For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்மில் இந்த மாதிரி உடற்பயிற்சி செஞ்சா மாரடைப்பு வருமாம்... இனிமே ஜாக்கிரதையா இருங்க...

இதய நோய் நிபுணர்களின் கூற்றுப்படி, ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் அதிக எடையை தூக்குபவர்களுக்கு மாரடைப்பின் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் தான் இளைஞர்களிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரித்து வருகிறது.

|

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஊடக அறிக்கைகளின் படி, புனித் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

Why Heart Attack Is Common Around People Who Go To The Gym For Workout?

இதற்கு முன்பு உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு பல பிரபலங்கள் இறந்துள்ளனர். சரி, இதயத்திற்கும், கடுமையான உடற்பயிற்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து இப்போது விரிவாக தெரிந்து கொள்வோம்.

MOST READ: மாரடைப்பால் காலமான கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயம் மற்றும் உடற்பயிற்சி

இதயம் மற்றும் உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது பலர் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தேவைக்கு அதிகமாக உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். கடுமையாக உடற்பயிற்சியை செய்வது இதயத்திற்கு ஆபத்தானது. அதுவும் மரபணு ரீதியாக பாதிக்கப்படக்கூடிய இதய நோயாளிகள் கடுமையான உடற்பயிற்சியை செய்வது மிகவும் ஆபத்தானது. இதய நோய் நிபுணர்களின் கூற்றுப்படி, ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் அதிக எடையை தூக்குபவர்களுக்கு மாரடைப்பின் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் தான் இளைஞர்களிடையே மாரடைப்பு பிரச்சனை அதிகரித்து வருகிறது.

கடுமையான உடற்பயிற்சியின் மூலம் மட்டும் தான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியும் என்பதில்லை. அதற்கு பதிலாக, பிராணயாமா, யோகா மற்றும் தினமும் 30-45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இம்மாதிரியான பயிற்சிகள் இதயத்தின் நரம்புகளில் சிறப்பான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மேலும் இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தும் குறைகிறது.

அதிகப்படியான உடற்பயிற்சிக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு

அதிகப்படியான உடற்பயிற்சிக்கும் இதயத்திற்கும் உள்ள தொடர்பு

சாதாரண உடற்பயிற்சி செய்பவர்களுடன் ஒப்பிடும் போது, ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் சில நேரங்களில் தங்கள் உடல் திறன்களின் வரம்புகளை அதிகரிப்பதற்கு அதிகமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். இவர்கள் 50 மைல்கள் அல்லது அதற்கு மேல் ஒடுகிறார்கள் அல்லது கடுமையான உடற்பயிற்சியை செய்கிறார்கள். இப்படியே தொடர்ந்து செய்யும் போது, அது கடுமையான உடல் சோர்வு, உடல் வறட்சி மற்றும் வலியை அதிகரித்து, மருத்துவமனையில் சேர்க்க வழிவகுக்கும்.

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக ஓட்டம் காரணமாக தடகள வீரர்களின் இரத்த மாதிரிகளில் இதய பாதிப்புடன் தொடர்புடைய தடயங்கள் கண்டறியப்பட்டது. இம்மாதிரியான தடயங்கள் பொதுவாக தானாகவே மறைந்துவிடும். ஆனால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இதயம் அதிக அழுத்தத்திற்கு உட்படும் போது, அந்த தற்காலிக சேதம் இதயத்தை மறுவடிவமைக்க முடியாமல் போகும் அல்லது இதய சுவர்கள் மற்றும் இதயத்தில் வடு போன்ற மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

கூடுதலாக, அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி திடீர் மாரடைப்பு அல்லது திடீர் மாரடைப்பால் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. குறிப்பாக ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி அல்லது கரோனரி இதய நோய் உள்ளவர்களுக்கு இது இதய தாளக் கோளாறுகளின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.

எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்யாதவர்களை விட அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும், ஏதேனும் உள் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக உடற்பயிற்சியை செய்யும் போது, அரித்மியா அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பைத் தூண்டும்.

பல ஆய்வுகளில் உடற்பயிற்சி செய்வது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக உடற்பயிற்சி செய்ய தொங்கும் போது, அதிகரித்த உடல் வலிமை, குறைந்த இரத்த அழுத்தம், நல்ல தூக்கம் மற்றும் கூர்மையான நினைவாற்றல் போன்ற பலன்களைப் பெறக்கூடும். அதோடு உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் அபாயம் குறையும். மொத்தத்தில், அதிக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உடலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே எப்போதும் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட பரிந்துரைக்கிறது. மிதமான உடற்பயிற்சியில் நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது நீச்சல் போன்ற செயல்பாடுகள் அடங்கும். பொதுவாக மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஒருவேளை உங்களுக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது இதய நோயின் வரலாறு இருந்தால் அல்லது இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் இருந்தால், உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விளையாட்டு வீரர்கள் அல்லது போட்டிக்காக ஜிம்மிற்கு வருபவர்கள் இருதயநோய் நிபுணரின் ஆலோசனையின் படி உடற்பயிற்சியில் ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Heart Attack Is Common Around People Who Go To The Gym For Workout?

Many celebrities have said goodbye to this world due to heart attack during workout. Let us know what is the relation between heart and heavy workout?
Desktop Bottom Promotion