For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா?...

யூகலிப்டஸ் என்று அறியப்படும் தைல மரங்கள் மிர்டில் குடும்பத்தைச் சேர்த்த தாவர வகையாகும். தைல மரம் மொத்தம் 700 வகை இனங்களைக் கொண்டது. இவற்றுள் அதிகபட்ச இனங்கள் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை. மற்றவை இ

|

யூகலிப்டஸ் என்று அறியப்படும் தைல மரங்கள் மிர்டில் குடும்பத்தைச் சேர்த்த தாவர வகையாகும். தைல மரம் மொத்தம் 700 வகை இனங்களைக் கொண்டது. இவற்றுள் அதிகபட்ச இனங்கள் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவை. மற்றவை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், போன்ற நாடுகளில் வளர்கின்றன. 700 வகையான இனத்தில் வெறும் 15 வகை மட்டுமே ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் வளர்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக 9 வகைகள் ஆஸ்திரேலியாவில் வளர்வதே இல்லை.

health

இன்றைய நாட்களில் பல்வேறு நாடுகளில் தைல மரங்கள் பயிர் செய்யப்படுகின்றன. ஆஸ்திரேலியா பருவ நிலையை ஒத்து இருக்கும் அமெரிக்கா, மத்திய தரைக்கடல் ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைகண்டம் போன்ற நாடுகளில் தற்போது தைல மரங்கள் வளர்ந்து வருகின்றன. தொழிற்சாலை, மருத்துவம், பாரம்பரியம் என்று பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடு இருந்து வருகிறது. தைல எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த பதிவை மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைல எண்ணெய் பற்றி

தைல எண்ணெய் பற்றி

தைல செடியில் இருந்து எடுக்கப்படும் சாறு தைல எண்ணெய் என்று வழங்கப்படுகிறது. தைல எண்ணெய் அண்டிசெப்டிக், நறுமணப் பொருள், மற்றும் பூச்சிக் கொல்லி என்று பல வடிவத்தில் சிறப்பாக செயலாற்றுகிறது.

தைல எண்ணெய் வணிக ரீதியிலான பொருட்களாகிய மூக்கடைப்பு நீக்கி, பற்பசை, இருமல் மருந்து, தசை வலி களிம்பு, மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

யூகலிப்டஸ் குளோபுளஸில் அல்லது பளு கம்மில் இருந்து யூகலிப்டஸ் எண்ணெயில் பெரும்பகுதி வருகிறது, சுவாச நோய்களுக்கு தைல எண்ணெய் மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. தைல எண்ணெயின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

சளி நீக்க மருந்து

சளி நீக்க மருந்து

இது ஒரு சளி நீக்க மருந்தாக இருப்பது நுரையீரலுக்கு மிகப் பெரிய நன்மையாகும். நுரையீரல், மூச்சுக்குழாய் போன்ற பகுதியில் இருந்து சளி மற்றும் இன்ன பிற கழிவுகளை அகற்றுவதற்கு பயன்படும் ஒரு மருந்தே சளி நீக்க மருந்தாகும். தைல எண்ணெய், நுரையீரலில் உள்ள சளியை தூய்மை படுத்தி , மெலிதாக்கி, வெளியில் வர விடுகிறது. மேலும், சுவாச பாதையில் சளியால் பாதிக்கப்பட்ட இடத்தை சீராக்குகிறது. தைல இலைகளில், சினால் என்ற மூலப்பொருள் உள்ளது. இந்த மூலபொருள் சளியை நீக்க உதவுகிறது.

அன்டி ஆக்சிடென்ட்

அன்டி ஆக்சிடென்ட்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக மாற்றும் அன்டி ஆக்சிடென்ட் தைல எண்ணெயில் அதிகமாக உள்ளது.2012ம் ஆண்டு சைனாவில் நடைபற்ற ஆய்வில் , தைல எண்ணெயில் தாவர அடிப்படையைக் கொண்ட அண்டி ஆக்சிடென்ட்டான பீனோலிக் கூறுகளை கொண்டிருப்பதை ஆய்வின் முடிவில் உறுதி செய்திருக்கின்றனர். நீண்ட நாட்கள் இதனை பயன்படுத்துவதால், சளி, காய்ச்சல், இருமல் மற்றும் இதர சுவாச கோளாறுகள் தடுக்கப்படுகிறது என்று அறியப்படுகிறது.

எரிச்சலைப் போக்குகிறது

எரிச்சலைப் போக்குகிறது

தைல எண்ணெய் எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது. வீக்கம் மற்றும் சிவந்த நிறத்தை போக்கக் கூடிய தன்மையும் இதற்கு உண்டு. ஆகவே சளி ஏற்படும்போது உண்டாகும் தொண்டை எரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது. ஸ்பெயினின் சண்டிகோ டி காம்பொஸ்டேலா பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியில், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை தடுக்கும் திறனுடைய யூகலிப்டஸ் எண்ணெய் காரணமாக இந்த எரிச்சல் கட்டுப்படுவது சாத்தியமாகிவிடும் என்று அறியப்படுகிறது.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு

மூக்கில் ஏற்பட்ட அடைப்பைப் போக்க இந்த எண்ணெய் பெரிதும் உதவுகிறது . மூக்கிலுள்ள இரத்தக் குழாய்களைத் குறுக்கி, வீக்கம் மற்றும் அழற்சியை குறைப்பதன் மூலம் மூக்கடைப்பு மருந்து வேலை செய்கின்றன, இதனால் காற்றோட்டம் எளிதாக இருப்பதால், சளி நீரை சுத்தப்படுத்தவும், வெளியேறவும் அனுமதிக்கிறது. தைல எண்ணெய் ஒரு இயற்கையான மூக்கடைப்பு மருந்தாக செயல்படுகிறது. இது இனிப்பு மாத்திரை மற்றும் சிரப் வடிவத்தில் கடைகளில் கிடைக்கிறது.

