For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பானை வயிறையும் கரைக்கும் பானம்... குடிச்சு பாருங்க எவ்வளவு அற்புதம் நடக்குதுன்னு...

வெந்தய டீ என்றதும் வித்தியாசமாகப் பார்க்காதீர்கள். வெந்தய டீயில் கொழுப்பைக் குறைக்கும் ஏராளமான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன.

|

மழைக்காலம் வந்துவிட்டாலே ஏராளமான நோய்களும் சேர்ந்தே வரும். அடிக்கடி சலதோஷம், காய்ச்சல் போன்றவை நம்மை தொற்றிக் கொள்ளும்.

fenugreek benefits in tamil

எனவே இந்த மாதிரியான நேரங்களில் வெந்தய டீ உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். அதன் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இரத்த குழாய்கள் அடைபடுவதை தடுக்கிறது. வெந்தய டீ கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. எனவே தினசரி வெந்தய டீ குடித்து வந்தால் இதய நோய்கள் பிரச்சினைகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

வெந்தய டீயை தினசரி குடித்து வரும் போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குளுதாதயோன் என்சைம் போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சீரண சக்தி

சீரண சக்தி

வெந்தயத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துகள் உள்ளன. எனவே இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருளால் குடலில் அல்சர் ஏற்படுவதை தடுக்கிறது. சைனீஸ் ஆயுர்வேத முறையில் வெந்தய தேநீர் சீரண சக்தியை மேம்படுத்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த டீ நமது சீரண சக்தியை மேம்படுத்தி சீரண மண்டலத்தை வேகப்படுத்துகிறது.

அழற்சியை எதிர்த்து போரிடுகிறது

வெந்தயத்தில் லினோலிக் மற்றும் லினோலிக் அமிலம் போன்ற அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இது ஒரு மாபெரும் அழற்சி எதிர்ப்பு சக்தியாக செயல்படும்.

மேலும் இந்த டீ கீழ்வாதத்தை குணப்படுத்துகிறது. இந்த வெந்தயத்தை கொண்டு எலிகளில் பரிசோதனை செய்த போது கீழ்வாதத்தை குணப்படுத்துவது என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் வெந்தயம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டி விடுவதே ஆகும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் எடை

உடல் எடை

எடை அதிகமான நபர்கள் 6 வாரம் வெந்தய டீ யை எடுத்து வந்தாலே போதும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைத்து விடும்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

வெந்தயத்தில் இருக்கக் கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இது கார்போஹைட்ரேட் உறிஞ்சும் திறனை மெதுவாக்குகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய டீ உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூளை செயல்பாடு

மூளை செயல்பாடு

வெந்தயத்தில் உள்ள டிரிகோனெலின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் அல்சீமர் நோய், பார்க்கின்சன் நோய் மற்றும் வயது நினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெந்தய டீ அலுமினியத்தால் ஏற்படும் நச்சுத்தன்மையை போக்கி மூளையில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

செக்ஸ் வாழ்க்கை

செக்ஸ் வாழ்க்கை

ஆண்கள் வெந்தய டீயை மூன்று மாதங்களுக்கு குடித்து வந்தால் லிபிடோவை அதிகரிக்கிறது. வெந்தயத்தில் உள்ள சபோனின் ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனின் உற்பத்தியை தூண்டுகிறது.

ஆண்கள் பாலியல் உறவில் ஈடுபடும் போது அவர்களின் பாலியல் உணர்வை தூண்டுதல், எனர்ஜி மற்றும் முழு ஈடுபாடு போன்றவற்றை கொடுக்கிறது. அதே நேரத்தில் இந்த டீ ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனை சமநிலையாக்குகிறது.

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் சுரப்பிற்காக வெந்தயத்தை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு வெந்தயத்தில் உள்ள எண்ணெய் தன்மை காரணமாக அமைகிறது.

ஒரு மாசசூசெட்ஸ் ஆய்வு கூட வெந்தயம் பால் சுரப்பிற்கான சக்தி வாய்ந்த மூலிகை என்று கூறுகிறது. எனவே வெந்தய டீயை எடுத்து வந்தால் தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்தலாம்.

அதே நேரத்தில் மார்பக பெருக்கத்தையும் இது ஏற்படுத்துவதால் மருத்துவரிடம் பரிந்துரை பெற்ற பின் பயன்படுத்துங்கள்.

சுவாச நிவாரணம்

சுவாச நிவாரணம்

வெந்தய டீ சலதோஷத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்கிறது. இந்த டீயை எகிப்திய மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக சலதோஷ பிரச்சினைக்கு பயன்படுத்தி வருகின்றனர். நுரையீரல், தொண்டை மற்றும் மூக்கில் உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றுகிறது.

தொண்டை புண், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

சீக்கிரம் வயதாகுவதை தடுத்தல்

சீக்கிரம் வயதாகுவதை தடுத்தல்

வெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை எதிர்த்து போரிடுகிறது. இந்த வெந்தயத்தை தயிருடன் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

முகத்தில் உள்ள பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை போக்குகிறது. யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை புதுப்பிக்கிறது. ஒட்டுமொத்தமாக சரும ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.

பொடுகுத் தொல்லை போக்க

பொடுகுத் தொல்லை போக்க

நீங்கள் கூந்தலை வாஷ் செய்யும் போது சாம்பு பயன்படுத்திய பிறகு வெந்தய பேஸ்ட்டை பயன்படுத்தி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். சாம்பு போட்ட பிறகு வெந்தய டீ யை கொண்டு உங்கள் கூந்தலை அலசினால் போதும் இதை கண்டிஷனராகவும் செயல்படும்.

தேநீர் தயாரிக்கும் முறை

தேநீர் தயாரிக்கும் முறை

வெந்தய விதைகளை உரலில் வைத்தோ அல்லது மிக்ஸியிலயே நுனிக்கி கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

அதனுடன் வெந்தய பொடியை போட்டு அதனுடன் ஹெர்பல் மூலிகை கூட சேர்த்து கொள்ளலாம்.

மூடியை போட்டு மூடி 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.

இப்பொழுது டீயை வடிகட்டி மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.

அதனுடன் தேன் சேர்த்து சூடாக அல்லது குளிர்ந்த நிலையில் பருகலாம்.

கருவுறுதல் பிரச்சினைகள்

கருவுறுதல் பிரச்சினைகள்

கர்ப்ப காலத்தில் வெந்தய டீ கர்ப்ப பை சுருங்கி விரிதலை தூண்டி சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

இரத்த சர்க்கரை அளவு குறைதல்

அதிகமாக வெந்தய டீ எடுக்கும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக குறைத்து விடும். எனவே மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அழற்சி

அழற்சி

உங்களுக்கு நிலக்கடலை, சோயா பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவை அழற்சி ஏற்படுத்தினால் வெந்தய டீயும் அழற்சி உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே இதை நீங்கள் தவிர்ப்பது நல்லது.

வெந்தயம் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். அதே நேரத்தில் நமக்கு இது ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 Incredible Benefits Of Fenugreek Tea - How To Make It

Fenugreek tea can work wonders. Fenugreek tea is also known to lower the levels of cholesterol, which is one of the largest contributors of heart disease.
Desktop Bottom Promotion