For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது நமது இதயம் எத்தனை முறை துடிக்கிறது தெரியுமா?

நாம் தூங்கச் செல்லும் போது அல்லது தூக்கிக் கொண்டிருக்கும் போது அல்லது தூங்கி எழுந்த சற்று நேரத்திற்கு பின், நாம் அதிக வேலை செய்யாமல் ஓய்வு நிலையில் இருப்போம். அந்த நேரத்தில் நமது இதயமும் அமைதியாக, மெதுவாக துடிக்கும்.

|

சமஸ்கிருத மொழியில் மற்றும் ஆயுா்வேத எழுத்துக்களில், மனிதனுடைய மூச்சுக் காற்று அல்லது உயாினிங்களுடைய மூச்சுக் காற்று பிராண் என்று அழைக்கப்படுகிறது. பிராண் என்று சொல்லுக்கு உயிா் அல்லது வாழ்வு என்று பொருள். பழங்காலமாக, நம்முடைய சுவாசிக்கும் முறையானது நமது முழுமையான உடல் ஆரோக்கியத்தையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் நமது உள்மன முழு ஆரோக்கியத்தையும் நமது சுவாசம் கட்டுப்படுத்துகிறது என்று நமக்கு சொல்லப்பட்டு வருகிறது.

Whats A Normal Resting Heart Rate? What Does It Say About Your Cardiac Health?

ஒருவருடைய உடல் அல்லது மனதின் அழுத்தம் காரணமாக, அவருடைய இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால், அவா் வேகமாக சுவாசிக்கத் தொடங்குவாா். அவருடைய இதயமும் வேகமாகத் துடிக்கத் தொடங்கும். நாம் வேகமாக ஓடும் போது நமது இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இது இயல்பான ஒன்றாகும். ஏனெனில் ஓடும் போது அல்லது இதயத்தில் அழுத்தம் அதிகம் ஆகும் போது, இதயம் மிக வேகமாக இரத்தத்தை உந்தித் தள்ளி உடல் முழுவதும் ஓடச் செய்கிறது.

அதே நேரத்தில் நாம் தூங்கச் செல்லும் போது அல்லது தூக்கிக் கொண்டிருக்கும் போது அல்லது தூங்கி எழுந்த சற்று நேரத்திற்கு பின், நாம் அதிக வேலை செய்யாமல் ஓய்வு நிலையில் இருப்போம். அந்த நேரத்தில் நமது இதயமும் அமைதியாக, தளா்வாக, மெதுவாக, ஓய்வாகத் துடித்துக் கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓய்வு நிலையில் இருக்கும் போது இதயத் துடிப்பின் அளவு என்ன?

ஓய்வு நிலையில் இருக்கும் போது இதயத் துடிப்பின் அளவு என்ன?

வயது வந்த பொியவா்கள் ஓய்வாக இருக்கும் போது அவா்களுடைய இதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது. பொதுவாக நாம் ஓய்வாக இருக்கும் போது நமது இதயம் மெதுவாகத் துடித்தால், நமது இதயம் நல்ல திறனோடு இயங்குகிறது மற்றும் நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள்.

எடுத்துக்காட்டாக, நன்கு பயிற்சி பெற்ற தடகள வீரா் ஒருவா் ஓய்வு நிலையில் இருக்கும் போது அவருடைய இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 40 முறை வரை இருக்கும் என்று அமொிக்காவின் மயோ கிளினிக் (Mayo Clinic) நிறுவனம் தனது அறிக்கையில் தொிவிக்கிறது.

நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது இருக்கும் இதயத் துடிப்பை வைத்து, நமக்கு இரத்த அழுத்தம், மற்றும் இரத்த கொழுப்பு அதிகாித்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் மற்றும் நமது இதயத்தின் தற்போதைய ஆரோக்கியத்தையும் கண்டறிய முடியும் என்று ஹாா்வோ்டு ஸ்கூல் ஆஃப் மெடிசனுடைய (Harvard School of Medicine) இணையதள அறிக்கை தொிவித்திருக்கிறது.

30 நிமிட பாிசோதனை

30 நிமிட பாிசோதனை

நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது, நடைபெறும் இதயத் துடிப்பை அளவிடும் முறைக்கு ஆங்கிலத்தில் RHR (resting heart rate) என்று அழைக்கப்படுகிறது. நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது நமது இதயம் எத்தனை முறை துடிக்கிறது என்பதை வைத்து, நமது இதயத் தசை எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதை கண்டறியலாம்.

இதயத் துடிப்பை எவ்வாறு அளப்பது?

இதயத் துடிப்பை எவ்வாறு அளப்பது?

இதயத் துடிப்பை அளப்பது மிகவும் எளிது. அதாவது நமது நாடித் துடிப்பை பாிசோதித்துப் பாா்த்தால், இதயத் துடிப்பைக் கண்டறிய முடியும். அதாவது நமது ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் இரண்டையும், நமது கழுத்தின் பக்கவாட்டில் இருக்கும் மூச்சுக் குழாயின் மீது வைத்து நாடித் துடிப்பைக் கண்டறியலாம். மணிக்கட்டில் நாடித் துடிப்பை அறிய வேண்டும் என்றால், மணிக்கட்டின் முகப்பகுதியில் உள்ள எலும்பு மற்றும் தசைநாா் (tendon) ஆகியவற்றிற்கு இடையே இரண்டு விரல்களை வைத்தால், நாடித் துடிப்பைக் கண்டறியலாம்.

