For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு மிளகை இப்படி செஞ்சு சாப்பிடுங்க... கரையாத தொப்பையும் கரைஞ்சிடும்...

கருப்பு மிளகு என்பது தென்னிந்திய உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு காரசாரமான மசாலா பொருளாகும். இந்த கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது.

|

கருப்பு மிளகு என்பது தென்னிந்திய உணவுகளில் அதிகமாக சேர்க்கப்படும் ஒரு காரசாரமான மசாலா பொருளாகும். இந்த கருப்பு மிளகு நிறைய மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. இதுவரைக்கும் கருப்பு மிளகு சளிக்கு, தொண்டை புண் இவற்றிற்கு நல்லது என்று கேள்வி பட்டிருக்கோம். ஆனால் இந்த கருப்பு மிளகை கொண்டு நம் எடையை கூட குறைக்க முடியுமாம்.

How to Use Black Pepper for Weight Loss?

ஏனெனில் இதில் குறைந்த கலோரிகள், தாதுக்கள், விட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. எனவே இதை ஆராய்ந்த போது கிடைத்த தகவலானது இதில் பைப்பரின் என்ற பொருள் உள்ளது. இது நமது கொழுப்பு மெட்டா பாலிசத்தை மேம்படுத்தி எடை குறைக்க உதவுகிறது. எனவே இந்த கருப்பு மிளகை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்து வந்தாலே போதும் உடல் பருமன் என்ற தொல்லையே ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைப்பு

எடை குறைப்பு

இந்த கருப்பு மிளகை நீங்கள் உள்ளே எடுத்துக் கொண்டோ அல்லது வெளியே பயன்படுத்தி கூட எடையை குறைக்க இயலும். இந்த கருப்பு மிளகை சில வகைகளில் உணவுடன் கலந்து கீழ்வருமாறு சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நாள் கரைக்க முடியாமல் கஷ்டப்பட்ட தொப்பையும் கரைந்து போய்விடும்.

கருப்பு மிளகு எண்ணெய்

கருப்பு மிளகு எண்ணெய்

நீங்கள் 100% கருப்பு மிளகு எண்ணெய்யை மருந்து கடைகளிருந்து பெறலாம். ஒரு சொட்டு கருப்பு மிளகு எண்ணெய்யை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் உடல் எடை குறையும். இந்த எண்ணெய்யை சருமத்தில் தடவிக் கொண்டால் சரும தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

கருப்பு மிளகு டீ

கருப்பு மிளகு டீ

கருப்பு மிளகு டீ உங்கள் எடையை குறைக்க சிறந்த ஒன்று. இதை நீங்கள் எளிதாகவும் தயாரிக்கலாம். இஞ்சி, லெமன், துளசி, க்ரீன் டீ பேக்குகள் அல்லது பட்டை மற்றும் 1/2 - 1 டீ ஸ்பூன் கருப்பு மிளகு பொடி சேர்த்து டீ தயாரிக்கவும். இதை காலையில் சாப்பிடுவதற்கு முன் செய்து வந்தால் எடை குறைவது நிச்சயம்.

கருப்பு மிளகு பானம்

கருப்பு மிளகு பானம்

இந்த கருப்பு மிளகை உங்கள் காய்கறிகள் மற்றும் பழ ஜூஸூடன் கலந்து வரலாம். இதன் காரமான சுவை உங்களுக்கு பிடிக்கும். இதை தினமும் குடித்து வருவதால் எடையை குறைப்பதோடு சருமத்திற்கும், குடலுக்கும் ரெம்ப நல்லது.

அப்படியே சாப்பிடலாம்.

நீங்கள் மிளகை நேரடியாகவும் எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாள் காலையிலும் 2-3 மிளகை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் கருப்பு மிளகில்

கார்போஹைட்ரேட் - 64.8 கிராம்

நார்ச்சத்து - 26.5 கிராம்

கொழுப்புகள் :

மோனோசேச்சுரேட் கொழுப்பு - 1 கிராம்

அன்சேச்சுரேட்டேடு கொழுப்பு - 1 கிராம்

பாலிசேச்சுரேட் கொழுப்பு - 1.1 கிராம்

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் - 160 மில்லி கிராம்

ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் - 970 மில்லி கிராம்

கால்சியம் - 437 மில்லி கிராம்

இரும்புச் சத்து - 28.9 மில்லி கிராம்

மக்னீசியம் - 194 மில்லி கிராம்

பாஸ்பரஸ் - 173 மில்லி கிராம்

பொட்டாசியம் - 1259 மில்லி கிராம்

சோடியம் - 44 மில்லி கிராம்

ஜிங்க் - 1.4 மில்லி கிராம்

மாங்கனீஸ் - 5.6 மில்லி கிராம்

காப்பர் - 1.11மில்லி கிராம்

செலினியம் - 3.1 மைக்ரோ கிராம்

ப்ளூரைடு - 34.2 மைக்ரோ கிராம்

புரோட்டீன் - 11 கிராம்

விட்டமின்கள்

விட்டமின் சி - 21 மில்லி கிராம்

விட்டமின் ஏ - 299 IU

விட்டமின் கே - 164 மைக்ரோ கிராம்

போலேட் - 10 மைக்ரோ கிராம்

நியசின் - 1.1மில்லி கிராம்

கோலைன் - 11.3 மில்லி கிராம்

ரிபோப்ளவின் - 0.2 மில்லி கிராம்

விட்டமின் பி6 - 0.3 மில்லி கிராம்

பீட்டைன் - 8.9 மில்லி கிராம்.

