For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய் துளசின்னு நாம கண்டுக்காம விட்ற இது பைத்தியத்தையே குணப்படுத்துமாம்... தெரியுமா?

நாசிகளில் நுழையும் இதன் தெய்வீக நறுமணம், மனிதனை, ஒரு நிமிடம் இறை நிலைகளில் ஈர்த்து, நிலையாமை வாழ்வை உணர்த்தி, நல்வழியில் நடந்திட வைத்திடும் ஆற்றல்மிக்கது.

By Gnaana
|

உடம்பு எப்பவும் சுடுதா? நெஞ்சு சளியா? வியர்வை நாற்றமா? உடல் பேன் தொல்லையா? தானே பிதற்றிக்கொள்கிறார்களா? இந்த தேவமூலிகையில் இருக்கு, நிவாரணம்.

மனிதனை வியாதிகளிலிருந்து காக்கும் தன்மையுள்ளவை, மூலிகைகள். காடு மலைகளில் தேடி அலைய வேண்டிய சிரமங்களின்றி, அவன் இருக்குமிடத்தில், அவனுக்கு அருகிலேயே, நன்மைகள் தரும் மூலிகைகளைப் படைத்திருப்பது, இயற்கையின் கருணையன்றி, வேறென்ன. ஆயினும், நவீனகால வாழ்க்கைமுறைகளில், உணவுப்பழக்கமும் மாறி, அதனால் ஏற்படும் வியாதிகளால், மனநலமும் கெட்டு, இளைய தலைமுறையினர் முதல், நடுத்தரவயதினர் வரை பலரும் இன்று, மருத்துவமனைகளில், குவிந்திருப்பதை நாம் கண்டிருப்போம்.

எதனால், இந்த பாதிப்புகள்? எத்தனை விழிப்புணர்வு அளித்தாலும், அவர்கள் விட்டில்பூச்சிகள் போலே, மீண்டும்மீண்டும் நமக்கு ஒத்துவராத மேலை உணவுகள், கலாச்சாரங்களில் வீழ்ந்து, தாமும் உடல்நலம் கெட்டு, தம் குடும்பத்தாரும் உடல்நலம் கெடக்காரணமாகி, இன்று, மருத்துவர்முன் காத்திருக்கும் நிலை இருக்கிறது.

health

மேலைமருத்துவத்தில் மருந்துகள் சாப்பிட்டாலும், முழுதும் குணமாகாமல் பக்கவிளைவுகளுடன், வேறு சிறப்புநிபுணர்களைப்பார்த்து, பல்வேறு டெஸ்ட்களையும், ரிப்போர்ட்களையும் எடுத்துக்கொண்டு, மீண்டும் மருத்துவர் வாசலில் காத்துக்கிடக்கும் நிகழ்வுகள். இவர்கள் வேலை தேடும் போதுகூட, இத்தனை கனமான ஃபைல்களைக் கொண்டுசென்றிருக்க மாட்டார்கள்.

இதுபோன்ற இன்னல்களுக்கு அவசியமின்றி, நம்மருகிலேயே கிடைக்கும் மூலிகைகளில் நிரந்தரத்தீர்வுகள் இருந்தாலும், அறியாமையால், வேறுதீர்வுகளை நோக்கி செல்கிறார்கள்.

அந்த வகையில் உடல் சூட்டைத் தணித்து, வியர்வையை வெளியேற்றி, சளி உள்ளிட்ட சுவாச பாதிப்புகளை போக்கி, உடல் சரும வியாதிகள், மன அழுத்த பாதிப்புகளை விலக்கி, உடல் ஆரோக்கியத்தை வளமாக்கும், எங்கும் எளிதில் கிடைக்கும் ஒரு அரிய மூலிகைதான், சங்கரத் துளசி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள் தரும் சங்கர துளசி

நன்மைகள் தரும் சங்கர துளசி

நம்மூரில், வயல்வெளிகள், சாலையோர தரிசு நிலங்களில் மழை பெய்யும் காலங்களில், தானே விளையும் அரிய நன்மைகள் தரும் களைச்செடிகளில், சிறப்பானதுதான், சங்கரத் துளசி எனும் கஞ்சாங்கோரை. களைச்செடியென சொல்ல முடியாதபடி, அதன் அதி அற்புத சிறப்புகளை, அதன் இலைகளின் தெய்வீக நறுமணத்திலேயே, நாம் உணரமுடியும்.