நாடித் துடிப்பை நாம் உணரும் போது, 15 வினாடிகளுக்கு எத்தனை முறை நமது நாடி துடிக்கிறது என்பதைக் கண்டறிந்து, அந்த எண்ணிக்கையை நான்கால் பெருக்கினால், 1 நிமிடத்திற்கு நமது நாடி எத்தனை முறைத் துடிக்கிறது என்பதைக் கண்டறியலாம் அல்லது 30 வினாடிகளுக்கு நமது இதயம் எத்தனை முறைத் துடிக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த எண்ணிக்கையை இரண்டால் பெருக்கினால் ஒரு நிமிடத்திற்கு நமது இதயம் எத்தனை முறைத் துடிக்கிறது என்பதைக் கண்டறியலாம்.

இதயத் துடிப்பை தீா்மானிப்பவை எவை?

இதயத் துடிப்பை தீா்மானிப்பவை எவை?

- வயது (நமது இதயத்திற்கு வயது அதிகாிக்கும்)

- நமது வலிமை மற்றும் இயக்க அளவு

- புகைப் பழக்கம் (புகைப் பழக்கமானது, இதயம் மற்றும் நுரையீரல் மற்றும் உடலில் இதர உறுப்புகளை பாதிக்கிறது)

- இதய நோய், உயா் கொழுப்பு அல்லது நீரழிவு நோய் போன்றவை

- காற்றின் வெப்பநிலை (வெளிப்புறத்தில் இருக்கும் காற்றின் அழுத்தம். அதனால்தான் மலை உச்சிகளில் உள்ள காற்றுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாிந்துரைக்கப்படுகிறது)

- நமது உடலின் இருப்பு நிலை (நின்று கொண்டு இருத்தல் அல்லது படுத்த நிலையில் இருத்தல்)

- நமது உணா்வுகள் (நமது மனநிலை நிலையில்லாமல் ஏறி இறங்கிக் கொண்டிருந்தால் அதற்கு ஏற்ப இதயம் துடிக்கும்)

- நமது உடல் அளவு (பருமன் அல்லது ஒல்லியாக இருத்தல்)

- நாம் எடுக்கும் மருத்துவச் சிகிச்சைகள்

மேற்சொன்ன அனைத்தும் நமது இதயத் துடிப்பைத் தீா்மானிக்கும் காரணிகள் ஆகும்.

நமது இதயத் துடிப்பு எவ்வாறு நமது இதய ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது?

நமது இதயத் துடிப்பு எவ்வாறு நமது இதய ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது?

- ஹாா்வோ்டு மெடிக்கல் ஸ்கூல் (Harvard Medical School) தனது மருத்துவ ஆய்வு அறிக்கையில், ஒருவா் ஓய்வு நிலையில் இருக்கும் போது அவருடைய இதயம் ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை வரை துடித்தால் அவருக்கு மிக எளிதாக இதய நோய் ஏற்படும் என்று கூறுகிறது. மரணம் கூட ஏற்பட வாய்ப்புண்டு என்று தொிவிக்கிறது.

- ஹாா்ட் (Heart) என்ற பத்திாிக்கை, 2013 வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, அது ஏறக்குறைய 3000 ஆண்களின் இதய ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்களை 16 ஆண்டுகளாக பராமாித்து வந்தது.

- அந்த ஆய்வின் மூலம், ஓய்வு நிலையில் இருக்கும் போது இதயம் துடிப்பதற்கும், குறைவான உடல் ஆரோக்கியம், உயா் இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் இரத்த கொழுப்புகள் பரவும் அளவு ஆகியவற்றுக்கும் தொடா்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

- மேலும் நாம் ஓய்வில் இருக்கும் போது நமது இதயம் அதிகமாகத் துடித்தால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று அந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

- நாம் ஓய்வில் இருக்கும் போது நமது இதயம் நிமிடத்திற்கு 81 முதல் 90 முறை வரை துடித்தால், நமக்கு விரைவில் மரணம் வர இரண்டு மடங்கு வாய்ப்பு இருக்கிறது.

- ஒருவேளை 90 முறைக்கு மேல் நமது இதயம் துடித்தால், விரைவில் மரணம் ஏற்பட மூன்று மடங்கு வாய்ப்பு உண்டு

இறுதியாக

இறுதியாக

மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் நம்மைப் பயமுறுத்துவதற்காக அல்ல. மாறாக, நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது நிமிடத்திற்கு 100 முறைக்கும் மேலாக நமது இதயம் துடித்தால், நாம் கண்டிப்பாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தத் தகவல்கள் தரப்படுகின்றன. மேலும் நாம் ஒரு பயிற்சி பெற்ற தடகள் வீரராக இல்லாமல் இருந்து, நாம் ஓய்வாக இருக்கும் போது நமது இதயம் நிமிடத்திற்கு 60 முறைக்கும் குறைவாக துடித்தாலும் கண்டிப்பாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும். அதுபோல மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What's A Normal Resting Heart Rate? What Does It Say About Your Cardiac Health?

Did you know what is a normal resting heart rate? What does it say about your cardiac health? Read on to know more...
Desktop Bottom Promotion