எடுத்துக் கொள்ளும் அளவு

எடுத்துக் கொள்ளும் அளவு

தினமும் 1-2 டீ ஸ்பூன் கருப்பு மிளகு சேர்த்து கொண்டு வந்தால் எடை குறையும். நீங்கள் இதுவரை இஎடுத்துக் கொண்டது இல்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரித்து கொள்ளுங்கள். அதிகமான மிளகு சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகள், கண்களில் எரிச்சல், வயிறு எரிச்சல், மூச்சுப் பிரச்சினை போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

சாப்பிட வேண்டிய நேரம்

சாப்பிட வேண்டிய நேரம்

காலையில் உணவருந்துவதற்கு முன் மிளகு அல்லது மிளகு எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். இதை வெறுமனே மென்றோ, ஜூஸ், சூப் போன்றவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.

எடை குறைப்பு மிளகு ரெசிபிகள்

எடை குறைப்பு மிளகு ரெசிபிகள்

கருப்பு மிளகு மற்றும் தேன்

தேவையான பொருட்கள்

1 கப் தண்ணீர்

1 டீ ஸ்பூன் தேன்

1/2 டீ ஸ்பூன் பொடியாக்கிய கருப்பு மிளகு

தயாரிக்கும் முறை

தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள் அதனுடன் மிளகு மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள்.

நன்றாக கலந்து ஆற வையுங்கள்

இப்பொழுது இந்த கலவையை குடித்து விடுங்கள்.

கருப்பு மிளகு மற்றும் கீரை ஸ்மூத்தி

கருப்பு மிளகு மற்றும் கீரை ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்

1 கப் நறுக்கிய கீரை

1 டீ ஸ்பூன் பொடியாக்கிய கருப்பு மிளகு

1/2 லெமன் ஜூஸ்

தயாரிக்கும் முறை

கீரையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கலக்கி குடியுங்கள்.

கருப்பு மிளகு டீ

கருப்பு மிளகு டீ

தேவையான பொருட்கள்

1/2 டீ ஸ்பூன் கருப்பு மிளகு

1 அங்குலம் இஞ்சி வேர்

1 க்ரீன் டீ பேக்

1 கப் தண்ணீர்

தயாரிக்கும் முறை

இஞ்சியை நன்றாக தட்டிக் கொள்ளுங்கள்

ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் நுனிக்கிய இஞ்சியை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

5 நிமிடங்கள் கொதிக்க வைத்து நன்றாக வடிகட்டி கொள்ளவும்

அதில் டீ பேக்கை முக்கி 2-3 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

கருப்பு மிளகு சேர்த்து நன்றாக கலக்கி குடியுங்கள்.

கருப்பு மிளகு மற்றும் பழ ஜூஸ்

கருப்பு மிளகு மற்றும் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

1/2 கப் தர்பூசணி

1/2 கப் அன்னாசி பழம்

1/2 டீ ஸ்பூன் கருப்பு மிளகு பொடி

1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ்

உப்பு

தயாரிக்கும் முறை

தர்பூசணி மற்றும் அன்னாசி பழத்தை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்

ஒரு கிளாஸ் ஜூஸில் அதை ஊற்றி கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். அதில் கருப்பு மிளகு மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

நன்றாக கலந்து பருகுங்கள்.

மேக்ஸிகன் பெப்பர் சிக்கன் சாலட்

மேக்ஸிகன் பெப்பர் சிக்கன் சாலட்

100 கிராம் வேக வைத்த சிக்கன் நெஞ்சுக் கறி

1/4 கப் பச்சை மற்றும் சிவப்பு மிளகாய் நறுக்கியது

1/4 கப் அவகேடா

1/2 லெமன் ஜூஸ்

ஒரு கைப்பிடியளவு கொத்தமல்லி

3-4 மிளகாய் ஊறுகாய்

2 கீரை இலைகள்

2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

2 டீ ஸ்பூன் நுனிக்கிய கருப்பு மிளகு

உப்பு

தயாரிக்கும் முறை

கருப்பு மிளகு, ஆலிவ் ஆயில், அவகேடா, லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பெளலில் கலந்து கொள்ளுங்கள்.

வேக வைத்த சிக்கனை நறுக்கி அதனுடன் நறுக்கிய மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து கலந்து கொள்ளவும்

இப்பொழுது கலந்த கலவையை அவகேடா கலவையுடன் சேருங்கள்.

ஒரு பெளலை எடுத்து அதில் கீரை இலையை அதன் மேல் விரிக்கவும்

இப்பொழுது சிக்கன் கலவையை அதன் மேல் வைக்கவும்

அதன் மேல் ஆலிவ் ஆயில், கருப்பு மிளகு மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி விடுங்கள்.

கருப்பு மிளகை சாப்பிடுவதற்கு முன் 1/2 கப் தண்ணீர் குடித்து கொள்ளுங்கள். இதனுடன் 1/2 கப் கொழுப்பில்லாத தயிர் சேர்த்து வாருங்கள். இது உங்களுக்கு குடல் சுவர்களை பாதுகாக்கும். இந்த உணவுப் பழக்கத்துடன் லேசான உடற்பயிற்சி செய்து வாருங்கள்.கண்டிப்பாக எடை குறைப்பை பெறுவீர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Use Black Pepper for Weight Loss?

black pepper is is packed with Vitamin A, K, C, and minerals like calcium, potassium and sodium. Black pepper is also rich in healthy fats and dietary fiber which helps promote weight loss too
Desktop Bottom Promotion