For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை... எப்படி எந்த அளவு சாப்பிடணும்?

|

நாம் நிறைய வழிகளில் இஞ்சியை பயன்படுத்தி வருகிறோம். அதே குடும்பத்தை சார்ந்த ஒரு பொருள் தான் இந்த சித்தரத்தை. இதைக் கொண்டு நமது உடலில் உள்ள ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும். இந்த சித்தரத்தை உண்பதால் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

galangal: nutrition, benefits and recipes

இதனுடைய வேர்கள் இன்றளவும் ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தி வருகின்றனர். இதை கிழக்கத்திய நாடுகள் மருந்துகளுக்காக நிறைய வழிகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதை இஞ்சியின் அண்ணன் என்று கூட பெரியவர்கள் சொல்வார்கள். ஏனெனில் பார்ப்பதற்கு இஞ்சியை போன்ற தோற்றம் உடையது. சீனர்களின் பாரம்பரிய மருந்துப் பொருளாகவும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்திய பராம்பரிய உணவு

இந்திய பராம்பரிய உணவு

ஆசிய நாடுகளில் இந்த சித்தரத்தையை உணவில் பயன்படுத்துகின்றனர். இது ஒரு நல்ல சீரண மருந்தாக செயல்படுகிறது. சமையலில் மட்டுமல்ல மருத்துவ துறையிலும் இதன் பங்கு சாலச் சிறந்தது.

இதன் வேர் களைக் கொண்டு நிறைய ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் உள்ளனர். அதில் ஆச்சர்யமூட்டும் விஷயம் என்னவென்றால் இது புற்றுநோயை குணப்படுத்துகிறது. இதைத் தவிர சீரண சக்தியை அதிகரித்தல், சீரண என்சைம்களை சுரக்க செய்தல், கெட்ட சுவாசம் போக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது. இன்னும் எத்தனையோ நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் சித்தரத்தில் 71 கலோரிகள் ஆற்றல் உள்ளது.

15.3 கிராம் கார்போஹைட்ரேட்

1.2 கிராம் புரோட்டீன்

1 கிராம் கொழுப்பு

2.4 கிராம் நார்ச்சத்து

11.8 மில்லி கிராம் சோடியம்

5.4 கிராம் விட்டமின் சி

வகைகள்

வகைகள்

இதிலுள்ள ரைசோம் அளவை பொருத்து இது

இரண்டு வகைப்படும்

குறைந்த ரைசோம் சித்தரத்தை

ஆல்ஃபினியா ஆஃபினினரம் என்று அறிவியல் ரீதியாக குறிப்பிடப்படுகிறது. ஹில்டகார்ட்ஸ் மெடிவேல் டயட்டில் இது சிறந்த பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பார்ப்பதற்கு சிவப்பு கலரில், நீண்ட வேர்கள் மாதிரி, மெல்லிய விரல்கள் மாதிரி தோற்றமளிக்கும். இந்த தாவரம் 3 அடி உயரம் வரை வளரக் கூடியது.

 அதிக ரைசோம் சித்தரத்தை

அதிக ரைசோம் சித்தரத்தை

ஆல்ஃபினியா காலங்கல் என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இது இந்தோனேஷியா போன்ற நாடுகளில் விளைகிறது. இது பார்ப்பதற்கு பெரிய வடிவில் காணப்படும். இந்த தாவரம் 6 அடி உயரம் வரை வளரும். இருண்ட தோல் மற்றும் வெளிரிய சதைப்பகுதி கொண்டு காணப்படும்.

புற்றுநோயை எதிர்த்து போரிடுதல்

புற்றுநோயை எதிர்த்து போரிடுதல்

இந்த சித்தரத்தையில் புற்றுநோயை எதிர்த்து போரிடும் சக்தி உள்ளது. இது நிறைய வகையான புற்றுநோயையும் அதன் கட்டிகளையும் போக்க வல்லது. குடல் புற்று நோய், லுகோமியா(இரத்த புற்று நோய்), மெலோனாமா, கல்லீரல் புற்று நோய், பெருங்குடல் புற்று நோய், மார்பக புற்று நோய், பித்த பை புற்று நோய் எல்லாவற்றையும் தடுக்க கூடியது.

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பொருள் போன்ற தன்மை டி. என். ஏ பிறழ்ச்சியை தடுத்தல், நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற வேலைகளை செய்கிறது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் என்சைம் செயல்பாட்டை சரி செய்து புற்றுநோயை விரட்டுகிறது.

