For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப தினமும் ஒரு கையளவு இத சாப்பிடுங்க போதும்...

ஆரோக்கியமான உணவுகளுடன் உடற்பயிற்சியையும் அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதேப் போல் நட்ஸ்களும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

|

தற்போது இதய பிரச்சனையால் தான் ஏராளமானோர் இறக்கின்றனர். புதிய ஆய்வின் படி, ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது இதய நோய்களை தடுக்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மெயில்மேன் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள், ஈறு ஆரோக்கியம் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் முன்னேற்றத்தைக் குறைப்பதைக் கண்டறிந்தது. இந்த ஆய்வை அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஜர்னல் வெளியிட்டது.

What Nuts And Seeds Are Beneficial For Heart Health

இதய நோய், பக்கவாதம் மற்றும் இறப்புக்கு முக்கியமான ஆபத்து காரணியாக பெருந்தமனி தடிப்பு உள்ளது. இது தமனிகளின் சுவர்களில் ப்ளேக்குகளின் கட்டமைப்பால் தமனிகளை சுருக்கி, பல்வேறு இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான உணவுகளுடன் உடற்பயிற்சியையும் அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதேப் போல் நட்ஸ்களும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

MOST READ: உங்க இரத்த பிரிவை சொல்லுங்க.. எடை குறைய எந்த மாதிரி உணவை சாப்பிடணும்-ன்னு சொல்றோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியத்தில் நட்ஸ்களின் பங்கு

இதய ஆரோக்கியத்தில் நட்ஸ்களின் பங்கு

நட்ஸ்களை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், அவற்றில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோயால் ஏற்படும் மரணத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் நட்ஸ்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களின் அளவு மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. இதனால் பெருந்தமனி தடிப்பு நோயின் அபாயம் தடுக்கப்படுகிறது.

இப்போது நட்ஸ்களில் எந்த நட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதைக் காண்போம்.

பிஸ்தா

பிஸ்தா

பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு மற்றும் இதில் வைட்டமின் பி6, காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஆகவே மாலை வேளையில் பசி எடுக்கும் போது கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடாமல், ஆரோக்கியமான பிஸ்தாவை ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதனால் பசியும் அடங்கும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

பாதாம்

பாதாம்

பாதாமில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. பாதாமை அன்றாட உணவில் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வேர்க்கடலை

வேர்க்கடலை

வேர்க்கடலையில் புரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, தயமின் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் வளமான அளவில் ஒலியிக் அமிலம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆகவே வேர்க்கடலை பிடிக்கும் என்பவர்கள், இதை தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, மக்னீசியம், ஜிங்க் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் இந்த விதைகளில் அதிக அளவிலான ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது. இதய நோய்கள் ஒருவருக்கு வருவதற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் என்பதால், மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

இந்த சிறிய ஆளி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது மற்றும் இத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கிறது. மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் லிக்னன்கள் உள்ளன. இந்த சிறிய விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் திறன் கொண்டவை. அதற்கு ஆளி விதைகளை பொடி வடிவில் உட்கொள்ள வேண்டும். இதனால் அவை எளிதில் ஜீரணிக்கப்படுவதோடு, அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சவும் முடியும்.

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதைகளில் இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் உள்ள அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதோடு இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்க இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Nuts And Seeds Are Beneficial For Heart Health

A healthy diet together with exercise is important for maintaining heart health. Nuts lower bad cholesterol levels and inflammation. Let us take a look at what nuts and seeds are beneficial for heart health.
Story first published: Wednesday, February 17, 2021, 17:39 [IST]
Desktop Bottom Promotion