நறுமணமிக்க இலைகளுடன் நீண்ட கதிர் போன்ற மலர்களைக் கொண்ட கஞ்சாங்கோரை செடிகள், அவற்றின் மருத்துவ நன்மைகளுக்காக, விதைகள் மூலமும், தற்காலத்தில் தனியாக பயிரிடப்படுகின்றன.

நாசிகளில் நுழையும் இதன் தெய்வீக நறுமணம், மனிதனை, ஒரு நிமிடம் இறை நிலைகளில் ஈர்த்து, நிலையாமை வாழ்வை உணர்த்தி, நல்வழியில் நடந்திட வைத்திடும் ஆற்றல்மிக்கது.

நாய் போல அங்குமிங்கும் தாவும் மனதை அடக்கும் ஆற்றல்மிக்கது. துறவிகள் இந்த இலைகளை தம்முடனே எப்போதும் வைத்திருப்பார்கள் என்று பழந்தகவல்கள் கூறுகின்றன. சித்த மருந்துகள் தயாரிப்பில் பயன்படும் விஷ்ணுகரந்தி உள்ளிட்ட அஷ்டமூல மூலிகைகளில், கஞ்சாங்கோரையும் ஒன்று.

நாய்த்துளசி, பேய்த்துளசி என்றும் இந்த கஞ்சாங்கோரை செடிகள் அழைக்கப்படுகின்றன. நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லை ஏற்படும்போது, சளியைக் கரைத்து, உடல் நலனைக் காக்கும் தன்மைமிக்கது, கஞ்சாங்கோரை.

உடல் சூட்டைத் தணிக்கும்.

உடல் சூட்டைத் தணிக்கும்.

அலைச்சல்மிக்க வேலை, நேரந்தவறிய உணவுகள், சரியான தூக்கமின்மை, நெடுநேரம் இரவில் கண்விழித்து திரைப்படங்கள் பார்த்தல், மொபைலில் அரட்டை அடித்தல் போன்ற காரணங்களால், உடலில் உஷ்ணம் அதிகமாகி, கண்களில் சூடு பரவி, கண் எரிச்சல், உடல் எரிச்சல், கை கால்களில் சூடு ஏற்பட்டு, உடல் தளர்ச்சி, பார்வையில் தெளிவின்மை, வேலையில் ஈடுபாடின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு, உடல் சோர்ந்துபோகும்.

சிலர், சூட்டினால், சரியாக சாப்பிட முடியாமல், குளிர்பானங்களை அதிகம் குடித்துக்கொண்டிருப்பார்கள். இது இன்னும் சூட்டை அதிகரிக்கும் என்பதை அறியாமல். வியர்வையை அதிகரித்து, உடல் சூடு, மூலச்சூட்டைத் தணித்து, உடல் உறுப்புகளின் வெப்பத்தை அகற்றி, உடலை இயல்பாக்கும் தன்மைமிக்கது, சங்கரத் துளசி!.

சங்கரத் துளசி இலைகளை சேகரித்து, சுத்தம்செய்து, அம்மியில் அரைத்து, விரல் நுனியளவு எடுத்து, தயிரில் கலந்து சாப்பிட, உடல் சூடு யாவும் நீங்கி, உடலில் புத்துணர்ச்சி உண்டாகும். இந்த மருந்தே, சர்க்கரை பாதிப்புகளுக்கும் தீர்வாகிறது.

குழந்தைகளின் மந்தம், சளி இருமல்

குழந்தைகளின் மந்தம், சளி இருமல்

சில குழந்தைகளுக்கு உடல் சூட்டினால் சளி சேர்ந்து, இருமல், வயிற்றுப் போக்கு பாதிப்புகள் ஏற்பட்டு அழுதுகொண்டேயிருக்கும். இதன் காரணமாக சமயங்களில், குழந்தைகளுக்கு விக்கலும் ஏற்படும். இந்தப்பாதிப்புகள் தீர்ந்து, குழந்தைகள் நலமுடன் விளையாட, சங்கரத் துளசி இலைகளை சாறெடுத்து, சிறிது சாற்றில், இரண்டு மடங்கு பால் சேர்த்து புகட்டிவரலாம்.

உடல் பேன்

உடல் பேன்

உடல் சுத்தமின்மை, மற்றவர்களின் ஆடைகளைப் பயன்படுத்துதல், விலைமாதுக்களுடன் உறவு போன்ற காரணங்களால் சிலருக்கு, உடலில் பேன் போன்ற ஒட்டுண்ணிகள் பரவும். நுண்ணிய இந்தப்பேன்கள், கை கால் மார்பு முடிகள் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் முடிகளில் படர்ந்து, அரிப்பைக்கொடுக்கும். தாங்கமுடியாத அரிப்பில் சொறியும்போது தோல் பிய்ந்து, கடுமையான வலியைக் கொடுக்கும்.

