For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு மற்றும் இதய நோயை வரமால் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

|

உலக சுகாதார அமைப்பு (WHO) படி, இருதய நோய்கள் மக்களிடையே மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது உலகெங்கிலும் உள்ள மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாகும். வயதானவர்கள் இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகையில், சமீப காலமாக, இளைஞர்களிடையே மாரடைப்பு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நவீன வாழ்க்கை முறையில் இளம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பு வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கம் காரணம் என்று பல நிபுணர்கள் மற்றும் பல ஆய்வுகள் கூறுகின்றன.

Lifestyle Habits To Keep Your Heart Healthy

சரியான தேர்வுகளை மேற்கொள்வது, சரியான உணவைப் பின்பற்றுவது மற்றும் ஆரோக்கியமான நடத்தைகளை நாடுவது ஆகியவை நீண்ட காலத்திற்கு உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே, இருதய நோய்களைத் தடுக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்

இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்

இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் அளவுகள் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

MOST READ: ஒரு மாதத்துல நீங்க இவ்வளவு உடல் எடையை குறைப்பதுதான் நல்லதாம்...அதுக்கு மேல குறைக்கக்கூடாதாம்!

சிக்கலை ஏற்படுத்தும்

சிக்கலை ஏற்படுத்தும்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டிற்கும் குறிப்பிட்டு சொல்லும் அறிகுறிகள் இல்லை என்றாலும், சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது நீண்ட காலத்திற்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால்தான் ஆரம்பகால நோயறிதல் மேலும் சிக்கல்களைத் தடுக்க உதவும். இரத்த அழுத்த மானிட்டர்களின் உதவியுடன் கிளினிக்கிலோ அல்லது வீட்டிலோ இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கலாம். அதேசமயம் உங்கள் கொலஸ்ட்ராலை இரத்த பரிசோதனை மூலம் பரிசோதிக்கலாம்.

உட்கார்ந்த வாழ்க்கை முறை

உட்கார்ந்த வாழ்க்கை முறை

உடல் ரீதியாக செயலற்ற முறையில் இருப்பது உங்கள் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். அன்னல்ஸ் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய நோய், டைப் 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட சுகாதார நிலைகளுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. எனவே, வழிகளை மாற்றி, உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது. நீங்கள் எப்போதும் மெதுவாகத் தொடங்கலாம். படிப்படியாக உங்கள் உடற்பயிற்சி நேரத்தை அதிகரிக்கவும், நிலைத்தன்மையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு

இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு

டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்பு பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை (LDL) உயர்த்துவதன் மூலமும், உங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை (HDL) குறைப்பதன் மூலமும் உங்கள் தமனிகளைத் தடுக்கிறது. இது உங்கள் இதயத்தை பல வழிகளில் பாதிக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும்.

MOST READ: இந்த சூப்பர்ஃபுட்டை நீங்க அதிகமா சாப்பிடும்போது உங்க ஆரோக்கியத்தை அது எப்படி பாதிக்கும் தெரியுமா?

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

நாம் எடை இழப்பு பற்றி பேசும் போது, அது எப்போதும் அழகை முன்னிறுத்தி இருக்கக்கூடாது, உண்மையில், அது உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவதாக இருக்கக்கூடாது. மாறாக, ஒருவர் உடல் பருமனைத் தடுப்பதில் கவனம் செலுத்துவது அவர்கள் உடல்நலனில் அக்கறை வேண்டும். இது இருதய நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதாவது, ஒருவர் தங்கள் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) கணக்கிட்டு அவர்கள் எங்கு நிற்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உங்கள் உணவு முறையை சரிபார்ப்பது அவசியம்.

மது அருந்துதல், புகைப்பிடித்தல், மன அழுத்தம்

மது அருந்துதல், புகைப்பிடித்தல், மன அழுத்தம்

கூடுதலாக, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உங்கள் இதயத்தை எதிர்மறையாக பாதிக்கும். இவை உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்கின்றன. இது உங்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதைத் தவிர, அதிக மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது உங்கள் இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மன அழுத்தத்தை குறைக்க மற்றும் நிர்வகிக்க யோகா அல்லது தியான பயிற்சிகளை முயற்சிக்கவும். இது சிறந்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களை நல்ல நிலை மற்றும் மன அமைப்பிலும் வைத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lifestyle Habits To Keep Your Heart Healthy in Tamil

Here we are talking about the Lifestyle Habits To Keep Your Heart Healthy.
Desktop Bottom Promotion