For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரிபலாவை யாரெல்லாம் சாப்பிடலாம்? எப்படி, எந்த அளவு சாப்பிட வேண்டும்?

திரிபலாவில் உள்ள பொருள்கள் மிகச்சிறந்த நிவாரணங்களைத் தரும். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

|

நமது அன்றாட வாழ்வியல் முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் ஒரு அங்கமாகி விட்டது மறுக்க முடியாத உண்மை. ஜன்க் உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு மலச்சிக்கல், பசியின்மை, அசிடிட்டி , அடிவயிறு வலி போன்ற பிரச்சனைகள் உண்டாவது வாடிக்கையாகி விட்டது.

Amazing Health Benefits of Triphala

இத்தகைய கோளாறுகள், ஹைபர் டென்ஷன், சரும பாதிப்புகள் , பார்வை குறைபாடு, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு போன்ற பாதிப்புகளை உடலில் உண்டாக்குகிறது. இந்நிலையில் வழக்கமான அண்டி பயோடிக் மாத்திரைகள் திரிபலாவின் நன்மைகளைப் போல் சிறந்த நன்மைகளை வழங்குவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரிபலா

திரிபலா

திரிபலா என்பது மூன்று மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் என்ற மூன்று பழங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது அனைத்து மூலிகை சிகிச்சைகளில் மிகவும் ஏற்றதாகவும் மற்றும் சிறந்த இயற்கை பொருட்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. உடலில் இந்த பழங்களின் விளைவுகளை ஆராய்வோம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

1. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது ஒரு சிறந்த அன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

2. நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது. சுவாச பாதையில் உள்ள சளியைப் போக்க உதவுகிறது.

3. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

4. சீரான இரத்த ஓட்டதிற்கு உதவும் இரும்பு சத்தை கொடுத்து இதயம் சரியான முறையில் செயல்பட நெல்லிக்காய் உதவுகிறது.

5. நெல்லிக்காயில் நச்ச்களை வெளியேற்றும் தன்மை இருப்பதால், புதிய திசுக்களின் உருவாக்கத்தில் உதவி, சரும பொலிவை உண்டாக்குகிறது.

6. புரத ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது. மேலும் தசைகளுக்கு சிறந்த டோனர் போல் செயல்படுகிறது.

7. எலும்புகளின் வலிமைக்கு உதவும் கால்சியம் போன்ற கனிமங்களை உறிஞ்சுவதன் மூலம், முடி உதிர்தல் மற்றும் இளநரையைத் தடுக்கிறது.

தான்றிக்காய்

தான்றிக்காய்

1. தான்றிக்காய் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் குருதிப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

2. உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அதிக கொழுப்பை வெளியேற்றி உள்ளிருந்து சுத்தீகரிக்கிறது.

3. கண்பார்வை மற்றும் குரலின் தரத்தை மேம்படுத்த இதன் கிருமிநாசினி தன்மை உதவுகிறது.

4. கூந்தலின் வேர்க்கால்களை வலிமைப்படுத்தி, கூந்தல் நிறத்தை மேம்படுத்துகிறது.

கடுக்காய்

கடுக்காய்

1. கடுக்காய்க்கு ஐந்து சுவைகள் உண்டு. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு , உறைப்பு போன்ற சுவைகளைக் கொண்டது.

2. இது செரிமான அமைப்பு மற்றும் உணர்ச்சி உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது.

3. மூல நோய், இரத்த சோகை, இரைப்பை பிரச்சனைகள், பித்தப்பை கற்கள் போன்றவற்றை சிறந்த முறையில் எதிர்க்க உதவுகிறது.

4. காய்ச்சல், தலைவலி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றை எதிர்த்து போராடுகிறது.

5. இதய நோயைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

நன்மைகள்

நன்மைகள்

1. இது இயற்கையாக பசியைத் தூண்டும் ஒரு பொருள். செரிமானத்தை ஊக்குவித்து, அசிடிட்டியை குணப்படுத்தி வயிற்று புண்ணுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க உதவுகிறது.

2. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு மற்றும் வாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. புற்று நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் கட்டிகளைக் குறைக்கும் தன்மை திரிபலாவிற்கு இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

3. கண்களுக்கும் சருமத்திற்கும் சிறந்த நன்மையை வழங்குகிறது. திரிபலாவைக் கொண்டு கண்களைக் கழுவுவதால், கண்புரை, கிட்டப்பார்வை, இமைப்படல அழற்சி போன்றவை குணமாகிறது. இரத்தத்தின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

4. இதன் அன்டி ஆக்சிடென்ட் தன்மை, சருமத்தில் வயது முதிர்விற்கான அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகிறது.

5. செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதன்மூலம் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. உடலின் திசுக்களில் அதிகப்படியான தண்ணீர் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் பசி கட்டுப்படுகிறது.

திரிபலாவை எப்படி எடுத்துக் கொள்வது?

திரிபலாவை எப்படி எடுத்துக் கொள்வது?

திரிபலா பவுடர் வடிவத்தில் சூரணம் என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருக வேண்டும். திரிபலா மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. உணவிற்கு பின் இரண்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், அதிக கொழுப்பை வெளியேற்றவும் திரிபலாவை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். குடல் இயக்கத்தை மறுசீரமைத்து, உடலில் செரிமானம் சீராகவும், குடல் இயக்கங்கள் சரியான முறையில் நடைபெறவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits of Triphala

one of the most versatile and greatest natural ingredients in all herbal remedies.
Story first published: Tuesday, August 21, 2018, 12:39 [IST]
Desktop Bottom Promotion