For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகர் விவேக்கின் உயிரைப் பறித்த கார்டியோஜெனிக் அதிர்ச்சி: இந்நிலை பற்றி பலரும் அறியாத விஷயங்கள்!

தமிழ் நகைச்சுவை நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான விவேக், சனிக்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் கார்டியாக் அரெஸ்ட் என்னும் திடீர் மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் காலமானார்.

|

சுமார் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ் நகைச்சுவை நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான விவேக், சனிக்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் கார்டியாக் அரெஸ்ட் என்னும் திடீர் மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்களின் கூற்றுப்படி, நடிகர் விவேக்கிற்கு இடது முன்புற தமனியில் (LAD/left anterior descending artery) 100% அடைப்பு இருந்ததாகவும், இது தான் கார்டியோஜெனிக் அதிர்ச்சி/திடீர் மாரடைப்பிற்கு வழிவகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையின் படி, நடிகர் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தார் மற்றும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து ECMO ஆதரவில் தான் இருந்தார். மேலும் இவர் ஏற்கனவே கோவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளார். ஆனால் இவருக்கு ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட்டிற்கும், கோவிட்-19 தடுப்பூசிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

59 வயதான நடிகர் விவேக் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மயக்க நிலையில் தான் குடும்பத்தினரால் சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டியைத் தொடர்ந்து அவசர கரோனரி ஆஞ்சியோகிராமிற்கு உட்படுத்தப்பட்டார் என்றும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்போது நடிகர் விவேக்கின் உயிரைப் பறித்த கார்டியோஜெனிக் அதிர்ச்சி (Cardiogenic Shock) என்றால் என்ன, இடது முன்புற தமனியில் அடைப்பு (Left Anterior Descending Artery Blockage) இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன மற்றும் அது எந்த காரணத்தினால் ஏற்படுகிறது என்பன போன்ற கேள்விகளுக்கான விடையைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்டியோஜெனிக் அதிர்ச்சி என்றால் என்ன?

கார்டியோஜெனிக் அதிர்ச்சி என்றால் என்ன?

கார்டியோஜெனிக் அதிர்ச்சி என்பது உடலுக்குத் தேவையான போதுமான இரத்தத்தை இதயத்தால் செலுத்த முடியாத ஒரு நிலை. இந்நிலையானது கடுமையான மாரடைப்பால் ஏற்படுகிறது.

இடது முன்புற தமனி அடைப்பு

இடது முன்புற தமனி அடைப்பு

இடது முன்புற தமனியில் 100 சதவீத அடைப்பு இருந்தால் ஏற்படுவது தான் விடோமேக்கர் மாரடைப்பு. இது ஒரு வகையான மாரடைப்பு ஆகும். இது சில நேரங்களில் நாள்பட்ட மொத்த அடைப்பு (CTO) என்றும் குறிப்பிடப்படுகிறது. இடது முன்புற தமனி தான் இதயத்தில் புதிய இரத்தத்தைக் கொண்டு செல்கிறது. இதனால் தான் இதயம் சரியாக பம்ப் செய்ய தேவையான ஆக்ஸிஜனைப் பெறுகிறது. இதில் தடை ஏற்பட்டால், இதயம் மிக வேகமாக நிறுத்தப்படலாம். அதனால் தான் இந்த வகை மாரடைப்பை 'விடோமேக்கர் மாரடைப்பு' என்று அழைக்கிறார்கள்.

விடோமேக்கர் மாரடைப்பின் அறிகுறிகள்

விடோமேக்கர் மாரடைப்பின் அறிகுறிகள்

விடோமேக்கர் மாரடைப்பின் அறிகுறிகள் மற்ற வகை மாரடைப்பின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மற்ற மாரடைப்புகளைப் போலவே, மாரடைப்பு வரும் வரை எந்த அறிகுறிகளையும் நீங்கள் கவனிக்க முடியாது. ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடுங்கள். 100 சதவிகித இடது முன்புற தமனியில் அடைப்பு இருந்தால் வெளிப்படும் சில எச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு...

* மார்பு வலி அல்லது அசௌகரியம்

* கைகள், கால்கள், முதுகு, கழுத்து அல்லது தாடை ஆகிய பகுதிகளில் வலியை சந்திப்பது

* நெஞ்செரிச்சலைப் போல் அடிவயிற்றுப் பகுதியில் கடுமையான வலி

* கழுத்து அல்லது மார்பு பகுதியில் உள்ள தசையை இழுப்பது போன்ற வலி

* சுவாசிப்பதில் சிரமம்

* மயக்கம், லேசான தலை வலி

* திடீரென்று பயங்கரமாக வியர்ப்பது

* உடல்நிலை சரியில்லாமை

* இதயம் துடிப்பது நிற்பது போன்ற உணர்வு

பெண்கள் மார்பு வலி இல்லாமல் மேலே கொடுக்கப்பட்டுள்ள பல அறிகுறிகளை அனுபவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.