சுவாச நோய்கள்

சுவாச நோய்கள்

மேலே உள்ள பண்புகளைக் கொண்ட யூகலிப்டஸ் ஒரு பரந்த அளவிலான சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு அற்புதமான தீர்வை உருவாக்குகிறது. சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறி, ஆஸ்துமா அறிகுறி, அல்லது அபாயகரமான சுவாச கோளாறுகளான நிமோனியா, பிராங்கைடிஸ், காச நோய், சைனஸ் போன்ற நோய்களுக்கும் இது சிறந்த தீர்வைத் தருகிறது.

நுண்கிருமிகள்

நுண்கிருமிகள்

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகளை அழிக்க தைல எண்ணெய் உதவுகிறது. ஒரு சுவாச மருந்திற்கான அடிப்படை தேவை இதுவாகும்.

அரோமா சிகிச்சை

அரோமா சிகிச்சை

சுவாச நோய்களை அனுபவிக்காமல், நுரையீரல்களுக்கான ஒரு ஆரோக்கியமான சுவாச அமைப்புமுறையை ஊக்குவிக்கிறது என்பதால், அது ஒரு அரோமாதெரபி சிகிச்சையின் பலனைப் பெறுவது போன்றதாகும். இதன் புத்துணர்ச்சி நறுமணம், நுரையீரலை நெகிழ்த்தி, மனம் மற்றும் புலன்களை தளர்த்துகிறது. இந்த எண்ணெயில் இந்து வெளிவரும் ஆவி கூட அண்டிசெப்டிக் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் காற்று சுத்தமாகிறது.

காயத்திற்கான மருந்து

காயத்திற்கான மருந்து

தைல எண்ணெயில் இருக்கும் கிருமிநாசினி மற்றும் அண்டிசெப்டிக் தன்மையால் காயங்களை எளிதில் குணமாக்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தை பாதுகாக்கிறது, மேலும் காற்றின் வெளிபாட்டினால் நுண்கிருமிகள் காயத்தை தாக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

மனச்சோர்வு

மனச்சோர்வு

சில நரம்பியல் நிலைமைகள் மற்றும் சீர்குலைவுகளால் பாதிக்கப்படுபவர்களின் மூளை உகந்த முறையில் வேலை செய்வதில்லை. மூளை செயலாற்றலை ஊக்குவிக்கும் ஒரு ஊக்கியாக இந்த எண்ணெய் செயல்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து சந்தோசம் அதிகரிக்கிறது.

தசை வலி

தசை வலி

தைல எண்ணெயின் அழற்சி குறைப்பு தன்மை, தசைகளில் மற்றும் மூட்டுகளில் உண்டாகும் வலிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறது.

வாய்வழி சுகாதாரம்

வாய்வழி சுகாதாரம்

வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்களில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மையால் பற்பசை, மவுத்வாஷ் போன்ற பொருட்களில் இதன் பயன்பாடு உள்ளது. இதனால் பற்குழி, பல் சொத்தை போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சலைப் போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை காய்ச்சல் எண்ணெய் என்றும் அழைப்பார்கள்.

சுவாசக்கோளாறை குணப்படுத்தும் வழிகள்:

சுவாசக்கோளாறை குணப்படுத்தும் வழிகள்:

நீங்கள் உறங்குவதற்கு முன், டிப்ப்யுசரில் சில துளிகள் தைல எண்ணெய்யை ஊற்றி விடவும். இரவு முழுவதும் இந்த எண்ணெய்யை காற்றின் மூலம் சுவாசிப்பதால் மறுநாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

கொதிக்கும் நீரில் சில துளிகள் தைல எண்ணெய்யை ஊற்றி, கலந்து கொள்ள வேண்டும். முகம் துடைக்கும் தவளை இந்த நீரில் முக்கி பிழிந்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் நெற்றில் வைத்து அழுத்த வேண்டும். அடுத்த ஐந்து நிமிடத்திற்கு, மூச்சை வெளியில் விட்டு இழுத்தும் பயிற்சி செய்ய வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் தைல எண்ணெய்யை விட்டு, கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டை எரிச்சல் மற்றும் மூக்கடைப்பு சீராகும்.

ஜெர்மனியில் தற்போது தொண்டை எரிச்சலைப் போக்க தைல டீ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்பில் சில துளிகள் தைல எண்ணெய்யை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இதன் நறுமணம், தொண்டையை இதமாக்கி, இரத்த குழாய்களைத் தளர்த்தி, நுரையீரலுக்கு அதிக பிராணவாயுவை செலுத்த உதவுகிறது. இதனால் சுவாசம் சீராகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Proven Benefits of Eucalyptus for Lungs Health

There are more than 700 species of eucalyptus trees and shrubs, with a majority of them native to Australia and to a lesser extent Indonesia, Philippines as well as Papua New Guinea.
Story first published: Wednesday, June 20, 2018, 13:23 [IST]
Desktop Bottom Promotion