For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளாவில் தரும் மூலிகை நீரில் அப்படி என்னதான் கலக்கறாங்கனு தெரியனுமா? இதப் படிங்க!!

சொர்க்கம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இந்த அதிசய மரத்தை பாருங்க!!

By Gnaana
|

மரங்கள், இயற்கையின் அதிசயங்கள், ஒவ்வொரு மரத்துக்கும், ஒவ்வொரு குணாதிசயம் உண்டு, சில மரங்கள், குளிர்ச்சியான சூழலில் மட்டும் வளரும், சில வெப்பமண்டலத்தில் மட்டுமே வளரும், சில சமவெளிகளில் வளராமல், உயரமான மலைகளில் மட்டும் வளரும், இது போன்று, ஏராளமான மரங்கள் உண்டு, உலகில்.

சமவெளிகளில், மற்றும் அனைத்து மண் வகைகளிலும், வளரும் ஒரு மரம் தான், சைமரூபா மரம். வெளிநாடுகளில் வளர்ந்த மரம், நமது தேசத்தில், கேரள, கர்நாடக மாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப் படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படும் சைமரூபா மரம், மண்ணை வளப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக்கும்.

How to use Paradise Tree as an ayurvedic medicine

அதோடு மட்டுமல்லாமல், காற்றில் உள்ள கார்பனை கிரகித்து, அதிக அளவில் பிராண வாயுவை வெளிப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து, பூமி வெப்பமாவதைக் குறைக்கும் மரம். மனிதர்களுக்கு நல்ல காற்றை அளிக்கும் மரம், என்று பல சிறப்புகள், சைமரூபா மரத்துக்கு இருக்கிறது.

பொதுவாக, விதைகள் மூலம் வளரும் சைமரூபா மரம், விதைத்து மூன்றாண்டுகளில், பூக்கும் பருவத்தை அடையும். அடுத்த சில ஆண்டுகளில், காய்க்க ஆரம்பிக்கும்.

நீண்ட கிளைகளில், அடர் பச்சை வண்ணத்தில் செழுமையான மாவிலைகள் போன்றத் தோற்றத்தில் இலைகளைக் கொண்ட இந்த மரங்களின் காய்கள், கரு நீல வண்ணத்திலோ அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலோ காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லட்சுமி தரு மரத்தின் பயன்கள்

லட்சுமி தரு மரத்தின் பயன்கள்

சைமரூபா மரத்தின் விதைகள் மிக்க நன்மைகள் தருவதாக இருந்தாலும், இந்த மரத்தின் அனைத்து பாகங்களுமே, மனிதர்களுக்குப் பயன்படுகின்றன.

இதன் விதைகளில் இருந்து, உணவில் பயன்படுத்தக் கூடிய செயற்கை நெய் தயாரிக்கப்பட்டு, அமெரிக்க நாடுகளில் மக்கள் வீடுகளில் உபயோகப் படுத்துகிறார்கள்.

மருந்துப் பொருட்கள், இயற்கை சோப் தயாரிப்பு, மெழுகு, சாயம் மற்றும் எண்ணைத் தயாரிப்பில், இந்த மரத்தின் விதைகள் பயன்படுகின்றன.

பண்படுத்தப்பட்ட இதன் புண்ணாக்கு, சிறந்த கால்நடைத் தீவனமாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.

பழச் சாறு தயாரிப்பு :

பழச் சாறு தயாரிப்பு :

விதைகள் எடுக்கப்பட்ட காய்களின் தோல்களில் இருந்து, காகித அட்டைகள் செய்யப் படுகின்றன. பழங்களின் சதைப்பகுதிகள், பழச்சாறுகள் .மற்றும் ஆல்கஹால் தயாரிப்பில் பயன்படுகின்றன.

இதன் காய்ந்த இலைகள் மண்ணுக்கு, இயற்கை உரமாக அமைகிறது. சைமரூபா மரத்தின் வேர்ப் பட்டைகளில் இருந்து, வைரஸ் நச்சுக்களால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க, மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

லட்சுமி தரு :

லட்சுமி தரு :

இத்தகைய ஆற்றல் மிக்க சைமரூபா மரம், நமது தேசத்தில், இலட்சுமி தரு என்று அழைக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் வலிகளைப் போக்குவதில் சிறந்த நிவாரணம் தருகிறது, புழுக்கள், வயிற்றுக் கிருமிகள் போன்றவற்றை அழிக்கும் இயல்புடையது.

உடலில் செரிமானத்தை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மை உடையது. இதன் எண்ணை சமையலில் கடலை எண்ணையைப் போல பயன் தருகிறது. இதுபோன்ற நன்மைகள் கிடைப்பதற்கு, இலட்சுமி தரு எனும் சைமரூபா மரத்தில் இருக்கும், சில வேதித் தாதுக்கள் காரணமாக அமைகின்றன.

