For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொன்னா நம்பமாட்டீங்க... இதெல்லாம் மாரடைப்பை வரத் தூண்டும்... உஷாரா இருந்துக்கோங்க...

|

நாவல் கொரோனா வைரஸ் மக்களிடையே ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை அதிகரித்துள்ளது. இன்னும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், எதிர்காலத்தில் கொரோனா தொற்றுநோய் எந்த மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்க வைக்கும் என்பதை நமக்கு தெரியாது. ஆரம்பத்தில், இது ஒரு சுவாச நோயாக கண்டறிப்பட்ட இந்த தொற்றுநோய், தற்போது பலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கி வருகிறது.

ஏற்கனவே இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தெரியும். இந்த மாதிரியான செய்திக்கு பின், இதய பிரச்சனை இருப்பவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

MOST READ: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி பலருக்குத் தெரியாத சில உண்மைகள்!

ஏன் சமீபத்தில் கூட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் உலகை விட்டுப் பிரிந்தார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, முன்பை விட இனிமேல் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: சளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக இதய தினம்

உலக இதய தினம்

நம் அனைவருக்கும் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவை இதயத்தில் பாதிப்பை உண்டாக்கும் என்பது தெரியும். ஆனால் ஆராய்ச்சியாளர்களோ, பல பாதிப்பில்லாத பழக்கவழக்கங்கள் இதய நோய்க்கு வழிவகுக்கும் என அடையாளம் கண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இதய தினம் என 'உலக இதய கூட்டமைப்பால்' (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக இதய தினத்தை கொண்டாடுவதற்கு முன்னதாக, பலரும் அறிந்திருக்கத சில இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களையும், ஆரோக்கியமாக இருக்க மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் அதைப் பார்ப்போம்.

போக்குவரத்து தாமதம்

போக்குவரத்து தாமதம்

நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் போக்குவரத்து தாமதங்களை மாரடைப்பு ஏற்படும் அபாயத்துடன் இணைத்துள்ளனர். நிச்சயமாக, நீங்கள் தினமும் டிராபிக் சிக்னலில் பல மணிநேரம் சிக்கிக் கொண்டிருக்கும் போது, எவ்வளவு டென்சன் ஆவீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். டிராபிக்கில் ஒரு மணிநேரம் சிக்குவது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் அதிக இரைச்சல் அளவுகளும் இதய நோயுடன் இணைக்கப்பட்டுள்ளன.

தீர்வு

தீர்வு

நீங்கள் டிராபிக் அதிகம் இருக்கும் நேரத்தில் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தால், டிராபிக் சிக்னலால் மன அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்க, உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். இதனால் நிச்சயம் நீங்கள் மன அழுத்தமடைவது தடுக்கப்படும்.

ஷிப்ட் வேலை

ஷிப்ட் வேலை

ஷிப் வேலையில் பணிபுரிபவர்களின் சர்க்காடியன் தாளம் அல்லது உடலின் உள் கடிகாரம் ஆகியவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கனடாவில் உள்ள மேற்கத்திய பல்கலைகழகத்தின் ஒரு ஆய்வில், இரவில் அல்லது ஒழுங்கற்ற நேரங்களில் வேலை செய்வது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

தீர்வு

தீர்வு

உங்களால் ஷிப்ட் வேலையைத் தவிர்க்க முடியாவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் தேர்வுகளான சீரான உணவை உண்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது போன்றவற்றை மேற்கொள்ளுஙகள். அதோடு வழக்கமான பரிசோதனைகளுக்கு உங்கள் மருத்துவரை அவ்வப்போது சந்திப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

பல் பிரச்சனைகள்

பல் பிரச்சனைகள்

ஈறு நோய்களைக் கொண்டவர்களுக்கு இதய நோயின் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஆராய்ச்சியாளர்களுக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் ஈறுகளைத் தாக்கிய பாக்டீரியா இரத்த ஓட்டத்தின் வழியே உடலினுள் நுழைந்து, அதன் விளைவாக இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் பிற இதய பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர்.

தீர்வு

தீர்வு

உங்கள் ஈறுகள் சிவந்தோ அல்லது புண் இருப்பதைக் கண்டாலோ, உடனே ஒரு பல் மருத்துவரை அணுகுங்கள். உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். இதனால் ஆரம்பத்திலேயே அனைத்து பிரச்சனைகளையும் தடுத்திடலாம்.

தொப்பை/வயிற்றுக் கொழுப்பு

தொப்பை/வயிற்றுக் கொழுப்பு

வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு தேங்குவது மிகவும் அபாயகரமான ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றுக் கொழுப்பு உடலில் உள்ள ஹார்மோன்கள் மற்றும் பிற கெமிக்கல்களைத் தூண்டிவிட்டு, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், இரத்த நாளங்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளில் எதிர்மறையாக விளைவை உண்டாக்கும். ஐரோப்பிய இதய பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்த ஆய்வில், வயிற்றுப் பகுதியில் குறைவான கொழுப்புள்ளவர்களை விட, அதிக கொழுப்புள்ள பெண்களுக்கு 91 சதவீதம் இதய நோயின் அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

தீர்வு

தீர்வு

ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு உங்கள் மருத்துவரிடம் அல்லது சுகாதார வல்லுநரிடம் பேசி, உங்கள் உடலுக்கான சிறப்பான டயட் மற்றும் உடற்பயிற்சி திட்டத்தைக் கேட்டு பின்பற்றுங்கள்.

போதுமான தூக்கமில்லாமை

போதுமான தூக்கமில்லாமை

எப்போது ஒருவர் 6 மணிநேரத்திற்கும் குறைவான தூக்கத்தை மேற்கொள்கிறாரோ, அவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கான அபாயம் அதிகம் உள்ளது. மேலும் போதூமான தூக்கம் கிடைக்காமல் போகும் போது, அது உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.

தீர்வு

தீர்வு

தினமும் குறைந்தது 7-8 மணிநேர தூக்கத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, உடலுறுப்புக்களும் ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிக்கும். குறிப்பாக இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Things That Can Trigger A Heart Attack In Tamil

Here are some surprising things that can trigger a heart attack in and steps to keep you fit and healthy in tamil.