For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்கனுமா...!?

|

"தாய்மை" என்பது மிக உன்னதமான ஒரு உணர்வு. பெண்களுக்கு இந்த தாய்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகளை தரக்கூடியது. தாய்மை பருவம் என்றாலே அழகிய கனாகாலம்தான். குழந்தை கருவில் உருவானதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு வாந்தி, மயக்கம், தலை சுற்றல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்புதான். இருந்தாலும் குழந்தை என்ற அற்புத உயிருக்காகவே எந்தவித கடினமான பாதைகளையும் பெண்கள் பொறுத்து கொள்ள தயாராக இருப்பார்கள். ஏனென்றால் பெண்கள் வாழ்வில் தாய்மை அவ்வளவு விலைமதிக்க முடியாத ஒன்று. ஆனால் இந்த தாய்மை அடைவதில் பல பெண்களுக்கு பலவித பிரச்சினைகள், இடர்பாடுகள் ஏற்படுகிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் தாய்மை அடைவது கேள்விக்குறியாக ஒன்றாக உள்ளது. இதற்கு பல காரணங்களை சொல்லலாம்.

thyroid deficiency

உணவு பழக்கங்கள், சிறு வயதிலேயே பூப்படைதல், நவீன மயமாக்கலின் தாக்கம், ஆரோக்கியமற்ற சூழல், தூக்கமின்மை இப்படி காரணங்கள் கூடி கொண்டே போகும். இதன் விளைவாக தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி குழந்தை பெரும் வாய்ப்பை இழக்க செய்கிறது. இதற்காக எண்ணற்ற மருந்துகளையெல்லாம் சாப்பிட்டும் பார்த்துவிடீர்களா..? பலன் ஒன்றும் கிடைக்கவில்லையா..? வருத்தம் வேண்டாம்..' தைராய்டு குறைபாட்டை சரி செய்து தாய்மை பாக்கியத்தை தருகிறது இந்த 8 மூலிகைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டு ஏற்பட காரணம்:-

தைராய்டு ஏற்பட காரணம்:-

நமது உடலில் முக்கிய பங்கு வகிப்பது இந்த தைராய்டு சுரப்பியே. இது அதிகமாக சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ நிச்சயம் பாதிப்பு உண்டு. குறிப்பிட்டு சொல்லப்போனால் தைராய்டு கம்மியாக சுரப்பதால் வரும் விளைவே அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஐயோடின் குறைபாட்டால் இது வருவதால் இதனை ஹைப்போதைராய்டிசம் என்று அழைப்பார்கள். இது உடலின் மெட்டபாலிசத்தை உருக்குலைத்து உடல் பருமன், தூக்கமின்மை, முடி உதிர்தல், மாதவிடாய் பிரச்சினை போன்ற பல வியாதிகளை ஏற்படுத்தும். தாய்மை அடைவதில் அதிக சிக்கலை இந்த குறைபாடு உண்டாக்கும்.

# பிளாடர் வாக் (BLADDER WRACK)

# பிளாடர் வாக் (BLADDER WRACK)

இது ஒரு வகையான கடற்பாசி. அதிக மருத்துவ தன்மை நிறைந்தது. பொதுவாக கடலில் கிடைக்கும் எல்லா பொருட்களிலும் ஐயோடின் அதிகம் நிறைந்திருக்கும். உடலில் ஐயோடினை அதிகரித்து தைராய்டு சுரப்பியை சீரான முறையில் சுரக்க செய்து ஹைப்போதைராடிசத்தை குணப்படுத்தும். கடலில் கிடைக்கும் சில மூலிகைகளில் இது மிகவும் சிறந்தது. மந்தமான உங்கள் சுரப்பிகளை சீர்படுத்தி சுறுசுறுப்பாக வேலை செய்ய செய்கிறது. இதனை 200 mg தினமும் எடுத்து கொண்டால், தைராய்டு பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். மேலும் மன அழுத்தம், பசியின்மை, மன பித்து ஆகியவையும் குணமாகும்.

# கருப்பு வாதுமைகொட்டை

# கருப்பு வாதுமைகொட்டை

உங்களுக்கு கடல் உணவுகள் பிடிக்கவில்லை என்றால் கருப்பு வாதுமை கொட்டை நன்கு உதவும். அதிகம் ஐயோடின் நிறைந்துள்ளதால் தைராய்டு உள்ளவர்களுக்கு நல்ல பலனை தரும். சீரான உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தி தாய்மை அடைய உதவுகிறது. அதிகம் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் சூடு குறையும். இது சாதாரணமாக மளிகை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

#ஆளி விதை

#ஆளி விதை

ஒமேகா - 3 அதிகம் உள்ள ஆளி விதை உங்கள் உடலில் தைராய்டு சுரப்பியை நன்கு சுரக்க செய்கிறது. இது செரிமானத்தை நல்ல முறையில் வைக்கும். ஹார்மோனிகள் குறைபாட்டை நீக்கி ஐயோடினை சுரக்க செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் அளவு ஆளி விதையை சாப்பிட்டு வந்தால் ஹைப்போதைராய்டிசத்தை சரி செய்து குழந்தையின்மை, மாதவிடாய் வலி போன்றவற்றை விரைவில் குணப்படுத்தும்.