புற்று நோய்க்கும் மருந்து இது :

புற்று நோய்க்கும் மருந்து இது :

இத்தனை நன்மைகள் இந்த மரத்தில் இருந்து கிடைத்தாலும், அவற்றை விடப் பெரிய நன்மையாக மனிதர்களின், புற்று வியாதியைப் போக்கும் ஆற்றல் சைமரூபா மரத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டைகளுக்கு இருப்பதாக, அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் இன்று ஏற்படும் வியாதிகளுக்கு எல்லாம் முக்கிய காரணங்களாக விளங்குபவை, மாசுபட்ட காற்று, தண்ணீர், பயிர்களில் அதிக விளைச்சல் தர வைப்பதற்காக தெளிக்கப்படும் இரசாயனங்கள், மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கங்கள், இவற்றால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், மனிதர்களைப் பெரிதும் பாதிக்கின்றன.

அதுபோன்ற பாதிப்புகளில், கடுமையான ஒன்றாக சிலருக்கு, புற்று வியாதிகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு, மருந்துகள் சாப்பிட்டும் நலம் பெற முடியாமல், உடல் நலமும் மன நலமும் கெட்டு, பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்.

இப்படி பாதிப்புகள் உள்ளவர்கள் எல்லோருக்கும், அரும்பெரும் நன்மைகள் தந்து, அவர்களின் உடல் நலத்தை சீராக்கக் கூடிய வல்லமை சைமரூபா மரத்துக்கு உள்ளது என்கின்றனர்.

புற்று வியாதிகளின் பாதிப்பைத் தடுக்கும் :

புற்று வியாதிகளின் பாதிப்பைத் தடுக்கும் :

இலட்சுமி மரம் எனும் சைமரூபா மரத்தில் உள்ள ஒரு அரிய வகைத் தாதுவே, புற்றுகளின் பாதிப்பைத் தடுத்து, குணமாக்குகிறது என்கின்றனர்.

இலட்சுமி மரத்தின் இலைகளை சேகரித்து, அவற்றை நன்கு அலசி, சிறிது தண்ணீரில் இட்டு, நன்கு கொதித்து சுண்டி வரும் போது, அந்தத் தண்ணீரை எடுத்து, தினமும் இரு வேளை பருகி வர, விரைவில் உடலில் பாதிப்புகள் மெல்ல, விலகுவதை உணர முடியும் என்கிறார்கள்.

நாள்பட்ட நோய்களுக்கு :

நாள்பட்ட நோய்களுக்கு :

நாள்பட்ட புற்று பாதிப்புகள் உள்ளவர்களும், தொடர்ந்து இந்த நீரைப் பருகி, வேதனைகள் தந்து வந்த, புற்று வியாதி பாதிப்பில் இருந்து மீண்டு வந்தனர் என்கின்றனர், சைமரூபா மரத்தின் தன்மைகள் அறிந்தவர்கள்.மனிதர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது போல, இதுபோன்ற வியாதிகளில் இருந்து அவர்களைக் காத்து வருவதால், சைமரூபா மரத்தை சொர்க்க மரம் என்றே அழைக்கின்றனர்.

இதன் எண்ணெய் :

இதன் எண்ணெய் :

மேலும், சொர்க்க மரத்தின் எண்ணையை, தொடர்ந்து தினமும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், புற்று வியாதிகளின் பாதிப்புகள் நீங்கும் என்கின்றனர், அத்துடன் உடல் சருமத்தில் உள்ள பாதிப்புகள், வயிற்றுக் கோளாறுகள், செரிமான மின்மை போன்ற கோளாறுகளும் நீங்குகின்றன என்கின்றனர்.

பூமியில் அதிகம் வளர்க்கப்பட வேண்டிய மரங்கள்.

மாசை தடுக்கும் மரம் :

மாசை தடுக்கும் மரம் :

உலகில் தினந்தோறும் வாகனங்களால் ஏற்படும், எரிபொருள் புகை மற்றும் தொழிற்சாலை நச்சுப் புகை, போன்றவற்றால், ஏற்படும் நச்சுக்கள், காற்றில் கலந்து, பூமியின் வெப்ப நிலையை அதிகமாக சூடாக்கி, காற்று மண்டலத்தை மாசு படுத்துகின்றன. இதனால், மனிதர்களின் சுவாசத்தில், நச்சு மாசுக்கள் கலக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன.

இது போன்ற நிலைகளைத் தடுக்கவே, மரம் வளர்ப்பதை ஊக்குவித்து வருகின்றனர், அரசாங்கமும், சமூக ஆர்வலர்களும்.

