Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்..
காலை உணவில் இஞ்சி சேர்க்கலாமா? சேர்த்தால் என்ன ஆகும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...
காலை உணவோடு இஞ்சியை எப்படியெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
காலை உணவு என்பது எல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட உணவு நமது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் இஞ்சி ஒரு சிறந்த உணவாகும்.

ஒரு கப் தேநீரில் சிறுதளவு இஞ்சியை சேர்த்து குடிப்பதாலே ஏராளமான நன்மைகளை நாம் பெற இயலும். இப்படி தினமும் இஞ்சியை காலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண போகிறோம்.

காரமான காபி
உங்கள் அதிகாலை காபிக்கு இன்னும் சுவையேற்றுங்கள். ஆமாங்க காபியில் இஞ்சி கலந்து குடிப்பது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக இது செயல்படுகிறது. ஒரு கப் காபியில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியைச் சேர்த்து குடிப்பதால் அதிகாலையிலயே உங்கள் சீரண மண்டலம் நன்றாக செயல்பட ஆரப்பிக்கிறது.

தினமும் வைட்டமின் சி
இந்த குளிர் காலங்களில் சூடான இஞ்சி டீ தொண்டைக்கு இதம் அளிப்பதோடு உங்கள் வயிற்றுக்கும் நல்லது. இந்த இஞ்சி டீயை அதிகாலையில் குடிக்கும் போது குமட்டல், மலம் கழிப்பதில் பிரச்சினைகள், கர்ப்ப கால அறிகுறிகள் போன்றவற்றை சரியாக்குகிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான விட்டமின் சி இதிலிருந்து கிடைக்கிறது. இந்த இஞ்சி டீயை துருவிய இஞ்சியை கொண்டு 10 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி சுட வைத்து அதில் சுகர், டீ தூள் சேர்த்து தயாரித்தும் பருகலாம். பாலில் சேர்த்தும் பருகலாம்.

இஞ்சி ஜாம்
நீங்கள் இதுவரை உங்கள் காலை உணவு பிரட்டாக இருந்தால் ப்ரூட் ஜாம் தடவி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இஞ்சி ஜாம் கொண்டு சாப்பிட்டது உண்டா? ஆனால் இந்த ஜாம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த இஞ்சி ஜாமை பிஸ்கட், பிரட் என்று எதற்கு வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். சர்க்கரை எதுவும் சேர்க்காமல் பிரட் வெண்ணெய் உடன் இஞ்சி துருவல் போட்டு சேர்த்து சாப்பிடலாம்.

இஞ்சி சிரப்.
தி ஜிஞ்சர் பீப்பிள் என்ற கம்பெனி பேன் கேக் சிரப்பிற்கு பதிலாக இஞ்சி சிரப்பை தயாரித்து உள்ளது. இந்த சுவையான இஞ்சி சிரப் பானங்கள், வேக வைத்த பொருட்கள், ஓட்ஸ் உணவு, பேன் கேக்குகள் மற்றும் வாஃபிள்ஸ் போன்றவற்றில் பயன்படுகிறது.
இந்த சிரப்பை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்
1/4 கப் தோலுரித்து துருவிய இஞ்சி
1 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
துருவிய இஞ்சியை தண்ணீரில் போட்டு 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தண்ணீரை மட்டும் வடிகட்டி மென்மையான பதம் வரும் வரை காத்திருந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளுங்கள்.

அழற்சி எதிர்ப்புசக்தி கொண்ட கிரானோலா
காலை உணவிற்கு க்ரானோலா போன்ற நார்ச்சத்து உணவுகள் சரியானவை ஆக இருக்கும். அதுவே இந்த க்ரானோலா உடன் இஞ்சி சேர்ப்பது இன்னும் கூடுதல் சுவை யோடு ஆரோக்கியமாக அமையும்.
தயாரிக்கும் முறை
1 அங்குல இஞ்சியுடன் கொஞ்சம் தேன் கலந்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கும் க்ரானோலா அதிக ஆரோக்கியத்தை தருகிறது.

இஞ்சி ஸ்மூத்தி
இஞ்சி ஜூஸூம் உங்கள் காலை வேளையை சிறப்பாக்கும் உணவாகும். இந்த இஞ்சி ஜூஸை குடிக்கும் போது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், பாக்டீரியாக்களை அழிக்கும், மாதவிடாய் கால வலி, உடற்பயிற்சியால் ஏற்படும் வலி போன்றவற்றை போக்குகிறது.

ஆற்றலை தருதல்
இஞ்சி உடம்புக்கு ஆற்றலை தரும் பொருளாகும். எனவே இந்த சூப்பர் உணவை காலை உணவில் சேர்த்து பயன் பெற வேண்டும்.

இஞ்சி கேக்
இஞ்சி நிறைய வடிவில் உணவில் சேர்க்கப்படுகிறது. இஞ்சி பிரட், இஞ்சி ஸ்னாப்ஸ், இஞ்சி கேக் போன்றவை நல்ல ஊட்டச்சத்துக்களை குழந்தைகளுக்கு வழங்குகிறது
எனவே இஞ்சியை எதாவது ஒரு வடிவத்தில் காலை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.



Click it and Unblock the Notifications