இதற்கு நிவாரணம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது, வெளியில் சென்று வந்தால் கைகால்களைக் கழுவியபின்னரே, உணவு உண்பது, உடல் உறுப்புகளை தூய்மையாகப் பராமரிப்பதும் ஆகும். கஞ்சாங்கோரை இலைகள், அதன் பூக்கள், சிறு துண்டு வசம்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, உடலெங்கும் தடவி, சற்றுநேரம் கழித்து, தூய்மையான நீரில், தொடர்ந்து இரண்டு வாரங்கள் குளித்துவர, ஒட்டுண்ணிகள் போல உடலை வருத்திய பேன்கள் தொல்லை நீங்கும்.

உடலின் அரிப்பு, சொறி தீர, இலைகளை அரைத்து உடலில் தடவி ஊறியபின் குளித்துவரலாம். வியர்வை நாற்றமும் நீங்கும்.

டிபி நெஞ்சு சளி

டிபி நெஞ்சு சளி

சிலருக்கு நெஞ்சில் சளி உறைந்து, கடுமையான இருமல், இளைப்பு மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படும்.இதன் காரணமாக கடுமையான டி பி பாதிப்புகள் ஏற்படும்.

உள்ளங்கையளவு கஞ்சாங்கோரை இலைகளுடன் நான்கைந்து மிளகை அரைத்து, நாக்குபொறுக்குமளவு கொதிநீரில் கலந்து பருகிவர, நெஞ்சில் உறைந்த சளி கரைந்து, ஆரம்ப நிலை டி பி, இருமல் சளி பாதிப்புகள் விலகி, மூச்சு விடுவது எளிதாகும்.

குடிப்பழக்கத்தை மறக்க

குடிப்பழக்கத்தை மறக்க

சங்கரத் துளசி இலைகளுடன், வாயுவிளங்கம், திப்பிலி, பாக்கு, அதிமதுரம் கோரைக்கிழங்கு போன்ற மூலிகைகளை சேர்த்து செய்யும் மருந்தை, குடிக்கு அடிமையானவர்களுக்குக் கொடுத்துவர, அவர்கள் குடிப்பழக்கத்தை மறந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.குடிப்பழக்கம் மட்டுமன்றி, புகையிலை போன்ற போதைப் பழக்கங்களும் இதன்மூலம் விலகிவிடும்.

ஆசனவாய் அரிப்பு, எரிச்சல்

ஆசனவாய் அரிப்பு, எரிச்சல்

சிலருக்கு மூல பாதிப்புகளால், ஆசனவாயில் அரிப்பு ஏற்படும். கஞ்சாங்கோரை இலைகளை ஆமணக்கெண்ணையில் இளஞ்சூட்டில் வதக்கி, ஆசனவாயில் கட்டி இரவில் உறங்கிவர, அரிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். பேய் பிடித்து பினாத்திக் கொண்டிருப்பவர்களுக்கு, குணமளிக்கும்.

சிலர் மனநலபாதிப்புகளால், ஓடுவது, கத்துவது, தானே பேசிக்கொள்வது, சிரிப்பது பாடுவது போன்ற மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலைகளில் இருப்பார்கள்.

இவர்கள் தலையில், சங்கரத் துளசி இலைகளை கட்டிவைத்து, படுக்குமிடத்தில் இலைகளைப் பரப்பிவைக்க, படிப்படியாக, மனநல பைத்திய பாதிப்புகள் நீங்கி, சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.

மூட்டைப் பூச்சி

மூட்டைப் பூச்சி

சங்கரத் துளசி இலைகளை சாறு வருமளவு கசக்கி, அவற்றை வீடுகளின் சுவரோரம் போட்டுவைக்க, அதன் நறுமண வாசத்தில், மூட்டைப்பூச்சிகள் அழிந்துவிடும். இதன்மூலமும், மூட்டம் போல இலைகளைப் புகை போட்டாலும், அதன்வாசத்தில், கொசுக்களும் அழிந்து, கொசுத்தொல்லையும் நீங்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health benefits of naai tulsi - ocimum canum

three different types of holy basil, and while they can be used somewhat interchangeably, they also have their slight differences.
Story first published: Saturday, June 30, 2018, 12:48 [IST]
Desktop Bottom Promotion