For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுறுப்பு விறைப்பை அதிகரிக்க சீனாவுலயே நம்ம ஊர் நெருஞ்சி முள் தான் பயன்படுத்தறாங்களாம்...

நெருஞ்சி ஒரு முள் வகையைச் சேர்ந்தது, இது முற்காலத்தில் ஆரோக்கிய பானமாக பயன்படுத்தப்பட்டது. சிறுநீரக சிகிச்சைகளுக்கும், சிறுநீரகம் நன்கு செயல்படவும், சிறுநீரகத் தொற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

|

நெருஞ்சி ஒரு முள் வகையைச் சேர்ந்தது, இது முற்காலத்தில் ஆரோக்கிய பானமாக பயன்படுத்தப்பட்டது. சிறுநீரக சிகிச்சைகளுக்கும், சிறுநீரகம் நன்கு செயல்படவும், சிறுநீரகத் தொற்றுக்கும், சிறுநீரக அசௌகரியத்தை குறைப்பதற்காகவும் ஆயுர்வேத சிகிச்சை முறையில் நெருஞ்சி பயன்படுத்தப் படுகிறது.

health benefits of Gokshura

Image Courtesy

இது ஆண்மைத் தன்மையை அதிகரிக்கவும், சக்தியையும் உடற் திண்மையை அதிகரிக்கவும், சிறுநீரக நோய்களை குணப்படுத்தவும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் நன்மைகளைக் காண்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேலை மருத்துவம்

மேலை மருத்துவம்

ஆண் இனப்பெருக்க உறுப்புகளை வளர்ப்பதற்காக பாரம்பரிய சீன மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க உடல் கட்டமைப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் அடிக்கடி இதை உபயோகிக்கப் படுத்துகின்றனர்.

ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் ஐரோப்பா முழுவதும் மணல் மண்ணில் நெருஞ்சி பொதுவாக காணப்படுகிறது. வயல்களில் களைச் செடிகளாகவும், கழிவு நிலங்களில் பயிரிடப்பட்டும் வளர்கிறது.

ஆரோக்கிய பயன்கள்

ஆரோக்கிய பயன்கள்

Image Courtesy

சிறுநீர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வலியையும் குணப்படுத்துகிறது. சிறுநீர்ப் பாதைகளில் ஏற்படும் சீர்குலைவுகளை களையும் இயற்கை மருந்தாகிறது.

சிறுநீரகப் பாதையின் சீர்கேடுகள் அகற்றும் சிகிச்சையில் நெருஞ்சி எவ்வாறு திறமையாக செயல்படுகிறது? நெருஞ்சி சிறுநீர் சுலபமாக வெளியேற உதவுகிறது. நெருஞ்சி சிறுநீர்ப்பாதை சவ்வுகளை மென்மையாக்கி இரத்தப் போக்கைத் தடுக்கிறது.

நெருஞ்சியில் இளமையைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளது. பலவிதமான பால்வினை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. வெட்டை நோய்க்கும், சிறுநீரில் பாஸ்பேட் உப்பு அதிகரிப்பிற்கும் சிகிச்சையளிக்க நெருஞ்சி மிகவும் சிறந்தது. உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றி, சிறுநீர்ப்பாதைத் தொற்றையும், சிறுநீர்ப் பையில் ஏற்படும் தொற்றையும் நீக்குகிறது. எனவேதான் கற்களை அகற்றும் நன்மை உள்ள நெருஞ்சியை உபயோகித்து நலம் பெறுகிறோம்.

நெருஞ்சியின் பட்டையில் துவர்ப்புத் தன்மை உள்ளது. இது குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மற்றும் சத்து பணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பித்தப் பையில் உள்ள கற்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

சிறுநீரகத்தை சீராக்க

சிறுநீரகத்தை சீராக்க

நெருஞ்சியில் உள்ள நன்மை தரும் மூலிகைப் பயன்களுக்காக சிறுநீரக குணப்படுத்தும் சிகிச்சையில் பெரிதும் பயன்படுகிறது. சிறுநீரகத்தில் காணப்படும் கற்களை எளிதில் நீக்குகிறது. நெருஞ்சி சிறுநீரகத்துக்கு ஊட்டமளித்து அதை பலப்படுத்துகிறது.

சிறுநீரக கற்கள், சிறுநீரக கோளாறு மற்றும் சிறுநீரக தொற்றுகள் நெருஞ்சியால் குணப்படுத்தப்படுகிறது. நெருஞ்சி சிறுநீர்ப் பாதையை சுத்தப்படுத்தி, சிறுநீர் எளிதில் வெளியேற உதவுகிறது. சிறுநீர்ப் பாதையின் சுவர்களில் உள்ள மாசுகளை அகற்றுகிறது. சிறுநீரகத்திற்கு தெம்பும், சக்தியும் அளிக்கிறது.