மனிதர்கள் வாழுமிடங்களில் காற்றில் உள்ள நச்சை உறிஞ்சி, பிராண வாயுவை அதிகம் வெளியேற்றி, மனிதர்கள் அந்த பிராண வாயுவை சுவாசிக்க, நச்சு பாதிப்புகள் எதுவும் இன்றி, நெடுநாள் ஆரோக்கியமாக வாழ, மரங்கள் உதவி செய்கின்றன..

இதுபோன்று அதிகம் வளர்க்கச் சொல்லும் மரங்களில், சிறப்பிடம் பெறுகிறது, சொர்க்க மரம். புங்கன் மரத்துக்கு அடுத்து, சொர்க்க மரம் எனும் சைமரூபா மரத்தை சாலையோரங்களில், தெருக்களில், தோட்டங்களில் மற்றும் வீடுகளில் அதிகம் வளர்க்கச் சொல்கின்றனர்.

கேரள மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு :

கேரள மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு :

நம்மில் பலர் கேரளா சென்றிருக்கலாம், கடவுளின் தேசம் என்பார்கள், பச்சைப்பசேல் மரங்கள், மலைகள், குளுமை நிறைந்த சூழ்நிலை, அத்துடன், மலையாள மக்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக விளங்கும், மூலிகைக் குடிநீர், பதிமுகம் நீர்.

உணவகம் சிறியதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும், முதலில் அவர்கள் தருவது, இந்த பதிமுகம் குடிநீர்தான். இளஞ்சிவப்பு வண்ணத்தில், மூலிகை நறுமணம் வீசும் அந்தக் குடிநீரை, முதல் முறை கண்ணால் காணும் போது, அதன் கலர் சற்று அச்சப் படுத்தினாலும், அந்தக் குடிநீரைப் பருக, சுவையுடன் இருக்கும். எல்லோர் வீடுகளிலும் இந்தக் குடிநீரே, இருக்கும்.

அப்படி என்ன சிறப்பு அந்த நீரில்?

அப்படி என்ன சிறப்பு அந்த நீரில்?

நம் வீடுகளில் பார்த்திருப்போம், பிள்ளைகளுக்கு சளி ஜலதோசம் பிடித்துக் கொண்டால், உடனே மிளகு இரசம், நல்ல காரமாக வைப்பார்கள், சிலருக்கு காரணம் தெரியும், பலருக்கு தெரியாது, அது போல, மூலிகைக் குடிநீர் எதற்கு என்று சிலருக்குத் தெரியும், பலருக்குத் தெரியாது, இருந்தாலும், தெரியாமல் தொடரும், நிறைய அன்றாட நடைமுறைகள் போல, இந்த மூலிகைக் குடிநீரையும், அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.மூலிகைக் குடிநீரில் முக்கிய மூலிகை எது தெரியுமா? சொர்க்க மரம்.

சொர்க்க மரப்பட்டைகள்:

சொர்க்க மரப்பட்டைகள்:

இதில் சொர்க்க மரத்தின் பட்டைகள் மற்றும் இலைகள், புற்று வியாதிகள் மற்றும் வயிற்று பாதிப்புகளைத் தடுப்பதிலும், பதிமுகப் பட்டைகள் சிறுநீரக பாதிப்பு மற்றும் செரிமானம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை சரிசெய்யவும், வல்லவை. மேலும், மூலிகைத் தண்ணீரின் இளஞ்சிவப்பு வண்ணத்துக்கும், இந்த பதிமுகப் பட்டைகளே, காரணமாகின்றன.

குறைந்த விலைக்கு :

குறைந்த விலைக்கு :

இந்த மூலிகைக் குடிநீர், வீடுகள் உணவகங்களில் மட்டுமல்ல, திருக்கோவில் அன்ன தானங்களிலும் வழங்கப்படுகிறது.

இத்தனை நற்பலன்கள் தரும் மூலிகைக் குடிநீர்ப் பொடி, கேரளத்தில், குறைந்த விலைகளில் கிடைக்கிறது.

சொர்க்க மரத்தின் விதைகளைக் கொண்டு, நமது மண்ணிலும், இந்த மரத்தை பரவலாக, வீடுகளில், சாலையோரங்களில், தோட்டங்களில் வளர்த்து வர, சொர்க்கத்தை இங்கேயே, காணும் வாய்ப்பை, எல்லோருக்கும் அளிக்கலாமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use Paradise Tree as an ayurvedic medicine

How to use Paradise Tree as an ayurvedic medicine
Story first published: Tuesday, November 28, 2017, 12:52 [IST]
Desktop Bottom Promotion