For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமலை கட்டுப்படுத்தும் மருந்தினை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம் :

By Hemalatha
|

இருமல் சாதரண வைரஸ் காய்ச்சலாக இருந்தால், காய்ச்சல் சரியானதும் நின்று விடும்.

ஆனால் வறட்டு இருமல் மற்றும் அலர்ஜியினால் வரும் இருமல் சிலருக்கு மாதக்கணக்கில் கூட இருக்கும். எத்தனையோ மருந்துகளை சாப்பிட்டு பார்த்தாலும் குணமாகாமல் படுத்தும்.

அவர்கள் வீட்டில் இந்த சிரப்பினை தயாரித்து குடித்தால், சீக்கிரம் குணமாகிவிடும். இந்த மருந்து கைவசம் இருந்தால் ,வீட்டில் குழந்தைகளுக்கு இருமல் வந்தால் கூட மெடிக்கல் ஷாப்பை தேடிப் போக வேண்டாம். இந்த சிரப்பினைஎப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

Home made syrup for cough

இஞ்சி சிரப் :

தேவையானவை :

இஞ்சி(துருவியது) - கால் கப்

எலுமிச்சை(துருவியது) - 2 டேபிள் ஸ்பூன்
தேன்- 2 ஸ்பூன்
நீர் 1 கப்

இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளுங்கள். எலுமிச்சையை தோலுடன் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கப் நீரினை கொதிக்க வைக்கவும். அதில் துருவிய இஞ்சி மற்றும் துருவிய எலுமிச்சையை போடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறினை சேருங்கள். மேலும் 15 நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்து வெதுவெதுப்பானவுடன், அதில் 1 கப் தேன் சேர்க்கவும்.

இதனை நன்றாக கலக்கி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பருகலாம். தினமும் மூன்று வேளைகளில் 1 டீஸ்பூன் குடிக்கலாம்.

கிளசரின் சிரப் :

தேவையானவை :

கிளசரின் - கால் கப்
தேன் - கால் கப்
எலுமிச்சை சாறு - கால் கப்

இந்த மூன்றையும் நன்றாக ஒன்றாக சேர்த்து, கலக்குங்கள். முழுவதும் நன்றாக கலந்த பின் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் மூன்று வேளைகளில் 1 டீஸ்பூன் குடிக்கலாம்.

இந்த சிரப்புகளை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துங்கள். 6 வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இதனை தரலாம்.

English summary

Home made syrup for cough

Home made syrup for cough
Story first published: Wednesday, June 8, 2016, 17:12 [IST]
Desktop Bottom Promotion