For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சாகா காளான் பற்றி தெரியுமா?... இப்பவும் கிடைக்குதே...

நாம் எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது காளான் தான்.சைவ பிரியர்களுக்கு ஒரு அசைவ உணவை போல் சுவையை தருவதும் இந்த காளான் தான். காளான் டீ, காபியிலிருந்து தொடங்கி காளான் பிரியாணி வரை அனைவரி

|

100 வருடங்களாக மருத்துவ துறையில் பயன்படும் இந்த பொருளை பற்றி கேள்வி பட்டிருக்கிறீங்களா? நாம் எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது காளான் தான். சைவ பிரியர்களுக்கு ஒரு அசைவ உணவை போல் சுவையை தருவதும் இந்த காளான் தான். காளான் டீ, காபியிலிருந்து தொடங்கி காளான் பிரியாணி வரை அனைவரின் விருப்பத்தையும் அள்ளிச் செல்வது இது தான். அப்படிப்பட்ட சாகா காளான் சுவையோடு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. இது பழங்காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாகா காளான் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கீறீர்களா?... இல்லையென்றால் இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ORAC

ORAC

ORAC என்பது "தீவிர ஆக்ஸிஜன் உறிஞ்சும் திறன்" என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவு சாகா காளானில் அதிகப்படியாக 146,700 என்ற அளவில் உள்ளது. இதனால் தான் சாகா காளான் நமது உடலை தாக்கும் நோய்களிடமிருந்து நம்மை காக்கிறது.

Source

இதய நோய்கள்

இதய நோய்கள்

எனவே இந்த சாகா காளானை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சாகும் நாளைக் கூட தள்ளிக் போடலாம். இதய நோய்கள், டயாபெட்டீஸ், ஈரல் நோய்கள், ஒட்டுண்ணிகள், வயிற்று வலி, புற்று நோய் போன்றவற்றை கூட துரத்தி அடிக்கலாம். சரி வாங்க!. இன்னும் அள்ளி அள்ளி தரும் இந்த சாகா காளானின் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பூஞ்சை

பூஞ்சை

சாகா காளான் ஒரு வகை பூஞ்சை (இனோனோட்டஸ் அக்விக்ஸ) வகையைச் சார்ந்தது. இது மிகவும் குளிர்ந்த காலங்களில் பிர்ச் மரங்களுக்கு வெளியே வளர்ந்து நிற்கும்.

காணப்படும் இடங்கள்

காணப்படும் இடங்கள்

சைபீரியா, வடக்கு கனடா, அலாஸ்கா மற்றும் சில வட கண்ட பகுதிகளில் உள்ள காடுகளில் இது வளர்ந்து காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு எரிந்த கரியை போன்று கட்டி கட்டியாக காணப்படும்.

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, கொழுப்பு, சுகர் மற்றும் கார்போஹைட்ரேட் இல்லாத உணவாக காட்சியளிக்கிறது.

  • 5 கிராம் சாகா காளானில்
  • 5 கலோரிகள்
  • 0 கிராம் கொழுப்பு
  • 0 கிராம் கார்போஹைட்ரேட்
  • 5 கிராம் நார்ச்சத்து
  • 1 கிராம் புரோட்டீன்
  • ஆரோக்கிய நன்மைகள்
  • புற்றுநோய்

    புற்றுநோய்

    மெமோரியல் ஸ்லோன் புற்றுநோய் மையமானது விலங்குகளிடம் நடத்திய ஆராய்ச்சி படி சாகா காளான் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. இந்த ஆராய்ச்சியை மனிதர்களிடம் நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியை புற்று நோய் கட்டிகளை கொண்ட எலிகளிடம் நடத்திய போது 60% வரை கட்டிகளின் அளவு குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் புற்றுநோய் கட்டிகள் மற்ற பாகங்களுக்கு பரவும் விதமும் 25% வரை குறைந்துள்ளது. இதே மாதிரி மனிதரின் கல்லீரல் புற்றுநோய் பற்றிய மற்றொரு ஆராய்ச்சியானது இரைப்பை குடலியல் நாளிதழ் வெளியிட்டது. இதில் சாகா காளானின் சாறு இந்த புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து கல்லீரல் புற்று நோய் வருவதை தடுக்கிறது.