MOST READ: ஆவாரம்பூ தினம் 1 வீதம் ரெண்டு வாரம் சாப்பிடுங்க... இந்த எட்டு நோயும் உங்களுக்கு வரவே வராது

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இந்த மூலிகை உடம்பில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், திசுக்கள் செல்களுக்கு ஊட்டமளித்தல், போன்ற வேலைகளை செய்கிறது. இதற்கு அதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் துணை புரிகின்றன. உடம்பில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றபட்டாலே போதும் உடம்பு நன்றாக வேலை செய்யும்.

சீரண பிரச்சனை

சீரண பிரச்சனை

இதில் நிறைய நார்ச்சத்துகள், பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது சீரண சக்தியை அதிகரிக்கிறது. சீரண அமிலத்தை சரியாக சுரக்க செய்து, உமிழ்நீரை சுரக்க செய்து உணவை சீரணிக்க உதவுகிறது. அல்சருக்கு கூட இது பயன்படுகிறது. அனாஸியா மற்றும் அடிவயிற்று வலி ஆகியவற்றை சரி செய்கிறது. மண்ணீரல் விரிவை சரி செய்தல், குடலில் உள்ள துர்நாற்றம், குமட்டல் போன்றவற்றை சரி செய்கிறது.

இதன் ஆன்டி பாக்டீரியல் தன்மை புழுக்கடி தொந்தரவு, வயிறு மந்தம், வயிற்று போக்கு, செரிமான பிரச்சினைக்கும் கூட இது சிறந்தது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதய சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இதய செயல்பாட்டை மேம்படுத்தி எல்லா உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் படி செய்கிறது. பக்க வாதம் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

ஆஸ்துமா

ஆஸ்துமா

சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க பயன்படுகிறது. ஆண்டிஸ்பாஸ்மோடிசக் விளைவு சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை குறைத்து ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை சுவாச பாதையில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, ஆஸ்துமா கட்டுப்பாட்டில் வைக்க பயன்படுகிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

இதிலுள்ள ப்ளோனாய்டுகளான காம்பெஃபோல், க்வெர்செடின் மற்றும் கேலானின் போன்ற பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் லிப்பிடு அளவை குறைக்கிறது. கொழுப்பு அமிலங்கள் வினையை எதிர்த்து போராடி தேவையற்ற கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு போன்றவை உடம்பில் தங்காமல் பார்த்துக் கொள்கிறது.

MOST READ: இந்த 5 அறிகுறி இருந்துச்சுன்னா உங்க ஈரல் காலின்னு அர்த்தம்... கவனமா இருந்துக்கோங்க...

ஆண்மை அதிகரிப்பு

ஆண்மை அதிகரிப்பு

இது ஆண்களின் ஆண்மை அதிகரிக்கவும், விந்து எண்ணிக்கைகளை அதிகரிக்கவும் செய்ய உதவுகிறது. எனவே இதை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு வீரியமும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய ஜர்னல் நடத்திய 2014 ல் நடத்திய ஆய்வின் படி இந்த மூலிகை ஆண்களுக்கு 3 மடங்கு விந்தணுக்களை பெருக்குகிறது என்றும் அதன் நீந்தும் திறனும் அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அறிவாற்றல் செயல்பாடு

அறிவாற்றல் செயல்பாடு

இந்த மூலிகையில் உள்ள அசிட்டோக்ஸிக்கிவோகிகல் அசெட்டேட் (1'ஏஏஏஏஏ) என்ற பொருள் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் வயதான காலங்களில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதன் மூலிகை சாற்றில் உள்ள பாலிசாக்கரைடு பொருள் ரெட்டிக்குளோரெடொலியல் விளைவை தூண்டும் திறனைக் கொண்டுள்ளது. மண்ணீரல் செல்கள் மற்றும் பெரிடோனினல் எக்ஸுடேட்ஸ் செல்களை அதிகரித்து அதன் வழியாக நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. சில ஆராய்ச்சி தகவல்கள் இது எச். ஐ.வி தொற்றுக்கு எதிரான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

காய்ச்சலை குறைத்தல்

காய்ச்சலை குறைத்தல்

இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை காய்ச்சலை குறைக்க பயன்படுகிறது. இது காய்ச்சல் மற்றும் சலதோஷத்திற்கான வீட்டு மருந்தாகும். இருமல் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்த கூட இதை பயன்படுத்தலாம்.

