கிறது.

MOST READ: சனிக்கிழமையன்று இந்த மரத்தை வழிபட்டால் குருபகவான் உங்கள் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் வழங்குவார்

மக்களின் படையெடுப்பு

மக்களின் படையெடுப்பு

இந்த பருவகாலத்தில் மக்கள் சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்து வந்து இங்கே முகாமிட்டு விடுவார்கள். கையில் உலோக பொருட்களை வைத்து கொண்டு இந்த பூஞ்சையை தோண்டி எடுப்பார்கள். இதனை எடுப்பதற்கு பல போட்டிகள் நிலவுவதால் பல கொலைகள் இதனால் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு 135 டன் யார்சாகும்பா எடுக்கப்படுகிறது. ஆனால் இப்பொழுது பருவநிலை மாறுபட்டாலும், அதிகப்படியான அறுவடையாலும் இந்த அளவு குறைந்து கொண்டே வருகிறது.

அவ்வளவு சுலபமானதல்ல

அவ்வளவு சுலபமானதல்ல

அவ்வளவு உயரத்தில் இதனை எடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, மக்கள் தங்கள் உயிரை பணையவைத்துத்தான் இதனை எடுக்கிறார்கள். இதனை எடுக்கும்போது தவறி மலையிலிருந்து விழுந்து இறந்தவர்களே நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். இவ்வளவு ரிஸ்க் எடுத்து இதனை எடுக்க காரணம் இதன் விளையும் இது வழங்கும் அற்புதமான பலன்களும்தான்.

விலை

விலை

இதன் விலை கிட்டத்தட்ட 1000 டாலர்கள் ஆகும். இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் இதனை எடுப்பவர்கள் கிட்டத்தட்ட 3000 டாலர்கள் வரை சம்பாரிக்கிறார்கள். இந்திய ரூபாயில் இரண்டு இலட்சத்திற்கு மேல், இது அவர்களின் ஆண்டு வருமானத்தில் 56 சதவீதம் ஆகும். இதன் ஒருகிலோவின் விலை 130,000 டாலர்கள் ஆகும், ஒரு துண்டின் விலை மட்டுமே இந்திய ரூபாயில் 1000 ஆகும். வயகரா விற்று வரும் பணத்தில் இந்த மாகாணங்களில் பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

எப்படி வேலை செய்யும்?

எப்படி வேலை செய்யும்?

இந்த வயகராவில் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கார்டைசப்பின் அல்லது கார்டைசபிக் அமிலம் ஆகும். இது காளான் சுவையுடன் இருக்கும், இயற்கையாகவே இதில் சிறிது இனிப்புத்தன்மை இருக்கும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து பால் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வின் படி இந்த வயகரா மற்ற வயகராவை விட பலமடங்கு சக்திவாய்ந்தது எனவும் பக்கவிளைவுகள் இல்லாதது எனவும் கண்டறிப்பட்டுள்ளது.

MOST READ: இந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..

ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கிய நன்மைகள்

இது வயகராவாக மற்றும் பயன்படுத்தப்படுவதில்லை, இது நுரையீரல் மற்றும் முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் உடல் வலிமையையும் அதிகரிக்க பயன்படுகிறது. ஹெப்பாட்டிடீஸ் பி மற்றும் நுரையீரல் செயலிழப்பு மருந்துகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Yarsagumba

Yarasagumba is an ingredient known as the Himalayan Viagra, which is known for its aphrodisiac properties.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more