    நோயெதிர்ப்பு சக்தி

    நோயெதிர்ப்பு சக்தி

    விலங்குகளிடம் நடத்திய ஆராய்ச்சி படி சாகா காளான் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. நோயெதிர்ப்பு செல்களான இண்டெல்லுகுயின் 6 (IL-6) மற்றும் டி லிம்போசைட்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து நமது உடல் போராட முடியும். சாகா காளான் சாறு மண்ணீரல் லிம்போசைட்டுகளை தூண்டுமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இவை தான் நமது நோயெதிர்ப்பு மண்டலத்துடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.

    ஆன்டி வைரல்

    ஆன்டி வைரல்

    சாகா காளான் சில வைரல்களை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. 2015 ல் நடத்திய ஆராய்ச்சி படி சாகா காளான் சாறு டைப் 1எச். ஐ.வி வைரஸை எதிர்த்து போரிடுகிறது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஹெபடைடிஸ் சி வைரஸை எதிர்த்தும் தன் ஆன்ட்டி வைரல் விளைவை காட்டுகிறது என்று விலங்குகளின் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சாகா காளான் சாறு ஹெபடைடிஸ் சி வைரஸின் பெருக்கத்தை சுமார் 10 நிமிடங்களில் 100 மடங்கு வரை குறைக்கிறது. எனவே ஆன்டி வைரல் மருந்துகளில் இதை பயன்படுத்த இது ஏதுவான ஒன்றாக உள்ளது.

    அழற்சி எதிர்ப்பு பொருள்

    அழற்சி எதிர்ப்பு பொருள்

    இது அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. விலங்குகளில் நடத்திய ஆராய்ச்சி படி பார்த்தால் இவை பெருங்குடல் புண்னை குறைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. குடலில் அழற்சியை ஏற்படுத்தும் கெமிக்கல்களை ஒடுக்க இதன் சாறு பயன்படுகிறது. ஏனெனில் இந்த கெமிக்கல்கள் தான் அழற்சியை பெரிதுபடுத்த காரணமாக அமைகிறது.

    தாங்கும் ஆற்றல்

    தாங்கும் ஆற்றல்

    2015 ஆம் ஆண்டு எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சி படி பார்த்தால் சாகா காளான் கொடுக்கப்பட்ட எலிகள் நீண்ட தூரம் நீந்துவது தெரிய வந்துள்ளது. இரத்தத்தில் உள்ள லாக்டிக் அமில அளவை குறைத்து இரு தசைகள் மற்றும் கல்லீரல் கிளைகோஜென் (எரிபொருள்) எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து எலிகளின் சோர்வை நீக்கி தாங்கும் ஆற்றலை தருகிறது.

    சுவாரஸ்ய வரலாறு

    சுவாரஸ்ய வரலாறு

    சாகா என்ற பெயர் ரஷ்யன் வார்த்தைகளிருந்து வந்தது. இந்த காளான் கருப்பு தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. வட ஐரோப்கிய நாடுகளில் அதாவது ரஷ்யா போன்ற நாடுகளில் 100 வருடங்களாக பராம்பரிய மருத்துவ முறைகளில் இதை பயன்படுத்தி வருகின்றனர். இது பாரம்பரிய பாரம்பரியமாக டயாபெட்டீஸ், குடல் புற்று நோய், இதய நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர்.

    மனிதனின் மண்டை

    மனிதனின் மண்டை

    இது பிர்ச் மரங்களில் வளரும் போது பார்ப்பதற்கு எரிந்த மரக்கட்டை மாதிரி மட்டும் இல்லாமல் ஒரு மனிதனின் தலையை போன்று திடமாக காணப்படும். அதன் கடினமான செல்லுலார் சுவரை உடைத்தெடுக்க சூடான தண்ணீர் அல்லது ஆல்கஹால் தேவைப்படுகிறது. இதன் மஸ்ரூம் காபி, டீ மிகவும் புகழ் பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது காபிக்கு பதிலாக இந்த சாகா காளான் தான் பயன்படுத்தப்பட்டது.

    மரங்களின் புற்றுநோய்

    மரங்களின் புற்றுநோய்

    சாகா காளான் "ட்ரீ கேன்சர்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது மற்ற தேவையற்ற மரங்களை கொன்று விடுகிறது. எனவே இதைக் கொண்டு காட்டை அறுவடை செய்யவும் பயன்படுத்துகின்றனர். இது மாத்திரை மருந்தாகவும் கிடைக்கிறது. மேலும் காபி மற்றும் டீ போன்றவற்றில் பயன்படுகிறது.