விடோமேக்கர் மாரடைப்பு வருவதற்கு என்ன காரணம்?

விடோமேக்கர் மாரடைப்பு வருவதற்கு என்ன காரணம்?

இடது முன்புற தமனியில் முழுமையான அடைப்பு ஏற்பட்டால் வருவது தான் விடோமேக்கர் மாரடைப்பு. இதயத்தில் இடது முன்புற தமனி தான் அதிக அளவு இரத்தத்தைக் கடத்துகிறது. எனவே இந்த தமனி வழியாக இரத்தம் செல்லாமல் இருக்கும் போது, இதயம் விரைவாக ஆக்ஸிஜன் இல்லாமல் செயலிழந்து நின்று போகலாம்.

இடது முன்புற தமனி பொதுவாக அதிகமான கொலஸ்ட்ராலில் இருந்து பிளேக் மூலம் அடைக்கப்படுகிறது. இந்நிலையே பெருந்தமனி தடுப்பு அழற்சி (Atherosclerosis) என்று அழைக்கப்படுகிறது.

ப்ளேக்குகள் தமனிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இரத்த உறைவுகளை உண்டாக்கும். சில சந்தர்ப்பங்களில், தமனிகளில் ஓரளவு மட்டும் அடைப்பு இருந்தாலும் கூட, இரத்த உறைவுக் கட்டிகள் வேகமாக உருவாகி 100 சதவீத அடைப்பை ஏற்படுத்தும்.

ஆபத்துக் காரணிகள்

ஆபத்துக் காரணிகள்

எந்தவொரு மாரடைப்பையும் போலவே, விடோமேக்கர் மாரடைப்பிற்கான முன்மையான ஆபத்துக் காரணி வாழ்க்கை முறை தேர்வுகள் அல்லது மரபணு காரணிகள். இவையே உடலில் உள்ள கொழுப்பின் அளவை பாதிக்கும் நம்பகமான மூலமாகும். உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டால், உங்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் வயதாகும் போது மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகம் இருக்கும்.

வாழ்க்கை முறை காரணிகள்

வாழ்க்கை முறை காரணிகள்

விடோமேக்கர் மாரடைப்பிற்கான சில வாழ்க்கை முறை ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு:

* சிகரெட் புகைப்பது அல்லது புகையிலை மெல்லுவது

* அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்

* இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளான பதப்படுத்தப்பட்ட தானியங்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், முழு கொழுப்பு நிறைந்த பால், சோடியம் ஆகியவற்றை உண்பது

* உயர் இரத்த அழுத்தம்

* இரத்தத்தில் எல்.டி.எல் அல்லது "கெட்ட" கொழுப்பு அதிகமாக இருப்பது

* இரத்தத்தில் ஹெச்டிஎல் அல்லது "நல்ல" கொழுப்பு குறைவாக இருப்பது

* சர்க்கரை நோய் அல்லது முன் நீரிழிவு நோய்

* போதுமான உடற்பயிற்சின்மை

மரபணு காரணிகள்

மரபணு காரணிகள்

மாரடைப்பு அல்லது பிற மாரடைப்பு நோய்களுக்கு உங்களை மேலும் பாதிக்கக்கூடிய மரபணு காரணிகள் பின்வருமாறு:

* இனம் - நீங்கள் ஐரோப்பிய, ஆப்பிரிக்க-அமெரிக்கர் அல்லது பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தால், மாரடைப்பு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

* மரபணு நிலைமைகள் - சில அரிதான நிலைமைகள் மாரடைப்புக்கான உங்கள் ஆபத்தை அதிகரிக்கும் ஒற்றை மரபணு (மோனோஜெனிக் நிலைமைகள் என அழைக்கப்படுகின்றன) வழியாக அனுப்பப்படுகின்றன. இவற்றில் ஹைபர்கொலெஸ்டிரோலீமியா அடங்கும். சில சந்தர்ப்பங்களில், பல மரபணு மாறுபாடுகளால் (பாலிஜெனிக் நிபந்தனைகள் என அழைக்கப்படுபவை) ஏற்படும் நிலைமைகள் உங்களை டிஸ்லிபிடெமியா போன்றவற்றிற்கு உள்ளாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil Actor Vivek Passes Away At 59 Due To Left Anterior Descending Artery Blockage

Tamil actor Vivek passed away on Saturday after suffering a cardiac arrest. The private hospital in Chennai, where Vivek, 59, was being treated, said he suffered “an acute coronary syndrome with cardiogenic shock.
Story first published: Saturday, April 17, 2021, 11:58 [IST]
Desktop Bottom Promotion