ஆர்த்ரிட்டீஸ்

ஆர்த்ரிட்டீஸ்

இதன் அழற்சியை எதிர்ப்பு தன்மை ஒன்றே போதும் ஆர்த்ரிட்டீஸ் நோயை குணப்படுத்த முடியும். இதிலுள்ள ஜிஞ்சரோல்ஸ் புரோஸ்டோகிளான்டின் வினையை தடுத்து ரூமேட்டிக் ஆர்த்ரிட்டீஸ் வராமல் தடுக்கிறது.

காலை நேர உடல் உபாதைகள்

காலை நேர உடல் உபாதைகள்

ஒரு துண்டு சித்தரத்தையை எடுத்து வாயில் போட்டு மென்றாலே போதும் உடம்பில் உள்ள உடல் உபாதைகள் ஓடி விடும். காலையில் எழுந்ததும் சில பேருக்கு குமட்டல், வாந்தி, தலைசுற்றல் போன்றவை இருந்தால் இது சரியாக்கி விடும். இதிலிருந்து பெறப்படும் எண்ணெய் நரம்புகளை அமைதிப்படுத்த பயன்படுகிறது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

இதன் பூஞ்சை எதிர்ப்பு தன்மை சரும தொற்று மற்றும் அழற்சியை போக்குகிறது. எக்ஸிமா, எரிச்சல், அரிப்பு போன்ற சரும நோய்களை சரி செய்கிறது. இதிலுள்ள விட்டமின் சி பாதிப்படைந்த சரும செல்களை புதிப்படைய செய்து சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. பருக்கள், கொப்புளங்கள், கரும்புள்ளிகள் வராமல் சருமத்தை காக்கிறது.

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியம்

இதன் பூஞ்சை எதிர்ப்பு தன்மை சருமத்திற்கு மட்டுமல்லாமல் கூந்தலுக்கும் பயன்படுகிறது. பொடுகு பிரச்சினை, வேர்க்கால்களுக்கு வலிமை, கூந்தல் உதிர்வு, கூந்தல் வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவுகிறது.

MOST READ: இந்த ஐஞ்சு அறிகுறி வந்தா பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு முன்கூட்டியே வரப்போகுதுனு அர்த்தம்

வேறுபாடு

வேறுபாடு

சித்தரத்தைக்கும் இஞ்சிக்கும் உள்ள வேறுபாட்டை காண்போம்

தன்மை - சித்தரத்தை - இஞ்சி

சுவை - கசப்பு, உரப்பு, புளிப்பு - லேசான இனிப்பு மற்றும் காரம்

வாசனை - கடுமையான மெந்தால் மணம் - பழுத்த சுவை

தோற்றம் - அடர்ந்த ப்ரவுன் ஆம்பர் நிறம் - லேசான ப்ரவுன் நிறம்

சருமம் - மரக்கலர் நிறம் - மென்மையான வெளிரிய நிறம்

உட்சதை - அடர்ந்த வெள்ளை பகுதி - வெளிரிய சதைப்பகுதி, மஞ்சள் ஜீஸ்

வகைகள் - குறைந்த ரைசோம் சித்தரத்தை, அதிக ரைசோம் சித்தரத்தை - 16 வகைகள்

எப்படி பயன்படுத்துவது

எப்படி பயன்படுத்துவது

முதலில் சித்தரத்தை வேர்களை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்

உலர்ந்த சித்தரத்தை பொடியாக்கி கூட வைத்து பயன்படுத்தலாம்

நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதை பயன்படுத்தலாம்

தோலை நீக்கி விட்டு சூப்புகளில் கூட போட்டு பயன்படுத்தலாம்

சமையல் உணவுகளில் கூட பயன்படுத்தி வரலாம்

MOST READ: இப்படி இருந்த பரவை முனியம்மா இப்ப என்ன வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? ரொம்ப பாவம்...

 சித்தரத்தை டீ

சித்தரத்தை டீ

தேவையான பொருட்கள்

தோல் நீக்கி நறுக்கிய சித்தரத்தை

400 மில்லி லிட்டர் தண்ணீர்

தேன் சுவைக்கேற்ப

பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சித்தரத்தையை எடுத்து கொள்ளுங்கள்.