    Source

    மருத்துவ வகை காளான்கள்

    மருத்துவ வகை காளான்கள்

    • சாகா
    • கார்டியெப்ஸ்
    • ரைசி
    • லயன் மானே
    • துர்கி டெய்ல்
    • மஸ்ரூம் காபி
    • இதில் குறைந்த அமிலத் தன்மை மற்றும் குறைந்த காஃபைன் காணப்படுகிறது. 1 கப் மஸ்ரூம் காபியில் சாதாரண காபியை விட பாதி மடங்கு காஃபைன் குறைவாக உள்ளது. காபி பிரியர்களுக்கு இதன் சுவை சரியான தீணி எனலாம்.

      Source

      சாகா மஸ்ரூம் தேநீர்

      சாகா மஸ்ரூம் தேநீர்

      தேவையான பொருட்கள்

      சாகா காளான் துண்டுகள் அல்லது துண்டுகளை அரைத்து 2 டீ ஸ்பூன் பொடி தயாரித்தல்

      செய்முறை

      காபி வடிகட்டும் பாத்திரத்தில் காளான் பொடியை அல்லது ஒரு கப்பில் காளான் துண்டுகளை சேர்க்க வேண்டும். இதில் 1 கப் கொதிக்கின்ற தண்ணீரை ஊற்ற வேண்டும். 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும். இதனுடன் லெமன் ஜூஸ், தேன் அல்லது மாபிள் சிரப் போன்றவற்றை சுவைக்காக சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான அளவை மட்டும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வது நல்லது.

      பக்க விளைவுகள்

      பக்க விளைவுகள்

      இதுவரைக்கும் இதனால் ஏற்படும் பக்கவிளைவுக்கு எந்த ஒரு மருத்துவ சான்றிதழும் இல்லை. 72 வயது ஐப்பான் மூதாட்டி ஒருவர் 6 மாதம் அளவுக்கு அதிகமாக சாகா தேநீர் பருகி வந்ததால் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது அதிகளவு ஆக்ஸிலேட் என்பதால் அதிக நச்சுக்களை உடம்பில் சேர்த்து விடுகிறது. கருவுற்ற மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் இதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் தற்போது எதாவது மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று இதை பயன்படுத்துவது நல்லது.

      நிபந்தனைகள்

      நிபந்தனைகள்

      இது முடக்கு வாதம், ஸ்களீரோசிஸ், லூபஸ் எரிடாமடோசஸ் போன்ற ஆட்டோ இம்னியூ நோய் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. காரணம் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மிகவும் சுறுசுறுப்பாக வைத்து இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

      டயாபெட்டீஸ்

      டயாபெட்டீஸ்

      இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இவை இரத்தப் போக்கை அதிகரிப்பதால் இரத்தப் போக்கு குறைபாடு இருப்பவர்கள் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

      அறுவை சிகிச்சை

      அறுவை சிகிச்சை

      அறுவை சிகிச்சை செய்த இரண்டு வாரங்களுக்கு இந்த காளானை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். காரணம் இரத்தப் போக்கையும், இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கிறது.

      எதாவது எதிர்மறை விளைவுகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

      கவனத்தில் வைக்க வேண்டியவை

      கவனத்தில் வைக்க வேண்டியவை

      இந்த சாகா காளானை ரஷ்ய மக்கள் பாரம்பரிய பாரம்பரியமாக 100 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதைக் கொண்டு நிறைய விலங்குகளின் ஆராய்ச்சி, மனிதனின் ஆராய்ச்சி என்று நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளும் அதே சமயத்தில் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

      மஸ்ரூம் காபி மற்றும் டீ போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொண்டு நன்மை பெறுவது நல்லது. ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chaga Mushroom: Health Benefits of this Ancient Remedy

why exactly does anyone want to add chaga mushroom to their diets? People have been known to take chaga mushroom (often shortened to just “chaga”) for heart disease, diabetes, liver disease, parasites, stomach pain, and certain types of cancer. (2) Let’s talk more about possible chaga mushroom benefits and why there’s so much buzz about disease-fighting mushrooms these days.
Desktop Bottom Promotion