Just In
- 57 min ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 5 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- 17 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- 17 hrs ago
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
Don't Miss
- Automobiles
ஒரே மேடையில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய கார்கள் அறிமுகமாக வாய்ப்பு
- News
நான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்
- Technology
டாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்
- Movies
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க!
- Education
8, 10-வது தேர்ச்சியா? தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை!
- Finance
நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..!
- Sports
உயிரே போனாலும் உலகக்கோப்பை பைனலில் ஆடுவேன் என்றார்.. அதான் யுவராஜ் சிங்! #HappyBirthdayYuvi
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாப்பிட்டு முடிச்சதும் ஒரு கிராம்பை எடுத்து சப்பி சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?
எல்லாருக்கும் சாப்பிட்ட பிறகு ஒரு மாதரி எரிச்சல் உணர்வு ஏற்படும். அந்த எரிச்சல் உணர்வு நமது வயிற்றில் உள்ள அமிலத் தன்மையால் ஏற்படுகிறது. இதனால் நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு அசெளகரியமாக உணர ஆரம்பிப்போம்.
இந்த மாதிரியான அசெளகரிய நிலை உங்கள் அமிலத்தன்மை அதிகமாக உள்ளதை காட்டுகிறது. எனவே இதனால் சீரணமின்மை, வாயு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

அசிடிட்டி
புளித்த ஏப்பம், தொண்டையில் நமநமப்பு போன்றவையும் ஏற்படும். இந்த மாதிரியான அசிடிட்டி பிரச்சினை காரமான உணவுகளை உண்பதாலும், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதாலும், சரியான உணவுப் பழக்கம் இல்லாமல் இருத்தல், செயற்கை பானங்கள், மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகிறது. இந்த எரிச்சலுக்கு நீங்க என்ன தான் மருந்து சாப்பிட்டாலும் ஒரு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும். எனவே இந்த எரிச்சலை போக்கி சீரண சக்தியை மேம்படுத்த ஒரு எளிய முறையை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
MOST READ: இந்த பறவைகள் உங்க வீட்டுக்குள் நுழைந்தால் துரதிஷ்டம் வருமாம்...

அசிடிட்டியை சரி செய்யும் வீட்டு முறை
நமது சமையலறை பொருட்களைக் கொண்டே இந்த அசிடிட்டியை நாம் சரி செய்ய இயலும். இதற்கு கிராம்பு பயன்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இது பெருமளவு பயன்படுகிறது.

கிராம்பின் பயன்கள்
கிராம்பு நிறைய உடல் நல பிரச்சினைகளை சரி செய்கிறது. தலைவலி, வாயில் ஏற்படும் பிரச்சினைகள், புற்று நோய், டயாபெட்டீஸ், மைக்ரோபியல் தொற்று, சைனஸ், ப்ளூ மற்றும் சளி போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. இது மேலும் நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. கல்லீரலை பாதுகாக்கிறது, எலும்பிற்கு வலிமை சேர்க்கிறது. இதன் ஆன்டி செப்டிக் தன்மையால் வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. இந்த கிராம்பை நீங்கள் டீ, ஜூஸ், ஸ்வீட், உணவு தயாரித்தல் மற்றும் கிராம்பு எண்ணெய்யாக பயன்படுகிறது.

நெஞ்செரிச்சல்
வயிறு மந்தம், நெஞ்செரிச்சல் போன்ற அமிலத்தன்மை பிரச்சினைகளை சரி செய்ய கிராம்பு உதவுகிறது. உணவு வயிற்றில் போய் சேர்வதற்கும், உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கிறது, சீரண சக்தியை மேம்படுத்துதல் மற்றும் அமிலத்தன்மையை சமன் செய்கிறது.

வயிற்று அழற்சி
மேலும் வயிற்றின் சுவரில் ஏற்பட்டுள்ள அழற்சி, பாதிப்பு போன்றவற்றை சரி செய்கிறது. கிராம்பின் அல்கலைன் மற்றும் கார்மினேட்டிவ் தன்மை வயிற்றில் சுரக்கும் அதிகமான அமிலத்தன்மையை குறைக்கிறது. மேலும் வயிற்றில் வாயு உருவாகுவதை தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை
கிராம்பை நெஞ்செரிச்சலை சரி செய்ய அதை வாயில் போட்டு சில நிமிடங்கள் அதன் சாறு வாயினுள் இறங்கும் வரை வைத்திருக்க வேண்டும். இது நெஞ்செரிச்சலை குறைத்து, உடனடியாக நல்ல நிவாரணம் அளிக்கும். மேலும் நீங்கள் சாப்பிட்ட பிறகு கூட இதை வாயில் போட்டு மென்று வந்தால் நெஞ்செரிச்சல் இருக்காது.

அசிடிட்டியை குறைக்கும் சில வகை உணவுகள்
1 டம்ளர் குளிர்ந்த பால்
குளிர்ந்த பால்
பட்டர்மில்க்
துளசி
ஏலக்காய்
தேங்காய் நீர்
சாதாரண நீர்
பெருஞ்சீரகம்
ஆப்பிள் சிடார் வினிகர்
வெல்லம்
இஞ்சி
சீரகம்
MOST READ: ராமன் எப்போது ஹனுமானை கொல்ல நினைத்தார்? எதற்காக என்று தெரியுமா?

அசிடிட்டி குறைக்க சில வழிமுறைகள்
கொஞ்சம் தூரம் நடங்கள்
நேராக உட்காருங்கள்
தளர்ந்த ஆடைகளை அணியுங்கள்
மேல் உடலை தூக்கி வைத்து கொள்ளுங்கள்
சிகரெட் புகையில் இருந்து தள்ளி இருங்கள்
காரமான அல்லது அதிகமான உணவை தவிருங்கள்.
மேற்கண்ட வழிகளை பின்பற்றி உங்கள் அசிடிட்டி பிரச்சினைக்கு பை பை சொல்லலாம்.