Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
உங்கள் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இத சாப்பிடுங்க...!
குடலில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை சீராக வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குடல் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வயிற்றில் ஏதாவது தொந்தரவு ஏற்படும் போது அதனை குணப்படுத்தும். இதன் குறைபாடு வயிறு ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
எனவே, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க அதனை ஆரோக்கியமாக வைத்திருப்பது முக்கியம். முதலில் இரைப்பை குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியா நுண்ணுயிரிகளின் சரியான சமநிலை இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நல்ல குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல வழிகள் இருந்தாலும், உங்கள் சமையலறை அலமாரியில் இருக்கும் சில பொருட்கள் உங்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும்.

இஞ்சி
இஞ்சியில் உள்ள முக்கியக் கலவைகளான ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகோல்ஸ், வயிற்றின் சுருக்கங்கள் மற்றும் காலியாக்குதலைத் தூண்ட உதவும். இதனால் தசைப்பிடிப்பு, வீக்கம், வாயு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும். இந்த கலவைகள் சில அழற்சி பாதைகளைத் தடுப்பதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
கற்றாழை
கற்றாழை ஒரு இயற்கை மலமிளக்கியாக கருதப்படுகிறது. கற்றாழை இலை உட்புறத்தில் கலவைகள் மற்றும் தாவர சளி நிறைந்துள்ளது. இவை செரிமான மண்டலத்தின் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
சோம்பு
இதில் அனெத்தோல், ஃபென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் ஆகியவை அஜீரணம் மற்றும் வீக்கத்தை குணப்படுத்த அற்புதமாக வேலை செய்கின்றன.
துளசி
புதினா வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான அறிகுறிகளை நீக்குகிறது. துளசி உங்கள் செரிமான அமைப்பை தளர்த்துகிறது மற்றும் வயிற்று வலியை குறைக்கிறது. இது மென்மையான தசைகள் சுருங்குவதைத் தடுக்கிறது, இது உங்கள் குடலில் உள்ள பிடிப்பைக் குறைக்கும்.
சீரகம்
சீரகம் கார்மினேடிவ் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை செரிமான மண்டலத்தில் வாயு உற்பத்தி மற்றும் திரட்சியைக் குறைப்பதன் மூலம் வாயு மற்றும் வீக்கத்தைத் தணிக்க உதவும்.
திரிபலா
திரிபலாவில் மூன்று முக்கியமான மூலிகைகள் உள்ளன, அதாவது அமலாகி (அம்லா), ஹரிடகி (ஹராட்) மற்றும் பிபிதாகி (பஹேடா), இவை அனைத்தும் மலச்சிக்கலைப் போக்க உதவுவதாக அறியப்படுகிறது. தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் வெதுவெதுப்பான பால் / வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் திரிபலாவை கலந்து குடிக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