ஒரு தேக்கரண்டி நெருஞ்சிப் பொடியையும், ஒரு தேக்கரண்டி தேனையும் கலந்து கொள்ளவும். இதை ஒரு டம்ப்ளர் ஆட்டுப்பாலில் சேர்க்கவும். தினசரி ஒருமுறை இதைப் பருகவும். உட்கொள்ள ஆரம்பித்த ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது. பாதிக்கும் மேற்பட்ட மக்கள் முகப்பரு மற்றும் பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நெருஞ்சி அரிப்பு, வீக்கம், எரிச்சல் மற்றும் வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

ஆண்மைத் தன்மை

ஆண்மைத் தன்மை

ஆண்மைத் தன்மை குறைபாட்டை நீக்குகிறது. ஆண்மைத் தன்மை குறைபாடு உள்ளவர்களும், தாம்பத்ய வாழ்க்கையில் பாதிப்பு உள்ளவர்களும் நெருஞ்சியைப் பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். இது இயற்கையான வழியில் கருவுறுதலில் உள்ள பாதிப்புகளை குணப்படுத்துகிறது. சில ஆய்வு முடிவுகள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக் குறைபாட்டை நீக்க பயன்படுத்தப் படுவதாகத் தெரிவிக்கிறது. உடலின் ஹார்மோன் செயல்பாட்டை இயற்கையான வழியில் ஊக்குவித்து டெஸ்டோஸ்டிரோன் அளவை சீராக வைக்கிறது.

வயதாவைத் தடுக்கிறது

வயதாவைத் தடுக்கிறது

டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை சேமிப்பதன் மூலம் ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும் நெருஞ்சி, வயதாவதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. நெருஞ்சிச் சாறை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் தோற்றத்தில் இளமையைக் கொடுக்கிறது. இவை தசைகளின் சேதத்தையும், வயதாவதால் உடலில் ஏற்படும் கோளாறுகளையும் குணப்படுத்த உதவுகிறது.

சிறுநீரகப் பிரச்சினை

சிறுநீரகப் பிரச்சினை

சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கற்களால் சிறுநீர்ப் பாதையில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. நெருஞ்சிச் சாறை எடுத்துக் கொள்வதால் சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கற்களை அகற்றி, சிறுநீர் எளிதாக வெளியேற உதவுகிறது. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் இரத்தக் கசிவையும், சிறுநீரக நோய்களையும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும், சிறுநீர்ப்பை அழற்சியையும் குணப்படுத்துகிறது.

விறைப்பு செயலிழப்பு

விறைப்பு செயலிழப்பு

ஆண்குறி திசுக்களை தூண்டுகிறது, இது ஆண்குறி விறைப்பை தூண்டுகிறது. இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு பெரிய பிரச்னையாக இருப்பது விறைப்பு பிரச்னை தான். அத்தகைய விறைப்புத்ன்மை பிரச்னையை நெருஞ்சி முள்ளானது தீர்த்து வைக்கும். விந்துவை கெட்டிப்படுத்தி, நீண்ட நேரம் இன்பம் பெற முடியும்.

இதயம்

இதயம்

கொழுப்பைக் குறைக்கும் தண்மை நெருஞ்சியில் அதிகம் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. நெருஞ்சி ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இத்தோடு அஞ்சினா போன்ற இதய நோய் சிக்கல்களுக்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது. நெருஞ்சியில் நுண்ணுயிர் எதிர்ப்புத் தன்மையும், கட்டிகளைக் கரைக்கும் தன்மையும் இருப்பதால் கல்லீரல் புற்றுநோயை எதிர்க்கிறது.

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்

பாலிசிஸ்டிக் கருப்பை நோய்

இது பெண் கருவுறாமைக்கான ஒரு காரணமாகிறது. அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நெருஞ்சி பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பம் தரிக்காமல் பிரச்னையை உண்டாக்குவது பெரும்பாலும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் தான். இந்த பிசிஓடி என்று சொல்லப்படுகின்ற கருப்பை நோயை கட்டுப்படுத்த நாட்டு மருத்துவத்தில் நெருஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

உடலில் நீரைத் தக்க வைக்க நெருஞ்சி உதவுகிறது. நெருஞ்சி இயற்கையான சிறுநீர்ப் பெருக்கி, உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றி நீர்க்கட்டியின் அளவைக் குறைக்கிறது.

நீரிழிவு சிகிச்சையிலும் நெருஞ்சி பயன்படுத்தப்படுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் உண்டு.

நெருஞ்சி குளுக்கோஸ் சீரற்று இருத்தலை சரி செய்கிறது.

நெருஞ்சி உடற்பயிற்சி செய்யும் திறனை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கும் தசைகளுக்கு வலுவூட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top health benefits of bindii / Gokshura

Gokshura is also known with the name puncture vine, it has been under the use since many generations as a general tonic
Story first published: Friday, July 20, 2018, 16:08 [IST]
Desktop Bottom Promotion