#அஸ்வகந்தா

#அஸ்வகந்தா

"மூலிகைகளின் ராஜா" என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்களை கொண்டது. இயல்பாகவே எதிர்ப்பு சக்தியை உடலுக்கு அதிகம் ஏற்படுத்தும். தைராய்டு குறைபாட்டை தீர்ப்பதில் அஸ்வகந்தாவிற்கு நிறைய பங்குண்டு. மேலும் உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக இருக்கவும் உதவுகிறது. வீக்கம் ஏதேனும் உடலில் ஏற்பட்டால் விரைவில் குணமடைய செய்துவிடும். உங்கள் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால் அஸ்வகந்தாவே போதும்.

#பூனைக்காஞ்சொறிச் செடி (Nettle)

#பூனைக்காஞ்சொறிச் செடி (Nettle)

ஹைப்போதைராய்டிசத்தை குணப்படுத்துவதில் இந்த மூலிகைக்கு அதிக மருத்துவ தன்மை உள்ளது. தைரொய்ட் சுரப்பியில் எந்தவித கோளாறு ஏற்பட்டாலும் பூனைக்காஞ்சொறிச் செடிகள் எளிமையாக குணப்படுத்தும். ஐயோடின் குறைபாட்டை தலைகீழாக மாற்றும் வலிமை இதற்கு உள்ளது. இதன் இலைகளை நன்கு வெயிலில் உலர வைத்து, நீரில் கொதிக்க விட்டு டீ போல தினமும் குடித்து வந்தால் தைராய்டு வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

#இஞ்சி

#இஞ்சி

வீட்டிலேயே ஒரு அற்புத மூலிகை உங்கள் தைராய்டு பிரச்சினைகளை சரி செய்கிறதென்றால் நம்புவீர்களா..? ஆமாங்க, இது உண்மைதான். ஆயிரம் மருத்துவ குணங்களை தனக்குளே வைத்திருக்கும் மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் உடலில் சேரும் பாக்டீரியாக்களை அழித்து ஆரோக்கியத்தை சீராக வைக்கும். மேலும் இதில் அதிகம் ஜின்க், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால் தைராய்டு சார்ந்த சிக்கல்களை தீர்க்கும். தினமும் இஞ்சி டீ குடித்து வந்தால் தைராய்டு, கிட்னி சார்ந்த பல நோய்களுக்கு நல்ல பலனை ஏற்படுத்தும்.

#ப்ரிம்ரோஸ்

#ப்ரிம்ரோஸ்

மாலை நேரத்தில் பூக்க கூடிய இந்த ப்ரிம் ரோஸ் தைராய்டு குறைபாட்டுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கிறது. தைராய்டு சுரப்பியை நன்கு சுரக்க செய்து அதன் செயல்பாட்டை சீராக்குகிறது. பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. அத்துடன் முடி உதிர்தல், வறண்ட சருமம், மாதவிடாயின் போது அதிக உத்திர போக்கு ஆகிய பிரச்சினைகளை குணப்படுத்தும்.

#பகுல்வீட் (Bugle weed)

#பகுல்வீட் (Bugle weed)

மிக அறிய வகை மூலிகையை சார்ந்தது பகுல்வீட். மெட்டபாலிசத்தை அதிகரித்து ஹைப்பர்தைராடிசத்தை குணப்படுத்த உதவும். தைராய்டு சுரப்பியில் ஏற்பட்டுள்ள நாள்பட்ட நோய்கள் அனைத்தையும் சரி செய்யும். அதிகமாக சுரக்கும் ஐயோடினை சீராக சுரக்க வைக்கும். மேலும் ஹார்மோன்களில் குறைபாட்டை சமநிலையில் வைக்கவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 herbs for thyroid & pregnancy problem in tamil | தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்க உதவும் 8 மூலிகைகள்.

Thyroid can range from a small, harmless goitre (enlarged gland) that does not need any treatment to a life-threatening cancer. One of the most common thyroid problems is the abnormal production of thyroid hormones.
Story first published: Wednesday, July 25, 2018, 13:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more