For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்டதும் வயிறு கம்முனு கெடக்கா?... ஒரு கிராம்பை மட்டும் வாயில போட்டு மெல்லுங்க...

இரைப்பைத் திறன், செரிமானத்திற்கு தேவையானதை விட அதிகமான அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது.

|

நீங்கள் வெறும் வயிற்றில் தேநீர் அல்லது உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்.

herb for acidity in tamil

இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும்
அசிடிட்டி உருவாக்கும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்திருப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசிடிட்டி

அசிடிட்டி

காரமான உணவுகளை உட்கொள்வது, ஒழுங்கற்ற உணவு பழக்கம், மன அழுத்தம், குறைந்த உடல் அசைவு மற்றும் மது அருந்துவது போன்றவற்றால் அசிடிட்டி ஏற்படும்.

ஸ்டொமக் ஆசிட் அல்லது பித்தநீர் உங்கள் உணவு குழாயில் பாய்கின்ற பொது எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தும். மோசமான வலிகளுக்கு நிவாரணம் இருப்பினும் சில இயற்கை பொருட்களான துளசி இலைகள், இலவங்கப்பட்டை, மோர், ஆப்பிள் சிடர் வினிகர், சீரகம் மற்றும் கிராம்பு உள்ளிட்டவை உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த அருமையான இயற்கை வைத்திய பட்டியலில், கிராம்பு தான் (லவங்கம்) முதலிடம் வகிக்கிறது.

எப்படி உருவாகிறது?

எப்படி உருவாகிறது?

நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதிக்கு செல்கிறது.

வயிற்றில் உள்ள இரைப்பை சுரப்பிகள் உணவை ஜீரணிக்க தேவையான அமிலத்தை/ அசிடிட்டியை உருவாக்குகின்றன. இரைப்பைத் திறன், செரிமானத்திற்கு தேவையானதை விட அதிகமான அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது.

இந்த நிலை, மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த நிலை இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் அடிக்கடி எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

நீங்கள் கவனமாக இருக்க அசிடிட்டிக்கான சில அறிகுறிகள்:

வயிற்றில் ஏற்படும் எரிச்சல் உணர்வு

தொண்டை மற்றும் இதயத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வு

கெட்ட சுவாசம்

அஜீரணம்

வாயில் நீடித்த புளிப்பு சுவை

குமட்டல்

ஓய்வின்மை

மலச்சிக்கல்

நீங்கள் அசிடிட்டியால் பாதிக்கப்படுகையில், ஒருபோதும் படுக்காதீர்கள் அப்படி செய்கையில் பிரச்சனை இன்னும் மோசமாகிவிடும்.

கிராம்பு எப்படி பயன்படும்?

கிராம்பு எப்படி பயன்படும்?

மேக்ரோபையோட்டிக் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சுகாதார பயிற்சியாளர் ஷில்பா அரோரா படி, "கிராம்புகள் நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது. உணவுடன்

சேர்க்கும்போது, ​​அவை அமிலத்தன்மையை தடுக்க உதவுகின்றன.

அசிடிட்டி வராமல் தடுக்க கிராம்பு மற்றும் ஏலக்காய் சமமான அளவு கலந்து கொள்ளுங்கள். இது அசிடிட்டியை தடுக்கவும் வாயுவை வெளியேற்றவும் உதவுகிறது. கிராம்புகள் உமிழ்நீர் உற்பத்தியை மேம்படுத்துகின்றன, செரிமானம் எடுப்பதற்கும், பெரிஸ்டாலிசிஸ் (செரிமான குழாயில் உள்ள தசை சுருக்கங்கள்) குறைக்கின்றன. கிராம்பை மெல்வது சித்த அல்லது ஆயுர்வேத சிகிச்சையாக பரிந்துரைக்கபடுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

அசிடிட்டியை போக்க கிராம்புகளைப் பயன்படுத்துவது எப்படி?

இரண்டு மூன்று கிராம்புகளை மெல்வதால் வெளிவரும் சாறுகள் உங்களுக்கு அசிடிட்டியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். நொறுக்கிய கிராம்புகளை ஏலக்காயுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது அசிடிட்டியை போக்காவிட்டாலும் கெட்ட வாடையை போக்கும்.

எந்தவொரு வயிறு பிரச்சனையும் தவிர்க்க, நம் தினசரி உணவுகளில் கிராம்புகளை சேர்ப்பது நல்லது. தீவிர மற்றும் நீண்ட கால அசிடிட்டி பிரச்சனைக்கு டாக்டரைப் பார்த்து சரியான சிகிச்சையை உறுதி செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cloves For Acidity: This Simple Remedy Will Keep Tummy Troubles At Bay

Chew two to three cloves so the juices are released into your system, giving you instant relief from acidity.
Story first published: Wednesday, July 25, 2018, 11:51 [IST]
Desktop Bottom Promotion