நன்றாக கொதிக்க வைக்கவும்

30 நிமிடங்கள் தண்ணீரை வற்ற வையுங்கள்

பிறகு சாற்றை மட்டும் வடிகட்டி அதனுடன் தேன் கலந்து பருகுங்கள்.

சித்தரத்தை ஜாம்

சித்தரத்தை ஜாம்

தேவையான பொருட்கள்

3 எலும்பிச்சை பழம்

1/2 லிட்டர் தண்ணீர்

2 லெமன் கிராஸ்

4 டேபிள் ஸ்பூன் துருவிய சித்தரத்தை

6 டேபிள் ஸ்பூன் தேன்

2 டேபிள் ஸ்பூன் மிளகுக்கீரை துருவியது

2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

1 சொட்டு பெப்பர் மின்ட் ஆயில்

5 சொட்டுகள் ஆரஞ்சு ஆயில்

பயன்படுத்தும் முறை

லெமனின் தோலை நீக்கி தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். அதை நன்றாக கொதிக்க விடவும். இப்பொழுது தீயை மிதமான தீயில் வைத்து தண்ணீர் பச்சை நிறமாக மாறும் வரை சூடுபடுத்த வேண்டும். அதனுடன் துருவிய சித்தரத்தை, லெமன் கிராஸ், துருவிய மூலிகைகள் போட்டு கொள்ளுங்கள்.

15 நிமிடங்கள் வரை சமைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுத்து மஞ்சள் சேர்த்து கொள்ளுங்கள். லெமன் ஜூஸ் சிறுதளவு சேருங்கள். பிறகு மீதமுள்ள பொருட்களை போட்டு நன்றாக கிளறவும்

டயாபெட்டிக் ரேப்

டயாபெட்டிக் ரேப்

தேவையான பொருட்கள்

1/2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

2 டீ ஸ்பூன் நறுக்கிய பூண்டு

1 டீ ஸ்பூன் சித்தரத்தை

1/4 கப் நறுக்கிய கேரட்

1/4 கப் நறுக்கிய வெங்காயம்

1/4 கப் நறுக்கிய காளான்

1/4 கப் நறுக்கிய முட்டைகோஸ்

1/4 கப் முளைக்கட்டிய பீன்ஸ்

1/4 கப் டோஃபு

1/2 டீ ஸ்பூன் சோயா சாஸ்

1/4 டீ ஸ்பூன் வத்தல்

உப்பு தேவைக்கேற்ப

இதர தேவையான பொருட்கள்

6 லட்டூஸ் இலைகள்

6 டேபிள் ஸ்பூன் பீனெட், வறுத்து பொடியாக்கி யது

2 டேபிள் ஸ்பூன் துளசி இலைகள்

பயன்படுத்தும் முறை

அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.

காளான்கள், கேரட், முட்டைகோசு போன்றவற்றை சேருங்கள். மிதமான சூட்டில் 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

முளைக்கட்டிய பீன்ஸ், டோஃபு, லெமன் சாறு, சோயா சாஸ், உப்பு மற்றும் வத்தல் சேர்த்து வதக்கவும்.

மிதமான சூட்டில் வைத்து மறுபடியும் சில நிமிடங்கள் வதக்கவும். இப்பொழுது இந்த கலவையை 6 பாகங்களாக பிரித்து கொள்ளுங்கள். இலைகளை நன்றாக கழுவி உலர்த்தி கொள்ளுங்கள்.

அதில் வதக்கிய கலவையை ஒரு பக்கம் வைத்து மடக்கவும். அதன் மேல் 1/2 டீ ஸ்பூன் பீனெட், 1/2 டீ ஸ்பூன் துளசி இலைகளைப் தூவவும். நன்றாக இந்த ஸ்டவ்வை உருட்டி ஒரு டூத் பிக் குச்சியில் சொருகவும். இப்படியே எல்லாவற்றையும் செய்து சாப்பிடுங்கள். உடம்புக்கு நல்லது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

கர்ப்ப கால பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிடுவதை தவிருங்கள்

பெப்டிக் அல்சர் இருப்பவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.

ஏனெனில் இது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை அதிகமாக்கி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

galangal: nutrition, benefits and recipes

Galangal or galanga is a rhizomatous root that grows underneath the ground as in ginger. The root is one of the popular household spices, prominently featuring in the East and South-East Asian cuisines.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more